DIRECTOR-- CHITRALAYA GOPU
இயக்குனர்: சித்ராலயா கோபு
இயக்குனர் ஸ்ரீதரின் தோழன் 5 ம் வகுப்பு முதல் இறுதிவரை.
இயற்பெயர்-- T A சடகோபன்.
எழுத்துலகில் நன்கு அறியப்பட்ட திருமதி கமலா சடகோபன் இவரது மனைவி.
நகைச்சுவை வசனம் தீட்டுவதில், கோபுஅலாதி திறமை சாலி.
மிகுந்த பண்பாளர் டிபிகல்ஐயங்கார் [பூர்விகம் செங்கல்பட்டு வட்டாரம்] கல்லூரிப்படிப்பு காரைக்குடியில் , இயக்குனர் சீவி ராஜேந்திரன் , எம் எஸ் வி, மற்றும் ஸ்ரீதர் குழுவினரின் ஏகோபித்த முக்கியஸ்தர்.
கதாநாயகியாவே தான் நடிப்பேன் என்று விரதம் பூண்டிருந்த சச்சு மற்றும் அவரது பாட்டியை லாவகமாக நம்ப வைத்து காதலிக்கநேரமில்லை படத்தில் சச்சு வை நாகேஷுடன் ஜோடியாக நடிக்க வைத்த வித்தகர் திருவாளர் கோபு அவர்கள், இப்போதும் சச்சு சொல்லி சொல்லி சிரித்து மகிழ்வார். ஸ்ரீதர் நினைப்பதை சொல்லாமலே ஊகிக்கும் திறனாளி, பழகுவதற்கு மிக இனிமையானவர். தேர்ந்த இசை ஞானம் உள்ளவர். அவர் இயக்குனராகவும் வலம் வந்தவர் . அவர் தந்த சில பாடல்கள் நமது இன்றைய பதிவில் இடம் பெறுகின்றன.
ஆண்டவன் தொடங்கி [காசே தான் கடவுளடா] 1972 , வாலி, இசை எம் எஸ் வி குரல்கள் :எம்எ ஸ் வி, வீரமணி, ஏ எல் ராகவன்
நிறைந்த கெடுபிடி உள்ள வீட்டில் ஏராளமான சொத்து இருந்தும் ,கையேந்தி
பிழைக்கும் நிலை. ஒத்த அவலத்தில் நண்பர்கள் காசின் மகிமை குறித்து பார்க்கில் பாடும் காட்சி. எம் எஸ் வீ யே பாடலை முன்னிறுத்தி ப்பாட , வீரமணி , ஏ எல் ராகவன் தொடர்ந்து பாடி ஆடுகிறார்கள். தேங்காய் சீனிவாசன், டீக்கடைக்காரர் என்பதால் சென்னைத்தமிழில் அவ்வப்போது ஏ எல் ராகவன் பாட கேட்கலாம் . இணைப்பு இதோ
https://www.google.com/search?q=aandavan+thodangi+video+song&oq=aandavan+thodangi+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRigATIHCAQQIRigATIHCAUQIRigATIHCAYQIRiPAtIBCTYyMTg0ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive kasedhaan vali msv veeramani al
raghavan 1972
மறந்தே போச்சு [அ த்தையா மாமியா 1974] வாலி, எம் எஸ் வி,
எஸ் பி பி எல் ஆர் ஈஸ்வரி
அந்நாளில் இளமையின் சின்னம் எஸ்பிபாலசுப்ரமணியன், எல் ஆர் ஈஸ்வரி யுடன் பாடிய டூ யட் , மிகுந்த நெளிவு சுளிவுகளுடன் அமைந்த பாடல். வானொலியில் , மைக் செட் கடைகளில் முழங்கிய பாடல் கேட்டு மகிழ இணை ப்பு இதோ
https://www.google.com/search?q=athaiyaa+maamiya+movie+song+marandhe+pochu+video&oq=athaiyaa+maamiya+movie+song+marandhe+pochu+video+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgcIBRAhGI8C0gEJMjc1NDVqMGo0qAIAsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:e438373e,vid:VKfLkVxFFdE,st:0 maranthe pochu 1974 vaali msv spb
lre
ஜம்புலிங்கமே ஜடாதரா [ சே தான் கடவுளடா-1972] வாலி, வீரமணி , கோவைசௌந்தராஜன் , தாராபுரம் சுந்தர்ராஜன் .
டீக்கடைக்காரனை பெரிய ரிஷிபோல் காட்டி , பதுக்கிவைத்துள்ள செல்வத்தை சிறிதேனும் அபகரிக்க நண்பர்கள் திட்டத்தில் , தேங்காய் தான் ஸ்வாமி சுக்ரானந்தா , பிறர் உடன் பாடும் பாடகர்கள் .
பல்லவி இறைவன் திருநாமம் போல் அமைந்தாலும் அவ்வப்போது டீக்கடை மொழி வெளிப்பட ஒரே திகில் கிளப்பும் வாலியின் சொற்கோர்வை. ஆயினும் பாடல் பஜனை வகைபோல் ஒலித்தாலும்,இசைக்கருவிகள் முற்றாக மேல்நாட்டு வகையின. வரிக்கு வரி தவறாகப்பாடும் தேங்காய்
, அதை திருத்திப்பாடும் முத்துராமன் , பக்திப்பரவச வரவாக வாதிராஜுவின் பிரவேசம் அனைத்திலும் ஹிப்பி இசை , சுருளிராஜன்,வெ . ஆ மூர்த்தி யின் பக்திப்பிழம்பான அமைதி என பாடல் ஒரே தூள் . கேட்டு மகிழ இணைப்பு
https://www.google.com/search?q=jambu+lingane+jadadhara+video+sng&oq=jambu+kingane+jadadhara+video+sng+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigAdIBCTIzMDQ0ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:09fbc220,vid:4-hCPTsrpmg,st:0
kasedhan kadavulada vali veramani kovai sounder, dharapuram sundar rajan
மெல்லப்பேசுங்கள் [ காசேதான் கடவுளடா-1972 ] வாலி, எம் எஸ் வி ,குரல்கள் கோவை சௌந்தரராஜன், எல் ஆர் ஈஸ்வரி .
குறைந்த பொருட்ச்செலவில் ஆனால் சிறப்பாக ஒளிப்பதிவு [திரு பாஸ்கர்] செய்யப்பட்டு பாடலில் தந்திரக்காட்சிகள் பரிமளிக்கின்றன. அதிலும் நடிகார்கள் இரு ஜோடிகளாக -சிறிதும் பெரிதுமாக வெவ்வேறு அமைப்புகளில் தோன்ற , அன்றைய வியப்பு . ஈஸ்வரியின் அதட்டலான "பிறர் கேட்கக்கூடா
து வில் வரும் 'து' வாய் மீது விரலை வைத்து மிரட்டும் வகை கட்டளை யாக 'து' என்பதை கவனியுங்கள் பாடலில் ஈஸ்வரியின் பங்களிப்பு வெகு நேர்த்தியானது -நன்கு கவனியுங்கள் . பாடலுக்கு இணைப்பு இதோ
இப்பாடல்கள் கோபுவின் இயக்கத்தில் விளைந்தவை .
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment