Tuesday, February 4, 2025

LET US PERCEIVE THE SONG -8

 

LET US PERCEIVE THE SONG  -8

பாடலை உணர்வோம்-8

Nnaan unnaicherndha selvam [kalaikoil-1964]

நான் உன்னைச்சேர்ந்த செல்வம் [கலைக்கோயில்-1964 ]

கவிஞர் கண்ணதாசன், விசுவநாதன் -ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ், பி சுசீலா 

                                                      1964

நான் பலமுறை வலியுறுத்தி வந்த தமிழ்திரையின் மிகப்பெரும் பாடல் ஆண்டு ஒன்றை தேர்வு செய்யச்சொன்னால் உடனே 1964ம் ஆண்டினை சற்றும் தயங்காமல் குறிப்பிடுவேன்.

எண்ணற்ற படங்கள், ஒவ்வொன்றிலும் 8-10 பாடல்கள், அனைத்தும் வேறுபட்ட, மாறு பட்ட தோற்ற அமைப்புகள், எனினும் 95% க்கு குறையாமல் வெற்றிகண்டு இன்றும் முழங்கிக்கொண்டிருப்பன. ஆக, சிறந்த பாடல்கள்/படங்கள் என பார்க்கப்போனால் 1964 ம் ஆண்டினை புறக்கணிக்கவே இயலாது.அந்த குறிப்பிட்ட ஆண்டில் தமிழ் சினிமாவின் விஸ்வரூபத்தோற்றம் தனியாகவே பேசப்படும் அளவிற்கு, தகுதியும் தகவலும் நிறைந்தது. அதற்கெனவே- ஒரு பதிவை வெளியிட்டாலும் தவறல்ல.

இன்றைய இளைய தலைமுறை உண்மை அறியாமல் ஏதோ தமிழ்நாட்டில் ஹிந்திப்பாடல்கள் கேட்டு தான் பொழுது புலர்ந்தது எனும் அளவிற்கு பிதற்றுவதைப்பார்த்தால் என்ன துணிவில் பேசுகிறார்கள் என்ற ஆய்வுக்கு வழி பிறக்கும். உடனே தோன்றும் விளக்கம் -அறியாமையின் உளறல் இது என்பது தான்.

உளறல்களை விலக்கி விட்டு உண்மைக்குள் நுழைந்தால் வண்ணப்படங்கள் தமிழில் பெருவாரியாகக்களம்  காணத்துவங்கியது , ஜெமினி நிறுவனத்தாரின் வண்ணப்பட செயலாக்கக்கூடம் [கலர் லேப்] ரசிகர் கள்/ தயாரிப்பாளர்கள் அனைவரையும் ஈர்த்ததும் [1964] இவ்வாண்டிலிருந்து தான்                                    [உபயம்: காதலிக்க நேரமில்லை]

இவ்வளவு சிறப்பு கண்ட 1964 இல் வெளிவந்த படம் "கலைக்கோயில்".  பாடலில் உச்சமும் , வசூலில் வீழ்ச்சியும் கண்ட படம்.. நல்ல கதை அம்சம் கொண்ட படம் , காலத்திற்கு முந்தைய [ahead of times ] என்ற பெருமையும் அதனாலேயே வசூலில் தோல்வியும் அடைந்தது.

நமது களம் பாடல்

நான் உன்னைச்சேர்ந்த செல்வம் [கண்ணதாசன்] வி ரா , பிபி ஸ்ரீனிவாஸ், பி சுசீலா குரல்கள்

கவிஞரின் வளமான சொல்லாடல், மங்கலமான கவிதை, இறுதியில் சிலேடை நிறைந்த மங்களம் -இது பாடலின் சிறப்பு. இந்தக்கவி நினைத்தவுடன் பாடும் வானம்பாடி, இலக்கியம் இவன் எண்ணத்திலும், இசைச்சந்தம் இவன் சொற்கட்டிலும் இருத்தல்  நாம் செய்த பாக்கியம்.

மிகவும் மென்மையான கருத்துப்பதிவு , பாடல் நெடுகிலும் தேர்ந்த சொற்களின் வியாபகம் , கவிஞரின் ஆளுமை கருத்திலும் சொல்லிலும் விரவிப்படர்வதைக்காணலாம். 

அதிலும் இப்பாடல் ஒரு தனி ரகம் இதே படத்தின் பல ஆர்ப்பாட்டங்களுக்கிடையே அமைதியாய் மலர்ந்த ஒற்றை டூயட் வகைக்கவிதை.

முதலில் பாடல் . பல்லவியில் இருவரின் நிலைப்பாடு வெளிச்சம்

"நான் உன்னை சேர்ந்த செல்வம் , நீ என்னை ஆளும் தெய்வம்

இனி என்ன சொல்ல வேண்டும் , நம் இளமை வாழ வேண்டும்"  சிறிய ஆனால் சீரிய கருத்து

சரணம் 1

நம் காதல் உள்ளம் கலைக்கோயில், இரு கண்கள் கோயிலுக்கு வாசல்,

நமதாசை கோயில் மணி ஓசை, அதில் அன்பு வண்ண மலர் பூஜை, அதில் அன்பு வண்ண மலர் பூஜை,

பல்லவி

சரணம் -2

ஸ்ரீ ராமன் நெஞ்சில் நின்ற சீதை , மலர் கண்ணன் தேடிக்கொண்ட ராதை ,

மனம் உருகி சூடித் தந்த கோதை, ஒன்று சேர்ந்து வந்தது இந்தப்பாவை

பெண்

உன் விரல்கள் என் அழகை மீட்டும், உன் விழிகள் என் உயிரை வாட்டும் [நாயகன் வீணை இசைப்பவன் என்பதை உணர்த்தும் சொற்கள்]

உன் குரலும் என் பெயரை கூட்டும் அதில் கோடி கோடி இன்பம் காட்டும்,   அதில் கோடி கோடி இன்பம் காட்டும்

பல்லவி

சரணம் -3

உன் அச்சம் நாணம் என்ற நாலும் [4]

என் அருகில் வந்தவுடன் அஞ்சும்  [5]

இதழ் பருகும் போது நெஞ்சம் ஆறும்  [6]

அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்   [7]

அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்   [7]

இறுதி பல்லவியில் இரு குரல்களும் இணைந்து ஒலித்த பின் இசைக்கருவிகள் மெல்ல அடங்க கண்ணெதிரே இருந்த இன்பம் மறைந்த உணர்வு தரும் இப்பாடல்

https://www.google.com/search?q=naan+unnai+cherndha+selvam+video+song&newwindow=1&sca_esv=bd997e1f421b6b7e&sxsrf=ADLYWIIHmO2FbU76TPE6OYMztTC75eNopA%3A1736659277995&ei=TVGDZ52rPL_jseMP8Pa-iAY&oq=&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiACoCCAIyBxAjGCcY6gIyBxAjGCcY6gIyBxAjGCcY6gIyBxAjGCcY6gIyBxAjGCcY6gIyBxAjGCcY6gIyBxAuGCcY6gIyBxAjGCcY6gIyBxAjGCcY6gIyBxAjGCcY6gIyGhAuGIAEGNEDGOMEGLQCGMcBGOkEGOoC2AEBMhQQABiABBjjBBi0AhjpBBjqAtgBATIUEAAYgAQY4wQYtAIY6QQY6gLYAQ

இப்பாடலின் கவிதை நயம், இசை நயம், கருவிகள் குறித்த பிற தகவல்கள் வரும் பதிவில்..  அதற்கிடையில் பாடலை பலமுறை கேட்டு கிழ்வீர்

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. Your memory is phenomenal. The song by balamurali krishna is unforgettable. Thanks. RK

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG -30

 L ET US PERCEIVE THE SONG -30            பாடலை உணர்வோம் -30   ஜில் என்று காற்று வந்ததோ [ நில் கவனி காதலி -1969 ] வாலி , எம் எ...