P B SRINIVAS 3
பி பி ஸ்ரீனிவாஸ் -3
வாழ்க்கை படகு படம் பலருக்கு ஒரு வகையில் முதல் படம், விஸ்வநாதன் -ராமமூர்த்தி முதலில் ஜெமினியின் படத்தில், தேவிகா அதே நிறுவனத்தின் இதே படத்தில் இடம் பெற்றது, ஜெமினி யில் கண்ணதாசன் கவியாக நுழைவது இதே சூழலில் தான் ; அதாவது முதன் முதலில் ஆஸ்த்தான அமைப்புக்கு பெயர் பெற்ற நிறுவனம் அதில் இருந்து விடுபட்டு "வெளி ஆட்களை" கொணர்ந்தது 'வாழ்க்கை படகு' படத்தில் தான் .
சின்ன சின்ன கண்ணனுக்கு - 'வாழ்க்கை படகு' -1965 கண்ணதாசன் விஸ்வநாதன்
-ராமமூர்த்தி பி பி ஸ்ரீனிவாஸ்
உணர்ச்சி கொப்பளிக்கும் ம்காட்சி, குழந்தையை கொஞ்சி குதூகலிப்பதை ஒளிந்து மறைந்து ரசிக்கும் சூழல். முக்கிய திருப்பங்களை -இசையின் மாறுபாட்டில் உணர்த்திய விஸ்வநாதன் -ராமமூர்த்தி
பூப்போன்ற நெஞ்சிலும் முள்ளிருக்கும் பூமியடா
- எனும்
இடத்தில்
அதிரடி
இசை
ஆனால்
பாடல்
நெடுகிலும்
குழந்தைப்பருவத்தில் சிறப்புகளை பேசிய பாடல் கேட்டு மகிழ இணைப்பு இதோ
CHINNA
CHINNA KANNANUKKU VAAZHKAI PADAGU 1965 KD V R PBS
https://www.youtube.com/watch?v=7SFZMsP3Dak
இப்பாடலின் பிற சிறப்புகளை qfr விளக்க கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=qe89qnnFf-8 QFR 165
இப்படத்தில் காதல் உண்டு ஆனால் டூயட் இல்லை .
அப்படி ஓர் காவியக்கவிதை - நேற்று வரை நீ யாரோ நான் யாரோ [கண்ணதாசன் ] வாழ்க்கை படகு 1965 விஸ்வநாதன் -ராமமூர்த்தி பி பி ஸ்ரீனிவாஸ்
இது கவிஞனின் காவிய திறமைக்கு உரை கல். காதலன் காதலியை நீ ஏன் நாணிக்கிடக்கிறாய் என்று புலமை மேலோங்கிய சொல்லில் கேட்கிறான். நாயகி முக பாவம் காட்டி நடிக்க கிடைத்த வாய்ப்பு. தேவிகா ஜாமாய்த்துவிட்டார் -ஒவ்வொரு வினாடியும் மாறிக்கொண்டே போகும் நாணம் , ஆவல், புன்னகை என்று உணர்வுகளுக்கு களம் தந்த பாடல் . பி பி ஸ்ரீனிவாஸ் சிறப்பாக பாடியுள்ளார் . கவிஞர் திருவள்ளுவரின்
யான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்" என்ற திருக்குறளை நினைவில் வைத்திருப்போர் மிகச்சிலரே. ஆனால், "உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே" என்ற வரிகளை நினைவில் வைத்திருப்போர் ஏராளம் ஏராளம்.
குறளில் இருந்து உள்ளார்ந்த நாடியை பிடித்து இப்பாடலில் அமைத்து ஒரு உன்னத இடத்தை திரையில் அமைத்து கொடுக்க, விஸ்வநாதன் ராமமூர்த்தி மகோன்னத இசை வழங்கி செய்த புரட்சி இப்பாடல்
netru
varai nee yaro
https://www.youtube.com/watch?v=hJVHq886BOE v p 1965 kd vr pbs
1966
ல்
மோட்டார்
சுந்தரம்
பிள்ளை
படத்தில்
வாலி
எழுதிய
" காத்திருந்த கண்களே " ஒரு மகோன்னத டூயட். பி பி ஸ்ரீனிவாஸ் , சுசீலா குரல்களில்
இசையின் தரத்தினை மேம்படுத்தும் விதமாக பிருந்தாவன் தோட்டத்தில் அமைந்த காட்சி , இளம் நடிகர்கள் ஜெயலலிதா -ரவிச்சந்திரன் இனைந்து நடித்த சுவையான பாடலின் அன்றைய வெற்றி
ரசிக்க
இணைப்பு
https://www.youtube.com/watch?v=oRS_BNiuWcA kathirundha kangale M S Pillai 1966 VAALI msv pbs ps
இதே பாடலில் அமைந்த இசை அமைப்பின் கூறுகளை QFR பதிவில் இருந்து ரசிக்க இணைப்பு இதோ
வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment