Wednesday, February 19, 2025

A BHIMSINGH

A BHIMSINGH

.பீம்சிங்

1955 க்குப்பின் தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்பட்ட தயாரிப்பாளர் -இயக்குனர் திரு பீம்சிங் அவர்கள். மிகச்சிறப்பான குடும்பக்கதைகளை வழங்கி புகழ் எய்தியவர். திரு சிவாஜி கணேசனால் பீம்பாய் என்றே அழைக்கப்பட்டவர். சிவாஜி கணேசனின் அசுர வளர்ச்சியில் பீம் பாய் வழங்கிய '' வரிசைப்படங்களின் பங்களிப்பு சிறப்பானது.. திரு பீம்சிங் பற்றி இசையமைப்பாளர் விஸ்வநாதன் சொல்வது "பாடல்களின் உருவாக்கத்தில் குறுக்கிடமாட்டார் , பாடல்களை என் பொறுப்பில் விட்டு விடுவார் அதனால் எனக்கு சுமை அதிகம் ஆனால் ஆலோசனைகளை ஏற்பார்" பீம்சிங் படப்பாடல்கள் ஈட்டிய வெற்றியின் ரகசியம் இதுவே..

புகழ்பெற்ற திரையுலக ஒளிப்பதிவாளர் பி. கண்ணன் [பாரதிராஜா குழுவில்] மற்றும் பல படங்களை தொகுத்த எடிட்டர் பி .லெனின் இருவரும் திரு பீம்சிங் அவர்களின் புதல்வர்கள். மொத்தத்தில் திரையுலக ஜாம்பவான்கள் அடங்கிய குடும்பம். தமிழ் திரை வரலாற்றில் திரு பீம்சிங்கின் அத்தியாயம் முக்கியமானது. அவர் இயக்கத்தில் வெளிவந்த பாடல்களை காண்போம்     

அத்தான் என் அத்தான் [பாவ மன்னிப்பு -1961] கண்ணாதாசன் , விஸ்வநாதன் -ராமமூர்த்தி , குரல் பி. சுசீலா

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு பாடல் தோன்றி , இனிமேல் இந்தப்பாடலை வெல்ல இன்னொரு பாடல் வர இயலுமா என்ற கேள்வியை எழுப்பிக்கோலோச்சும் . அப்படி ஒன்று தான் அகில இந்திய அளவில் பி சுசீலா குறித்து பலரும் சிந்திக்க/ சிலாகிக்க  வைத்த "அத்தான் என் அத்தான் " பாடல் பாவ மன்னிப்பு படத்தின் நினைவலைகளை இன்றளவும் தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கும் நினைவலை இந்த பாடல் என்பதா , உரை யாடல் தரும் மயக்கம் மிக்க பெண்மன ஓட்டத்தின் உள்ளார்ந்த உணர்வுகளின் அதீத விரகத்தின் மென் குரல் என்பதா, கவிஞனின் பெண்மன உளவியல் விளக்கம் என்பதா , எப்படி சொல்லிப்பார்த்தாலும் நிறைவை எட்ட முடியாத பற்றாக்குறை , பற்றிக்கொண்டு ஒருபுறம் நம்மை சிதறடிக்க, மறுபுறம் நம் மனம் சிறகடிக்க ஒலித்த அமைதிப்பண் நம்மை அதகளம் பண்ணும் இசை விந்தை -என்னென்று சொல்லஇப்பதிவின் இறுதியில் பொது மக்களில் ஒருவர் இரண்டே வரியில் சொல்லும் கருத்து யுக மானாலும் நிலைக்கும் என்றே என் மனம் சொல்கிறது

போதும் நீயும் உன் மனமும் என்று சில அன்பர்கள் என் மீது கொண்ட வருத்தத்தை பாடல் மீது திணிக்க நினைக்கலாம்னால் இந்தப்பாடல் உனக்கும் பெப்பே ............ வகையை சேர்ந்த யுகாந்தியரப்பாடல்

ஆம். என்று கேட்டாலும் , இன்று தான் தோன்றிய முழுநிலவென மிளிரும் சொல் வரிசை, பொருள்மிக்க 'சொல்லாமலே விளங்கும் --எப்படி சொல்வேனடி"?    -கவிஞன் அன்றி வேறு எவனுக்கு வரும்வரிசைகட்டி வரும் '' த்தான்? எவரும் சிந்திக்காவண்ணம் மென் இசையின் சுழலில் இழுத்து சொருகி விட்ட விஸ்வநாதன், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று விஷ்ணுவின் பெருமைக்கு ஒரு தெய்வம் உண்டு  -அதன் வடிவாகவே சொன்ன வண்ணம் செய்த சுசீலா , எங்கே எங்கே என்று தேடிதேடித்தான் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் சரணங்களில்  புதைந்து சரணம் சரணம் என்று அடங்கி ஒலித்த தபலா [ஹனுமந்தப்பா] பாடலுக்கு தாளம் எதற்கு என்று புதிய அணுகுமுறையில் அமைந்த ஊனை உருக்கும் வகை - வலிக்காமல் தாக்கும் வித்தகம் -இசைக்கலைஞர் -மங்களமூர்த்தி யின்  அக்கார்டியன் கருவியின் தாங்கிப்பிடிக்கும் மென்மையான மேன்மையிலேயே மயங்கி துவண்டு பாடல் மெல்ல பள்ளி கொள்ள , க்ளாரினெட் தட்டியெழுப்ப விழித்துக்கொண்ட மனம் "ஏனத்தான் என்னை பார்த்தான் "என்று குதூகலிக்க இத்தகைய இசை மேன்மையை குத்தகை எடுத்தவன் இசை பிரம்மனே அன்றி  வேறு யார்உனக்காச்சு எனக்காச்சு என்றல்லவா உழைத்து பாடலுக்கு உழைத்துள்ளனர்./ இல்லை இல்லை பாடலைக்குழைத்துள்ளனர். இவன் தான் இதற்கு இசை வடிவம் தர வேண்டும் என்று இறைவன் சித்தம் போலும். வேறெப்படி சொல்ல? உனக்கு ரொம்ப தெரியுமோ? என்றொரு எதிர்ப்புக்குரல் முணுமுணுக்கிறது. பாடலின் பின்னணி அறிந்தோர் நிச்சயம் உடன் படுவர். உடன் படுவதையோ உபத்திரவப்படுவதையோ  நான் கவலைப்படவில்லை. இப்பாடலுக்கு உருவம்  எப்போதோ கவிஞனால் ஜனித்தது, வயாதானாலும்   . வேளை  வந்தால் தானே மாங்கல்யம் ? அப்படி ஒரு நிலையே இப்பாடலுக்கு -- நம்ப முடிகிறதா?        நடந்தது இதுதான்

கவிஞர் , கலைஞர் இருவரும் ரயிலில் பயணிக்க , பசி தீர்க்க உண்ட பொருள் பொறி கடலை . அதை மடித்திருந்த தாளில் ஒரு பாடல் "கல்லைத்தான் , மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பி த்தானா? [ இப்படி பசியில் வாட வேண்டியுள்ளதே எனும் பொருள் கொண்ட பாடல் ] இப்படி ஒரு பாடல் நீ எழுதி விடுவாயா ? என்று கலைஞர் கேட்கப்போக, உதித்தது தான் இந்த உளவியல் சார்ந்த அச்சம், நாணம் வகை உணர்வுகளும் ஒளிந்த , சொல்லாடல்.  அப்படியே உறங்கிக்கிடந்த பாடல் . 

கவிஞர் ஒரு நாள்

டேய் விசு நான் ஒரு பாட்டு வெச்சிருக்கேன் , ஒருத்தருமே  ட்யூன் போட்டுத்தரமாட்டேங்கறாங்கடா , நானும் பெரிய பெரிய இசை அமைப்பாளரையெல்லாம் கேட்டுட்டேன் . இது தாளத்துல உக்காராது -முடியாதுன்னுட்டாங்க.  நீயாவது போட்டுத்தாடா .

விசு : என்ன கிண்டல் பண்றீங்களா / பெரியவங்களே முடியாதுனு சொன்னதை குடுத்து வேலை செய்ய சொன்னா என்னால எப்படி முடியும் / வேண்டாண்ணே என்னை விட்டுருங்க .

டேய் -நீ ஏதாவது பண்ணுவன்னு தெரிஞ்சு தான் சொல்றேன் , ஏன்னா இந்தப்பாட்டு இப்ப எடுக்குற படத்துல பக்காவா பொருந்தும். ட்ரை பண்ணுடா என்றார் கவிஞர்.

விசு : அப்படியா , குடுங்கப்பார்ப்போம் என்று கையில் வாங்கி கவிதையை படித்து உள்ளார்ந்த விரகதாபம் அதுவும் ரெண்டு பெண்கள் மத்தியில் -பாடுவது ஒரு பெண். இதை நன்கு உள்வாங்கி செயலில் இறங்கினார். விசு.[ஒரு வேளை " தாளத்துல  உக்காரலை" னு சொன்னாங்களே] , தாளமே இல்லாம ஆரம்பிச்சுட்டா போச்சு என்று முடிவு செய்தார் போலும் , இப்பாடலில் பல்லவி எப்போது வந்தாலும், தாளம் இல்லை , சரணங்களில் தான் மென் தபலா ஒலி ; அதியற்புதமான பாடல் , நல்ல பெண்ணுக்கு உற்ற கணவன் போல அமைந்த இசை .

வயாதானாலும் .வேளை  வந்தால் தானே மாங்கல்யம் ? என்ற உவமை இறைவன் சித்தம் என்பதை இப்பாடலின் சூழல் உணர்த்துவதாக உணர்கிறேன். ஹிந்திப்பாடகி லதாமங்கேஷ்கர் , இப்பாடலுக்கு ஏங்கி பாவ மன்னிப்பு படத்தின் 16mm பிரதியை AVM செட்டியாரிடம் வாங்கிச்சென்றதுடன், இதை போன்ற பாடல்கள் கிடைக்குமெனில் நான் சென்னையில் தங்கிவிடுவேன் -பாடல்கள் பாட -என்று சொன்னது அந்நாளில் வெகு பிரசித்தம் . பாடலைக்கேட்டு 1961 இல் இப்படி ஒரு கற்பனையா என்று சிந்தியுங்கள். பாடலுக்கு இணைப்பு இதோ .

https://www.youtube.com/watch?v=J6a8_HC7gz4 aththaan pava mannippu 1961 KD V R PS MULTIPLE ISSUES BEHIND.

[ஒரு ரசிகரின் கருத்து  இதோ]    

ஒரே ஒரு பாட்டு ஒண்ணே ஒண்ணு காமிங்க இந்த மாதிரி.. இவ்வளவு டெக்னாலஜி வச்சிகிட்டு... திறமை திறமை திறமை...

தொடரும்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG-- 21

  LET US PERCEIVE THE SONG-- 21 பாடலை உணர்வோம் -21 PAATTU VARUM NAAN AANAIYITTAL VAALI MSV TMS PS நமது இன்றைய தேர்வு ஒரு ஆழ்ந்த ச...