Monday, February 17, 2025

LET US PERCEIVE THE SONG -10

 LET US PERCEIVE THE SONG -10

பாடலை உணர்வோம்-10

ரோஜா மலரே ராஜ குமாரி [வீரத்திருமகன் -1962] கண்ணதாசன் , வி--ரா , பி பி ஸ்ரீனிவாஸ், சுசீலா

டூயட் வகை இசையில் இப்பாடல் ஒரு புதுமையோ எனில் மிகை அல்ல. இதில் எண்ணற்ற புதுமைகள் அரங்கேறி ந்த நாட்களிலேயே பெரிதும் பேசப்பட்ட மாறுபட்ட அமைப்பும் அலங்காரமும் கொண்டது. கவியரசர் தேர்ந்த சொற்களால் உருவாக்கிய கவிதை ஒரு ஏழை அரசகுமாரியை காதலித்ததாக கதை அமைப்பு .. அனைத்தும் புதியவர்கள் [சச்சு இயக்குனர் திருலோகச்சந்தர் , தயாரிப்புக்குழு என அனைத்தும்]+ காட்சிக்களம் ஹொகே னே க்கல் ,

மலைப்பாறைகள் கீழே காவிரி ஓட்டம் பரிசில்கள், கொளுத்தும் வெய்யில் பாறையில் கால்  பொறிக்க  சூடு [சச்சு ஒரு பேட்டியில் புலம்பியுள்ளார்]-இதில் டூயட். . ஆயினும் அதீத வெற்றிகண்ட பாடல்

'ரோஜாமலரே ராஜ குமாரி" ஆசைக்கிளியே அழகிய ராணி அருகில் வரலாமா உறவும் முறைதானா என்று துவங்கி கண்ணதாசனின் சொல் ராஜ்ஜியம்   காதலையும் சொல்ல வேண்டும் கதையையும் சொல்ல வேண்டும், சொன்னாரே கவிஞர்.

அவளோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன், ராஜா  மகளின் காதல் தலைவன் , வாராய் அருகே மன்னவன் நீயே காதல் சமம் அன்றோ , பேதம் இலை யன்றோ , உண்மை இதுவன்றோ உலகின் நிலை அன்றோ [அச்சம் போக்குகிறாள்]

ன் நிலை மறவாத அவன்

"வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது. கோட்டையின் மீதே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது" [நீ -நீதான், நான், நான் தான் ] 

ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலருண்டு [ சரித்திர சுட்டிக்காட்டல் செய்கிறான் ]

அவளோ

 "மன்னவர் நாடும் மணி முடியும் ,மாளிகை வாழ்வும் தோழியரும்  பஞ்சணை சுகமும் பால் மண மும் படையும் குடையும் சேவகரும் , ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ ? [சுகங்களை துறக்கவைக்கும் காதலின் பெருமை பேசுகிறாள் ]

இறுதியில்

பாடும் பறவை கூட்டங்களே பச்சை ஆடை தோட்டங்களே    விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே , ஒன்றாய் கலந்தோம் ஓர் வழி கண்டோம் வாழிய காதல்      பாடுங்களேன் என்று இருவரும் பாடி நிறைவு செய்வதாக காட்சி..

பாடல் எத்துணை முறை   கேட்டாலும் சலிக்காது  அலுக்காது. இசை அமைய்ப்பின் தரமும் இசைக்கருவிகளின் ஒருங்கிணைப்பும் எம் எஸ் வி வகை முத்திரை. அதிலும் 'ஹோய்' துவங்கியது இந்தப்பாடலில் தான் மற்றும் துவக்க ஹம்மிங் . குழல் இசையின் துவக்கம் இரண்டும் பாடலை ஹைஜாக் செய்துவிட்டது. அதீத துடிப்புடன் வாசிக்கப்பட்ட மாண்டலின் [எம் எஸ் ராஜு] அந்நாளில் பெரிதும் வியந்து பேசப்பட்ட இசை நளினம்: மற்றும் போங்கோ லயம் வடித்த புதுமையான நடை அந்நாளில் அமைந்தக புதுமை சொல்லிக்கொண்டே போகலாம்.

இசையின் பிற தாக்கங்கள் விரிவாக பேசப்படவேண்டியவை பேசுவோம் . பேசுவோம்

பாடலை பல முறை  கேளுங்கள் சொல், குரல் இசை என பல வசீகரங்கள் ஒரேபாடலில். இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=pqgAS7mzZjA rojamalare

சுபஸ்ரீ தரும் விளக்கங்களுடன் பாடலைக்கேட்டு மகிழ்வீர். இதில் பாடும் திரு அரவிந்த் முகுந்தன் எனக்கு கசின் அதாவது எனது சித்தப்பாவின் பேரன் , நல்ல  பாடகன் , சில கன்னட மொழிப்பாடல்களை பாடியிருப்பதாக அறிகிறேன் .பாடலுக்கு இணைப்பு

https://www.google.com/search?q=qfr+song+roja+malare+rajakumari+mp3+download&newwindow=1&sca_esv=9fb25453c26e52bb&sxsrf=AHTn8zrw1YAWxoSVA4Ne7WcCBCK2NCaLUg%3A1739859842095&ei=gie0Z5fCBZ-WjuMPuqnF4Qw&oq=QFR+SOING+ROJAAMALA&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiE1FGUiBTT0lORyBST0pBQU1BTEEqAggAMgcQIxiwAhgnMgUQABjvBTIFEAAY7wUyBRAAG qfr

தொடரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. Listened to QFR.Your relative has done a wonderful rendition.

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG -30

 L ET US PERCEIVE THE SONG -30            பாடலை உணர்வோம் -30   ஜில் என்று காற்று வந்ததோ [ நில் கவனி காதலி -1969 ] வாலி , எம் எ...