Wednesday, February 12, 2025

MOONU PAAPPAAN [ true –no fiction]--3

 MOONU PAAPPAAN  [ true –no fiction]--3

மூணு பாப்பான் [கதையல்ல நிஜம் ] --3 

ஒரு ஆச்சரியம் எல்லா யானைக்கும் எல்லா 1ம் பாப்பான் களையும் தெரியும்  . அவர்களிடம் மிகுந்த கவனமும் மரியாதையும் செலுத்தும் , பல யானைகள் பங்கேற்கும் திருவிழாக்களில் இந்த  பண்பினை யானைகளிடம் காணலாம். கேரள கோயில் வைபவங்களில் 15 -20 யானைகள் வரிசை கட்டி நிற்கவைக்கப்படும். உயரமான யானை நடுவிலும் , படிப்படியாக குட்டை யானைகள் இரு பக்கங்களிலும் நிறுத்தப்பெற்று அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக நிற்கும். நடுவில் நான் தான் நிற்பேன் என்று 2, 3 யானைகள் அடம் பிடிக்கும்.  ஏனெனில் அதன் மீது தான் தெய்வத்திருவுருவம் சுமந்து கொண்டு நம்பூதிரி அமர்வார். அந்த கௌரவம் தனக்குத்தான் என்று நெடுமாறன் என நிமிர்ந்து நிற்கும் யானைகள் ஆசைப்படும். அப்போதெல்லாம் 'பாப்பான்கள்' பாடு திண்டாட்டம் தான் . மிகவும் கவனமாக இருப்பார்கள் ஏனென்றால் செண்டை மேளம் , வாண  வேடிக்கைகள்  அதிர நான்குபழக்கப்பட்ட யானை கூட திடீரென்று ஓடத்துவங்கி , முதுகில் எறிய ஒருவன் பாக்கி இல்லாமல் , கோரமாக குதித்துக்கீழே தள்ளி , பெரிதாகாப்பிளிறிக்கொண்டு மலைபோல் போடும் . பாவம் பாப்பான்கள் , கூடவே ஓடுவார்கள் , ஆனால் எச்சரிக்கையாக நடந்துகொண்டு ஒரு 1/4 மணி நேரத்தில்யானை கட்டுக்குள்  வந்துவிடும். அந்த யானைக்கு அந்த ஆண்டு அந்த திருவிழா அவ்வளவு தான் , மீண்டும் வரிசைக்கு கொண்டுபோக மாட்டார்கள்.. இதுபோன்ற யானையின் கோர தாண்டவ தருணங்களில் 2ம் 3ம் பாப்பான்கள் சாமர்த்தியமாக நடந்து கொண்டு , இரு பின்னங்கால்களிலும் வலுவான கயிறை மாட்டி 15 , 20 அடிக்கு அப்பால் 10, 20 பேர் பிடித்துக்கொண்டு யானையை ஓட விடாமல் இழுத்துப்பிடிப்பார்கள். அந்த குமுறல் யானைகள் சுற்றிசுற்றி திரும்பும் ஆனால் பின்னல் இழுப்பவர்களை கண்டு கொள்ளாத. மன நிலை யில் இருக்கும். 1ம் பாப்பான் அப்போதும் யானையின் முன் பகுதியில் சற்று பாதுகாப்பாக நின்று கொண்டு  மிரட்டி அடக்கப்பார்ப்பான். ஆனால் யானை கோபம் கொண்டு நிற்கும் , எனவே மெல்ல யானையை அணுகுவான் பாப்பான் நம்பர் 1. சில சமயம் ஐயோ இவன் நம்பர் 1 ஆயிற்றே என்று யானை சற்று கட்டுப்படும். சிலர் யானையின் மீது தண்ணீர் தெளித்து அதனை குளிர்விப்பார்கள். யானை உலுக்கி கீழே விழுந்த நபர்கள் தலை தெறிக்க ஓடி உயிர் பிழைப்பார்கள். பின்னங்கால் கயிறு மாட்டி அடக்கும்வித்தை தான்   கை கொடுக்கும். அதனால் 2ம் 3ம் பாப்பான்கள் தயாராக நீண்ட கயிறுகளை எப்போதும் கொண்டு வருவார்கள்.            

https://www.youtube.com/watch?v=F5RWCpCBmHk               

  கயிறை ப்பூட்டி , 2ம்/3ம் பாப்பான் மறுமுனையை நீண்ட தூரத்திற்கு எறிந்து விடுவான். பல பையன்கள் உடனே கயிரைப்பிடித்து இழுத்து யானையை ஓட விடாமல் நிறுத்துவர்.. பெரும் பாலும் யானை அதன் பிறகு ஓடி விட்டதாக நிகழ்வுகள் இல்லை. பெரும்பாலும் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று எண்ணி யானை  ரகளையில் ஈடுபடுவது கேரளாவில் பல நிகழ்வுகளில் அரங்கேறும். கத்தியைக்காட்டி போலீசை மிரட்டும் ரவுடிகளுக்கு போலீசார் நடுங்குவர், ஆனால் பாகன்கள் யானையை விட்டு விட்டு அகலுவதே இல்லை. அவர்கள் விலகிவிட்டால் பொதுமக்களுக்கு பேராபத்து. இப்போது சொல்லுங்கள் 'பாப்பான்கள்' எவ்வளவு தேவை என்று.    இன்னொன்று-- கேரளா கோயில் யானைகள் ஆசியும் வழங்குவது இல்லை பாப்பான்கள் காசும் வாங்குவதில்லை . இவ்வளவு முக்கியத்துவம் உள்ளது யானை 'பாப்பான்'களுக்கு.

யானையின் சிறப்பே 'பாகனின் சொல்லை கேட்டு உடனே புரிந்து கொண்டு செயல் படுவது'. தான் அதனால் குச்சியும் தொரட்டியும்   தற்காப்புக்கருவிகளே அன்றி பெரும்பாலும் பயன்படுத்தவேண்டியதில்லை. யானைக்கும் அது நன்றாகவே தெரியும். ஒரு சில குறியீடுகள் சொன்னாலே உட்காரும், நம்பூதிரி முன்புறக்கால் வழியே ஏறி அமர்வார். 2ம் 3ம் பாப்பான்கள் பின்னங்கால் வழியே ஏறி வாலைப்பற்றிக்கொண்டு முதுகில் அமர்வர் இறங்குவதும் பின்னங்கால் வழியே தான்.

தனக்கான மட்டைகளை சுமந்து செல்லும் பழக்கம் எல்லா யானைக்கும் உண்டு. அதனால் தான் யானை-செயல்   .படமொழி தேவை

ஹிந்தி உருது மலையாளம் இவையே இந்தியாவில் யானைகளை பழக்க உபயோகிக்கின்றனர்.  

சென்ற பதிவில் .....      என்ன குமுறி என்ன?  உங்களால் நான் சொல்லும் இடத்திற்கு[பாகன்கள்] அருகில் கூட நெருங்க முடியாது இந்த கட்டுரை முடிவில் உங்களால்  முடியுமா என நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள். என கேட்டிருந்தேன்

நிச்சயம் முடியாது

அன்பன்

ராமன் 

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -30

 L ET US PERCEIVE THE SONG -30            பாடலை உணர்வோம் -30   ஜில் என்று காற்று வந்ததோ [ நில் கவனி காதலி -1969 ] வாலி , எம் எ...