Sunday, February 9, 2025

SATIRE

 SATIRE

இந்த திங்கள் பகுதிக்கு

அன்புடையீர்

சென்ற பதிவின் இறுதியில் , ஏதேனும் குறிப்பிட்ட தலைப்பில் எழுதுத வேண்டுமெனில் தகவல் தெரிவித்தல் முயன்று பார்க்கலாம் என தெரிவித்திருந்தேன் . ஒரு blog அன்பர் சில தலைப்புகளை வழங்கியுள்ளார் . எனவே தலைப்பு தேடும் முயற்சியில் இருந்து தப்பித்தேன் ஆனால் தகவல் தேடும் கடமை வந்துலள்ளது . பரவாயில்லை ; நீண்ட ஆசிரியப்பணியின் பின்புலம் இருப்பதனால் தகவல் தேடுதல் ஒரு மகிழ்ச்சியான பணிதான். எனவே கருத்தில் பிழை இருப்பின் அது எனது தகவல் திரட்டல் மற்றும் சொல்லாடலில் நிகழ்ந்துவிடக்கூடிய குறைபாடுகள் என்று மன்னித்து விடுங்கள்.

 எனது வேண்டுகோளை ஏற்று 5 வெவ்வேறு தலைப்புகளை முன்மொழிந்துள்ள திரு ரகுநாதன் தம்பதியினருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும்எனினும் தலைப்புகள் அடிப்படையில் கட்டுரைகள் பொருத்தமான நாட்களில் இடம் பெறும் ;அவை என்றென்று என இப்போதே அடையாளப்படுத்த இயலவில்லை.


SATIRE                                                             பரிந்துரைப்பு : RAGUNATHANS  .

சடையர்

‘Satire’ என்ற ஆங்கிலச்சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் என்ற நிலைப்பாடு கொள்ளுதல் கடினமே ஆனால் பொதுவாக நையாண்டி என்று எடுத்துக்கொள்ளலாம். இது போன்ற சொற்கள் அவற்றின் முக்கியத்துவம் பற்றி ஆய்வு செய்தால் இவை அனைத்தும் [சடையர் /நையாண்டி] மனித குலத்தின்   நீண்ட வரலாற்றில் மொழியை கையாளுவதில் ஒவ்வொரு சமூகமும் அல்லது கலாச்சாரமும் பெற்ற குறியீடாக -வளர்ச்சியின் பால் விளைந்த வெவ்வேறு மனமுதிர்ச்சி நிலைகளின் அங்கமாகவே பார்க்கப்படுவன..

அதாவதுநையாண்டி” / “சடையர்என்பது ஒரு பண்பாட்டின் குறியீடு என்றே விளக்கப் படுகிறது. வெகுவாக முன்னேற்றம் கண்ட மொழிகளில், சடையர் எனும் நையாண்டி   வெகுவாக பயன்படுத்தப்பட்டு -கிரிடிஸிசம் என்ற விமரிசனம் உயர் நிலைகளை எட்ட பயன்பட்டுவந்துள்ளது..

சடையர் [நையாண்டி] ஏன்?  

சடையர் எனும் விமரிசன உத்தியை அனைத்து எழுத்தாளர்களாலும் , வெற்றி கரமாக உபயோகிக்க இயலாது. மாறாக அந்த நிலைப்பாட்டினை மேற்கொள்ள, விமரிசகன் /எழுத்தாளன் பல்வேறு தகவல்களை உள்வாங்கி , எந்த நிலையிலும் தேவையான பொருத்தமான மேற்கோள்களை இயல்பாக உபயோகிக்கும் திறன் படைத்த எழுத்தாளராக இருந்தால்  சிறப்பாக பரிமளிக்க இயலும். அதனாலேயே சிலரை மட்டுமே சடையரிஸ்ட்  [நையாண்டி செய்பவர்] என்று அழைக்கிறோம். சடயரிஸ்ட் என்பவர் இயல்பான நகைச்சுவை உணர்வு கொண்டவராயின் அவர் வெகுவான ரசிகர்களை  /  வாசகர்களை ஈர்ப்பார்.

சரி சடையர் என்பது தான் என்ன ?

ஒரு கருத்தை அல்லது செயலை அல்லது ஒரு அரசியல் நடைமுறையை சுட்டிக்காட்டி திருத்த முனையும் நகைச்சுவை என்று விளக்கலாம். நிகழ்ந்துவிட்ட சம்பவத்தை ஒரு முக்கிய வாசகம் அல்லது சூளுரை யில் அமைந்த சொல்லை வைத்துக்கொண்டு 'நையாண்டி' செய்து அதில் ஒளிந்துள்ள மறைமுகமான தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுவதே சடையர்.

சடையர் எப்போது வேண்டுமானாலும் திடீரென்று அரங்கேறும், மேலும் அது யாரிடம் இருந்து எதற்கு தோன்றும் என்றெல்லாம் கணிக்க முடியாது. அந்த 'நையாண்டி' வெகு இயல்பாக சரியான தருணத்தில்   வெளி ப்பட்டு அந்தநொடியே பலரையும் கவரும்.

ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லலாம். இந்த நையாண்டி வகை நகைச்சுவை சில குறிப்பிட்ட வகை மாந்தர்களால் வெகுவாக பயன்படுத்தப்பட்ட ஒரு கூரிய கத்திபோன்ற உத்தி என்று அடையாளப்படுத்தலாம் . நையாண்டியின் முக்கிய சிறப்பு யாதெனில் , நையாண்டிக்கு விளக்கம் அல்லது மறுப்பு தெரிவித்து 'நையாண்டியால் மாட்டிக்கொண்டவர்' தனது நிலைப்பாட்டை நியாயப்படு\த்தவே இயலாது.  எனவே சடையர் என்பது வெவ்வேறு கால கட்டத்தில் வெகுவாக ரசிக்கப்பட்டு ஏற்கப்பட்ட வெகுஜன அங்கீகாம் பெற்று பெரும் வரவேற்பையும்  பெற்றது . 

ஆங்கில இலக்கியத்தில் நாடக ஆசிரியர் Shakespeare , தமிழில் நாடக ஆசிரியர் 'சோ'’ -ராமஸ்வாமி , இந்தியாவில் கேலிச்சித்திரக்கலைஞர் ஆர் கே லக்ஷ்மன் நன்கு அறியப்பட்ட சடைரிஸ்டுகள். அவர்களின் எழுத்து/ சித்திரம் உள்ளார்ந்த கோபத்தை வெளிப்படுத்தும் நகைச்சுவையுடன் சொல்லப்பட்டு, அவர்கள் ஏனையோரைக்கா டடிலும் விரைந்துக சிந்திக்கிறார்கள் என்ற பெருமையை அவர்களுக்கு ஈட்டி தந்தது என நாம் அறிவோம்

இன்னும் சொல்லப்போனால் அவர்களின் அணுகுமுறை satirical அட்டாக் [நையாண்டி த் தாக்குதல்] என்றே அறியப்பட்டது. ஏனெனில், குறைந்த சொற்களில் நிறைந்த தாக்குதல் என்பதாக வே நையாண்டி [satire ] உணரப்பட்டு வந்துள்ளது .  பின்வரும் வாசகங்கள் -பெரும் புகழ் பெற்றவை

ஜூலியஸ் சீசர் நாடகத்\தில் சீசரை முதுகில் குத்தியவர்களைப்பாத்து மார்க் ஆண்டனி கூறியது

"THESE ARE HONOURABLE MEN " [இவர்கள் மரியாதைக்குரியவர்கள்" ] என்று திரும்ப திரும்ப சொல்லும்போது உள்ளே பொதிந்துள்ள நையாண்டி மெல்ல வெளிப்படும். அது சொல்லப்படும் விதத்தில் மேலும் நையாண்டியின் தாக்கம் வலுப்பெறும்.

இதே போல ஒரு உள்ளே பொதிந்துள்ள கருத்தை நயமாக வெளிப்படுத்திய காட்சி திரைப்படத்தில் கண்டுள்ளோம். படம் : ஊட்டி வரை உறவு

வீட்டிற்கு தெரியாமல் பாலையாவின் கள்ள தொடர்பில் பிறந்த குழந்தை தகப்பன் [பாலையா]வீட்டிற்குள் வந்துவிடுகிறாள். [வீட்டில் வேறு எவரும் இல்லை, நான் இங்கு தங்கி வாழ உரிமை உள்ளவள், நான் வேறெங்கும் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள் ஒருத்தி.]. இதிலிருந்து  கவுரவமாக தப்பிக்க பாலையா ஒரே நொடியில் ஒரு கதையை உருவாக்கி அந்த பெண்ணிடம் யார் கேட்டாலும் இதையே சொல்ல வேண்டும் என்ற நிபந்தனை வைக்கிறார். பின் வரும் வாசகங்களை அழும் குரலில் பேசி அவளை ஒப்புக்கொள்ள வைக்கிறார் " உங்கப்பா நச்சினார்கினிய சிவன் , மனைவி இறந்த சோகத்துல ஷேத்ராடனம் செய்ய போகும் வழியிலே நீ பத்திரமா இங்க இரு னு உன்னை இங்கே விட்டுட்டு போயிருக்கார் " என்று சொல்லி இது கதை என்று மீண்டும் இது கதை என்று 2ம் முறை சொன்னதும் இது [கட்டு] கதை என்று நமக்கே புரியும். அதாவது ஒரே வாசகத்தை திரும்பத்த்திரும்ப சொல்லும்போது , அதன் உள்ளார்ந்த பொருள் வெளிவரும். அதையே தான், சட்டையரின் உத்தியாக வெளிப்படுத்துகின்றனர். 

பெரும்பாலும் சடையர் ஒரு நிகழ்வில் அமைந்த போலித்தனத்தை அப்பட்டமான ஏமாற்று வேலை என்ற நிலையை உணர செய்வதே.. மற்றுமோர் சமகால நிகழ்வு. தமிழக அரசியலிலுள்ள நடை முறை அணுகுமுறைகளை கிண்டல் செய்யும் விதமாக கதைகளை எழுதுவார் ‘'சோ'’. அதாவது கட்சியின் பெயரில்கூட, அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கினால் தான் ஒட்டு கிடைக்கும் என்ற தன்மையை விளக்க [அவர் எழுதிய கதை யில் ஒருவன் கட்சி துவங்குகிறான் . கட்சியின் பெயர் சுருக்கமாக "அ ஜி ரா கா கா க " என்றே சோ எழுதுவார் . அதாவது ண்ணா, ஜின்னா ராஜாஜி காந்தி காமராஜ் ழகம். ஒவ்வொரு பெயரும் சில வகை ஓட்டுகளை ஈர்க்கும் என்ற தென்னாட்டு அரசியல் மந்திரத்தை உள்ளடக்கியது. விரிவாக சொன்னால் கொள்கை கோட்பாடு எதுவும் இல்லை , ஒட்டு பிடிக்கும் உத்தியாக பெயர்கள் வைப்பதை நையாண்டி செய்தார் சோ. இவ்வாறாக சடையர் பல நாடுகளில் வெவ்வேறு சூழல்களில் நிகழ்ந்த சம்பவங்களை திறமையாக விமரிசித்து விழிப்புணர்ச்சியை தோற்றுவித்து சேவை செய்தன. அவற்றை செய்ய கூரிய மதியும்   அதிகார மிரட்டல்களை எதிர் கொள்ளும் உள்ளார்ந்த தெம்பும் சட்டங்களின் செயல்பாடுகள் பற்றிய தெளிவும் மிக அவசியம்.

எவ்வாறா யினும் 'சடையர்' குறித்து விவாதிக்க தூண்டுகோலாக உதவிய திரு ரகுநாதன் தம்பதியினருக்கு கோடானு கோடி நன்றிகள். குறைகளுக்கும் பற்றாக்குறைகளுக்கும் நானே பொறுப்பு . பொருத்தருள்வீர்

நன்றி

அன்பன் ராமன் 

 

1 comment:

THE ART OF SPEAKING-5

  THE ART OF SPEAKING-5   A lot depends on the speaker’s ability to make the best of an occasion. At this juncture, I feel it is my duty t...