Sunday, February 9, 2025

MOONU PAAPPAAN-2

 

MOONU PAAPPAAN  [ true –no fiction]--2

மூணு பாப்பான் [கதையல்ல நிஜம் ] --2

மூணு பாப்பான் னா கதையா கற்பனையா , இல்ல ஏதாவது டூபாக்கூர்          சமாச்சாரமானு, . சொல்லாமலா போகப்போகிறேன் --சொல்லுவேன் சொல்லுவேன் பொறுங்க .

இது கேரள கோயில்களில் உள்ள நடை முறை

ஆம் இந்த பாகன் களை கோயில் அல்லது வனத்துறை முகாம்களில் தான் பார்க்க முடியும். அவர்கள் முழு நேரமாக கோயில்கள்/ வனத்துறை முகாம்களில் உள்ள யானைகளை பராமரிப்பவர்கள் .யானையை பார்த்துக்கொள்வதால் "பாப்பான்" எனப்படுகின்றனர். இதில் சில முக்கிய தகவல்களை புரிந்து கொள்ள வேண்டும்.

1 ஒரு பாப்பான் குழு [1ம்,2ம் , 3ம் . பாப்பான் கள்] ஒரே அமைப்பாக ஒரு யானையைப்பார்த்துக்கொள்பவர்கள் . கிட்டத்தட்ட குருகுலம் போல பாகன் களும் யானையும் அன்றாடம் செயல் படுவர்.

2 ஒவ்வொரு யானைக்கும் பெயர் உண்டு அனைத்தும் இறைவன் பெயர்களே . அவர்கள் யானை குறித்த எந்த தகவலை தெரிவிக்கும் போதும் யானை இருக்கும் ஊர் அல்லது கோயிலின் பெயர்சேர்த்தே யானையின் பெயரைச்சொல்வர். [குருவாயூர் கேசவன், . தெச்சி கோட்டுக்காவு -ராமச்சந்திரன் [உயரமானவன் ] சீராக்கல்  காளிதாசன் , திருக்கடவூர் சிவராஜு [ரசிகர் பட்டாளம் உள்ளவன்], செருபுலசேரி- ராஜசேகரன், அனந்தபத்மநாபன் , புதுப்பள்ளி கேசவன் ,குருவாயூர்    

 வலிய கேசவன் [பழைய கேசவன் போன்றே இருப்பவன் ] பாம்பாடி -ராஜன் [கேரளத்தின் பெருமை]                

 மங்களங்குன்னு -ஐயப்பன் [சினிமாக்களில் பிரபலம் இவன்] இவை தற்போது கேரளாவில் முக்கிய யானைகள் .

கேரளா கோயில்களில் , பெரும்பாலும் ஆண் யானைகளையே உபயோகிக்கின்றனர் காரணம் -உயரம் கம்பீரம், தந்தம் . தந்தம் தான் கொம்பு எனப்படுவது . அதனால் ஆண்  யானைகள் கொம்பன் எனப்படுவதுகேரள நடை முறை. எந்தக்கொம்பனாலும் முடியாது என்ற வீரவசனம் கொம்பன் யானைகளைக்குறிப்பிடுவதுதமிழில் மனிதர்களுக்கு அடைமொழிபோல் ஆகிவிட்டது.

சரி எந்தக்கொம்பனாக இருந்தாலும் 3 பாப்பான் தான் பராமரிப்பவர்கள் .

1ம் பாப்பான்  [தலைவன்] யானையை கொம்பைப்பிடித்து அழைத்து வருபவன் , யானையுடன் நேரடியாகப்பேசி கட்டளை இடுபவன். , வேறு 2,ம்  3ம் பாப்பான்கள் யானையைத்தொட்டு இழுக்கவோ, அதட்டி கட்டளை இடவோ உரிமை இல்லை. ஆனால் யானையுடன் பழகி , குளிப்பாட்டி, கால்களில் சங்கிலி பிணைத்து, உணவு ஊட்டுதல் , முதுகில் ஏறி அமர்தல் , முக படாம் அணிவித்தல் போன்ற எல்லா பராமரிப்பும் செய்வர்.            1ம் பாப்பான் மைல் கணக்கானாலும் யானையுடன் நடந்தே வருவான் , முதுகில் எற மாட்டான் . அப்படி ஒரு வைராக்கிய கட்டுப்பாடு. யானைக்கும் 1ம் பாப்பானை தெய்வமென மதிக்கத்தெரியும்.. அதே போல யானைக்குச்சியும் [இரு முனைகளும் இரும்பு கம்பியினால் சுற்றப்பட்டிருக்கும்], தொரட்டியும் [அங்குசம்] 1ம் பாப்பானிடம் அல்லது யானையின் [தும்பிக்]கையில்  இருக்கும் 2ம். 3ம் பாப்பான்களிடம் சாதாரண குச்சி தான்  இருக்கும். அவர்கள் யானையுடன் பேசவோ அதட்டவோ மாட்டார்கள். 2ம், 3ம் பாப்பான்கள் யானையின் பக்கவாட்டில் 2, 3 வரிசையில் கூடவே நடந்து செல்வர். 1ம் பாப்பான் யானையின் முன் பகுதியில் தலையின் கீழே கொம்பைபிடித்தபடியே இழுத்துவருபவன். நொடியில் யானையை மிரட்டி அடக்கும் தொழில் தெரிந்தவன். தென் இந்தியாவில் யானைகள் பெரும்பாலும் மலையாள சொற்கள் கொண்டு பழக்கப்பட்டவை.

கேரள கோயில்களில் யானை பராமரிப்பு செலவுகள் அந்தந்த நிர்வாகத்தினரால் செய்யப்படுவன. அன்றாட உடல் பராமரிப்பு , எண்ணை பூச்சு , குளிப்பாட்டுதல் , இவற்றில் 3 பாப்பான் களும் சமமாக ஈடு படுவர்.

நெற்றி.காதுகள், வால் இவற்றில் பொட்டு வைத்தல்    1ம் பாப்பான் மட்டுமே செய்வார்.

மொத்தத்தில் சரியான பாப்பான்கள் இவர்கள். ஒவ்வொரு யானைக்கும் தனது 3 பாப்பான்களையும்  நன்கு தெரியும். வேறு எவரும் நெருங்கி எதுவும் செய்ய இயலாது.

To continue …

K.R

No comments:

Post a Comment

P B SRINIVAS 3

  P B SRINIVAS   3 பி பி ஸ்ரீனிவாஸ் -3 வாழ்க்கை படகு படம் பலருக்கு ஒரு வகையில் முதல் படம் , விஸ்வநாதன் - ராமமூர்த்தி முதலில்...