LET US PERCEIVE THE SONG -9
பாடலை உணர்வோம்-9
Nnaan unnaicherndha
selvam [kalaikoil-1964]-2
நான் உன்னைச்சேர்ந்த
செல்வம்
[கலைக்கோயில்-1964]-2
பாடலை சுமந்த
இசையா?
இசையை
சுமந்த
பாடலா
எனும்
தர்க்க
போராட்
டத்திற்கு
உகந்த
பாடல்.
பாடல் துவங்கியதும்
ஒலிக்கும்
குழல்
இசை,
பாடல்
படகில்
நிகழ்வதை
உணர்த்தும்
ஜாலம்.
அதே
போல
ஒவ்வொரு
சொல்லையும்
அடியொற்றி
வரும்
போங்கோ
தாளக்கட்டுகள்,
குழலும்
கிட்டாரும்
பின்னிப்பிணைந்து
முன்னேறும்
ஒலி அமைப்பும்
பாடலின்
விசேஷ
அலங்காரம்.
நான் மீண்டும்
மீண்டும்
வலியுறுத்துவது,
பாடலைக்கேட்கும்
அணுகுமுறைகளை
முற்றாக
மாற்றுங்கள்.
நமது
வழக்கமான
நடிக/
நடிகையின்
முகபாவங்களை
பாடலைக்கேட்கும்
முதல்
முயற்சியில்
நன்றாக
பின்பற்றி
மனத்தில்
பதித்துக்கொள்ளுங்கள்,
இரண்டாம்
முறை
பாடலைக்கேட்கும்
போது
கவிதையை
நன்றாக
உள்வாங்குங்கள்..
3 வது
முயற்சியில்
கவிதையையும்
நடிப்பையும் பிணைத்துப்பாருங்கள் அப்போது
புரியும்
பாடலின்
தாக்கம்
.
இந்த அணுகுமுறையில்
பாடலை
உள்வாங்கினால்,
பின்னர்
புரியும்
இது
வரை நாம் எண்ணச்சிதறல்
துணையுடன்
பாடல்
கேட்டுவந்துள்ளோம்என்பது.,
அதனால்
பாடல்
குறித்த்த
வாத
விவதங்களில் ஏதாவது கேள்வி
எழும்போது
ஐயோ
நாம்
இதை
கவனிக்கத்தவறிவிட்டோமே
என்று
வருந்துகிறோம்.
இவை அனைத்திற்கும்
காரணம்
ஒருங்கிணைந்த
பார்வை
இல்லாமல்,
அரைகுறையாக
செவிப்புலனும்
, கண்களும்
செயல்
படுவதால்,
நமது நிலை
, பலமுறை
கேட்ட
பழைய
பாடல்களில்
கூட
சிறப்புப்பண்புகளை
பட்டியலிட
இயலாமல்
விழிக்கிறோம்.
இப்போது என்ன
வாழ்க்கையில்
இது
தான்
மிக
அவசியமா?
என்று
தற்காப்பு
தேடுகிறோம்.
எந்த
வித நிர்ப்பந்தமும் இல்லாத சினிமாப்பாடலுக்கே இந்த
கதி
என்றால்,
வேறு
கல்வி,
மருத்துவம்,
முதலீடு
போன்ற
துறைகளில்
ஒரு
தெளிவான
பார்வை
இல்லாமல்
இறையருள்
பலத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்
என்பது
தெளிவாகிறது.
துல்லியமான
கவனம்
செலுத்துவது
நினைவாற்றலை
மேம்படச்செய்யும்.
.அதற்கு
சினிமாப்பாடல்கள்
பேருதவி
யாக
இருக்கும்
கவன ஈர்ப்புக்கு
“உன் விரல்கள் என் அழகை மீ ட்டும், உன் விழிகள் என் உயிரை வாட்டும்
உன் குரலும் என் பெயரை கூட்டும் அதில் கோடி கோடி இன்பம் காட்டும் ,
அதில்
கோடி
கோடி
இன்பம்
காட்டும்”
மேற்கண்ட இந்த சரணத்தில்
விசேஷ
கவனம்
செலுத்தப்பட்டு
[ஒரு
எதிரொலி
போல்]
பாடல்
பதிவிடப்பட்டுள்ளது
பாடலில்
உள்ள
ரொமான்ஸ்
மேலும்
மெருகேற்றப்பட்டுள்ளதை
நன்கு
கவனித்துக்கேளுங்கள்
எப்படியெல்லாம்
வெவ்வேறு
கலைஞர்கள்
தத்தம்
உழைப்பை
வழங்கி
பாடல்களை
மேம்படுத்தி
யுள்ளனர்
என்பதை
நினைவில்
கொள்வோம்
.
இப்பாடலின் பிற
மேம்பாடுகளை
சுபஸ்ரீ
குழுவினரின்
QFR பதிவில்
கேட்டு
ரசிக்க
இணைப்பு
இதோ
https://www.youtube.com/watch?v=YS0lxEOnx8o
naan unnai serndha qfr
நன்றி
அன்பன் ராமன்
As usual wonderful analysis. Rk
ReplyDelete