Wednesday, February 12, 2025

AC TIRULOKCHANDER -3

 AC TIRULOKCHANDER -3

வெள்ளி மணி ஓசையிலே [இருமலர்கள்] 1967 வாலி, எம் எஸ் வி , பி சுசீலா

ஒரு குடும்பப்பாங்கான காட்சி, வீட்டில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு நாயகி பாட , பாடல் ரம்மியமாக பயணிக்கிறது. இது போன்ற சொற்கள், அமைதியான , சீரான ட்யூன் அமைப்பு என அனைத்தையும் நாம் நினைக்கும் அதே வேளையில் , பாடல் கதையையும் பேசுவதைக்காணலாம். கருப்பு வெள்ளை நாட்களில் அமைந்த காட்சி, பாடல், படம் அனைத்தும் தமிழ் சினிமாவின் ஆரோக் கியமான நிலைக்கு சான்றெனில் மறுப்பதற்கில்லை. கண்டு களிக்க இணைப்பு இதோ  

https://www.google.com/search?q=velli+mani+osaiyile+video+song+download&newwindow=1&sca_esv=331748ed294b5afd&sxsrf=AHTn8zrAa8PLS6jfVbdTjvTV43y0kAjuKg%3A1739233981335&ei=vZqqZ4yTFOShn 

 சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே [எங்கிருந்தோ வந்தாள் -1970] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் பி சுசீலா

கேட்பதற்கு எளிதாய் தோன்றினாலும் , ஒவ்வொரு சொல்லுக்கும் அவ்வப்போது ஸ்வரங்களை அடுக்கி டி எம் எஸ் பாட , அப்பாவியாக சிவாஜி ஆடிப்பாட பாடலில் புதைந்துள்ள விவரம் வேறு . இசை அமைப்பாளரின் ஆளுமை வெளிப்பட்ட பல பாடல்களில் இத்தகு ஒரு தனி ராகம் /ரகம் ; அதீதஜ கற்பனை பாடலிலும் காட்சியிலும் . மறைந்துவிட்ட கலைஞர்களைப்போலவே , அன்றைய பிருந்தாவன் தோட்டத்திலும் எழிலும் மறைந்து போய் இது பிருந்தாவன் தோட்டமா என குமுறவைக்கும் நிலை. இனி பிருந்தாவன் தோட்டத்த்தின் பழைய எழிலை பழைய சினிமாக்களில் பார்த்தால் தான் உண்டு .    கா ட்சிக்கு இணைப்பு

https://www.google.com/search?q=sirippil+undaagum+raagaththile+video+song+download&newwindow=1&sca_esv=331748ed294b5afd&sxsrf=AHTn8zoelMJ0p3L-

 மல்லிகை முல்லை பூப்பந்தல் [அன்பே ஆருயிரே -1975 ] வாலி, எம் எஸ் வி , வாணிஜெயராம்

மிகவும் அருமையான பாடல்   , சொல்லிலும் சொற்சுவை மற்றும் இசையின் மேன்மை இவ்வனைத்திலும் நேர்த்தி மிகுந்த தொகுப்பு. கடைசி சரணத்தில் தபலா நடை நாசுக்காக உணர்த்தும் மன நிலை தனிச்சிறப்பு.  ஆனால் காட்சிப்படுத்துவதில் சிறுபிள்ளைத்தனம் மேலோங்கி , பாடலைக்காண  எதிர்பார்ப்பு கொண்டோர் பலரும் ஏமாற்றம் கண்டு புலம்பிய நிலைக்கு வந்து விட்டது.

Malligai Mullai Poopanthal - Anbe Aaruyire Tamil Song - Manjula, Sivaji Ganesan

  OR

https://www.google.com/search?q=maligai+mullai+poopandhal+song&newwindow=1&sca_esv=331748ed294b5afd&sxsrf=AHTn8zohYU7YZsOJSggJTtQ0qijwZQNZDA%3A1739234299279&ei=-5uqZ_XlEI-Ose MLLIGAI MULLAI POO VALI 1975 MSV VJ

அன்பு நடமாடும் கலைக்கூடமே [அவன் தான் மனிதன் -1975] கண்ணதாசன் எம் எஸ் வி, டி எம் எஸ் பி சுசீலா

ஒரு ஆத்திரத்தில் விளைந்த கவிதை இது என்று சொல்வர். மே மாதம் ஷூட்டிங் , மே மாதம் ஷூட்டிங்மே மாதம் ஷூட்டிங்,மே மாதம் ஷூட்டிங் என்று ஓயாமல் எம் எஸ் வி சொல்லிக்கொண்டிருக்க , கடுப்பான கண்ணதாசன் என்னடா மே மே என்று ஆடு மாதிரி பொலம்பற , இந்தாடப்பா பாட்டு என்று ஒவ்வொரு வரியும் 'மே'   என்று முடியும் படி எழுதி 10 நிமிடத்தில் தயாரான கவிதை. அது வெகு எளிதில் வெற்றி கண்ட நயமும் இசையும் பின்னிப்பிணைந்த ரம்மியம் கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=anbu+nasdamadum+video+song+download&newwindow=1&sca_esv=331748ed294b5afd&sxsrf=AHTn8zr15oDjxlSL_GuOVHocqNyLSzMQmw%3A1739234604421&ei=LJ2qZ-   ANBU NADAMAADUM AVAN THAAN 1975 KD MSV PS TMS

சிரிப்பில் உண்டாகும் [எங்கிருந்தோ வந்தாள் -1970] கண்ணதாசன் , எம் எஸ் வி,  டி எம் எஸ்  பி சுசீலா

மிகவும் நுணுக்கமான அமைப்பு கொண்ட பாடல்.            சிரிப்புக்கு ஸ்வரம் தொடர்ந்து வர பெரும் கலைஞர்களின் நடிப்பில் பாடல். காட்சியின் செழுமை,பிருந்தாவன் தோட்டத்தின் அன்றைய  பொலிவு, மறைந்த கலைஞர்போல் அதுவும் மறைந்து இப்போது இது அந்த பிருந்தாவனமா? என்று விசனம் கொள்ள வைக்கிறது. அந்த பிருந்தாவனத்தை பழைய சினிமாக்களில் பார்த்தால் தான் உண்டு. காட்சிக்கு இணைப்பு இதோ

https://www.google.com/search?q=sirippil+undaagum+raagaththile+video+song+download&newwindow=1&sca_esv=331748ed294b5afd&sxsrf=AHTn8zoelMJ0p3L-RigARgK ENGIRUNDHO VANDHAAL KD 1970 MSV PS TMS

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

WHAT OF THESE “GET-TOGETHERs?

  WHAT OF THESE “GET-TOGETHERs?                             [ My Blog Posting No.1259 ] Quite some opinion may emerge seeing the very titl...