Wednesday, February 12, 2025

PB SRINIVAS 2

 PB SRINIVAS  2  

பி பி ஸ்ரீனிவாஸ் -2

உடலுக்கு உயிர் காவல் [மணப்பந்தல்-1961]  கண்ணதாசன் , வி, ரா, பி பி ஸ்ரீனிவாஸ்

குடிகாரன் பாடல் எனினும் கடிகாரம் போல் சீராக நகரும் ராகமும் இசையும்.. அப்போதே பாடலில் சரோட் இழைந்து சோகம் பொழிவித்த இசை. கவியரசரின் நியாயமான கேள்வியும் உலக இயலின் எதிர்க்க ஒண்ணா தத்துவங்களும் பாடலின் தனித்துவம். வெகு நேர்த்தியாக பி பி ஸ்ரீனிவாஸ் உணர்ச்சிகளை பிழிந்துள்ளார் . பாடலை ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=udalukku+uyir+kaavalvideo+song&oq=udalukku+uyir+kaavalvideo+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgcIBRAhGI8C0gEJMzA0MDFqMGo0qAIAsAIB&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:82ec10a5,vid:iyIkIAZQrgw,st:0 manappandhal 1961 kd vr pbs udalukku utyir kaaval

-நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் [நெஞ்சில் ஓர் ஆலயம் -1962] கண்ணதாசன் , வி-ரா, பி பி ஸ்ரீனிவாஸ்

அந்தநாளில் மிகவும் ஆழமான கருத்தும், ஆறுதலும் விளக்கமும் என பன்முகப்பாடல் பி பி எஸ் அவர்களின் குரலில் வெளிவந்து பெரிதும் பாராட்டுப்பெற்ற பாடல். காட்சியும் நடிப்பும் எளிமை எனினும் வலிமை குன்றாத ஆதிக்கம் பாடலை கேட்டு மகிழ இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=ninaipathellam+nadanthuvittal+song&oq=NINAIPOPADHELLAM+&gs_lcrp=EgZjaHJvbWUqBwgDEAAY7wUyBggAEEUYOTIHCAEQABjvBTIHCAIQABjvBTIHCAMQABjvBTIKCAQQABiABBiiBDIHCAUQABjvBdIBCTE1ODY4ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:f9420938,vid:HvTIQIi7e9I,st:0 noa kd v r pbs

பார்வையின் கேள்விக்கு [சுமை தாங்கி-1963 ] கண்ணதாசன் , வி, ரா, பி பி எஸ், எஸ் ஜானகி

ஒரு சிறப்பான டூயட் பார்வையின் கேள்விக்கு. அன்றைய சென்சார் எப்போதும்கத்தரி க்கோலுடன் படம் பார்த்து வெட்டிய பல பாடல்களில் இதுவும் ஒன்று 'பருவத்தின் கேள்விக்கு' பார்வையின் கேள்விக்கு என்று METAMORPHOSE ஆக்கப்பட்டு , ஆனாலும் வெற்றி ஈட்டிய காதல் கவிதை , கண் பார்வை காதல், திருமணம் , முதலிரவு என ஒவ்வொன்றின் ரெலெவன்ஸ் என்ற பொருத்தம் பற்றி கண்ணதாசன் அளித்துள்ள தெளிவே இப்பாடல். ஏனோ தானோ என்று பாடலைக்கேட்காமல் கருத்தூன்றிக்கேளுங்கள் . க்ரேன் இல்லாமலே வின்சென்ட்-சுந்தரம் வழங்கிய அகல விரிந்த காமெராப்பார்வையையு ம் தேவிகாவின் முகபாவங்களையம் ரசித்துப்பார்க்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=endhan+paruvaththin+kelviku++video+song&newwindow=1&sca_esv=cf22745d37000c51&sxsrf=AHTn8zorsS633SlruNAs4a5obgr2YzhMEQ%3A1738839930319&ei=epekZ-OgE_fjseMPjdfggQ0&ved=0ahUKEwjjxfjC866LAxX3cWwGHY0rONAQ4dUDCBA&oq=endhan+paruvaththin+kelviku++video+song&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiJ2VuZGhhbiBwYXJ1dmF0aHRoaW4ga2VsdmlrdSAgdmlkZW8 pbs sj kd vr 1963

நாளாம் நாளாம் திருநாளாம் [காதலிக்க நேரமில்லை -1964] கண்ணதாசன் , வி, ரா, பிபி எஸ் , பி சுசீலா

தன்னிகரற்ற பாடல் என்றால் இதை சுட்டிக்காட்டலாம். ஏன் எனில் கவியின் கம்பீர மங்கள சொல்லாடல், காதலின் நளினத்தை விரசமின்றி -ரசம் வடித்த மொழி ஆளுமை, இளம் புதுமுகங்கள் , சென்னையின் முதல் வண்ணப்படம் . ஒப்பனை என்னும் மேக்-அப் எவ்வளவு நேர்த்தியாக [பவுடரைஅப்பிக்கொள்ளாமல்] சீரான ஒளிப்பதிவு [வின்சென்ட்-சுந்தரம்] வழங்கிய முதல் வண்ணப்படம் . இசையில் தெறித்து மின்னிய கருவிகளின் துடிப்பான இயக்கம் .இசை விமரிசகர் சுப்புடுவையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த இசை கம்பீரம் ;இவ்வனைத்தையும் கடந்து அதே புதுப்பொலிவுடன் இன்றும் உலாவரும் அதிசயம், பி பி எஸ் , சுசீலா குரல்களில். கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=naalaam+naalam+thirunaalaam+video+song&oq=naalaam+naalam+thirunaalaam+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyCQgAEEUYORifBTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABMgcIBRAhGI8C0gEKMTA1MTI4ajBqNKgCALACAA&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:df206ffb,vid:CDX_gY7LnVY,st:0

வளரும்

அன்பன் ராமன்  

3 comments:

  1. என்றும் இளமையுடன் வாழும் இணையற்ற பாடல்கள். நன்றி புரபசர்.

    ReplyDelete
  2. A request Prof... In your articles, better you write in full, Viswanathan Ramamurthy or M S Viswanathan, instead of வி ரா . Only then the reader will get attention and register in mind that these gems are MSV's and none else !! Hope you will.agree.

    ReplyDelete
  3. Lovely selection of PBS's golden voice and lovely commentary.

    ReplyDelete

WHAT OF THESE “GET-TOGETHERs?

  WHAT OF THESE “GET-TOGETHERs?                             [ My Blog Posting No.1259 ] Quite some opinion may emerge seeing the very titl...