Sunday, March 23, 2025

AVOIDING MISTAKES-2

 AVOIDING MISTAKES-2      

பிழை தவிர்த்தல் -2                                      

 இவற்றை ப்புரிந்து கொள்வோம்             

BIRDS OF A FEATHER FLOCK TOGETHER என்று முதுமொழியை தவறாகவே பேசியும் எழுதியும் வந்துள்ளோம், எப்படி எனில்  -  BIRDS OF A FEATHER FLOCK TOGETHER UNTIL THE CAT COMES என்பதே ஒரிஜினல் ; ஆனால் நாம் முன் பாதியையே  முழு வாசகம் என்று நினைக்கிறோம்.

சரி, இந்தக்கூற்றின் உள்ளார்ந்த பொருள் என்ன? எனில், புறக்காரணிகள் [உருவம் சிறகு போன்ற தோற்றங்கள் தரும் ஒற்றுமை] துன்பம் வரும்போது விலகி ஓடிவிடும். [அதாவது மேம்போக்கான ஒற்றுமை நிலைத்து தொடராது] 

இது போலவே MONEY IS THE ROOT OF ALL EVILS     என்பதாக                                            ஒரு முதுமொழியும் தவறான சொல்லமைப்பிலேயே உலவக்காணலாம். ஏனெனில் அது உண்மையிலேயே LOVE OF MONEY IS THE ROOT OF ALL EVILS    என்று இருப்பதை நாம் அறியவில்லை      

சாதாரண உரையாடல்களில் கூட, தவறான சொற்களை பயன் படுத்துகிறோம். உதாரணம்: ஒரு நாளைக்கு இரண்டுமுறை என்பதை TWO TIMES DAILY என்று சொல்கிறோம். முறையாக- TWICE DAILY என்பதே சரி-. வாரம் ஒரு முறை  என்பதை ONCE A WEEK என்று சொல்லாமல் ONCE IN A WEEK என்று தவறாக சொல்கிறோம். 

அது போன்றே, எதிர் எதிரே இருக்கும் அமைப்புகளை தெரிவிக்க பலரும்   ”OPPOSITE TO “   என்றே சொல்லவோ, எழுதவோ காணலாம். அது தவறு . தனியே,     “OPPOSITE”  என குறிப்பிட்டாலே போதும், அதுவே சரி.

மேலும், நானே பார்த்தேன் என்றுணர்த்த I saw it with my own eyes என்கின்றனர் அது தவறு.  ஏனெனில்,”with my own eyes”   என்றால், வேறு ஏதோ கண்கொண்டு பார்க்க இயலும் என்பதாக ஒரு மாயை தோன்றுகிறது.

I SAW IT MYSELF’ என்பதே சரி . இதை நாம் உணர்த்த முயன்றால், எனக்கு எல்லாம் தெரியும் என்போர், மற்றும், ஏன்?  இப்படியும் சொல்லலாமே, என்று தவறை நியாயப்படுத்தும் விதண்டா வாதம் பேசுவதும் அதிகரித்து வருகிறதை உணரலாம்.       

சாட்டு வாக்கியமும் சொற்றடரும்

நமது மொழியறிவில், மற்றொரு பலவீன பகுதி இவை என்று எளிதில் சொல்லலாம். ஆங்கில மொழியில் இடியம் [idiom ] தமிழில்சாட்டு வாக்கியம் என்றும், [phrases]   சொற்றடர்கள் என்றும் வழங்கப்படுகின்றன.  இவை, மறைபொருள் உணர்த்தும் தன்மையின என்று புரிந்து கொள்ளலாம்.

ஒரு கருத்தை நேரடியான வழியில் சொல்லாமல், பூடகமாக [ஒளித்து மறைத்து] சொல்வன சாட்டு வாக்கியங்கள் என்றும் பிரத்தியேக சொல்லாடல்கள்,   சொற்றடர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

அவற்றில் சில, நமது கவனத்தை செலுத்த உகந்தவை. ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது பலர் 'ANOTHER THING IS COMING' என்று குறிப்பிடுவது உண்மையில் 'ANOTHER THINK IS COMING'. அதன் உள்ளார்ந்த பொருள்- நமது கருத்தை மீண்டும் பரிசீலிக்க அல்லது விவாதிக்க வேண்டியுள்ளது என்றுணர்த்தவே.

வெறுமனே பேசிக்கொண்டிராமல் என்பதை குறிப்பிட, சிலர் WITHOUT MUCH AUDIEU   என்று உபயோகிக்கின்றனர் அதன் முறையான அமைப்பு -WITHOUT MUCH ADO என்பதுவே. .ஏனெனில் AUDIEU   என்பது விடைபெறுவதை உணர்த்தும் பிரென்ச் மொழிச்சொல் காலப்போக்கில் ஆங்கில சொல் வழக்கில் புழங்குகிறது

மற்ற சொல் , ADO என்பது  ஒன்றுமில்லாததை 'வள வள 'என்று பேசுவது [ஆரவார நிலை] என்று பொருள் படுவது. 

இன்னும் சில பிழையான நடைமுறைகளைக்காண்போம் .

பலர் "I COULD CARE LESS" என்று சொல்ல /எழுத பார்க்கிறோம். ஆனால் சரியான வடிவம் I COULDN'T CARE LESS என்பதே.     முன்னது -நான் தேவைக்கு அதிகமாகவே உதவியுள்ளேன் என பொருள் படும். பின்னது இதைவிட குறைவாக என்னால் செய்திருக்க முடியாது       [I HAVE DONE THE ESSENTIAL MINIMUM என்று பொருள் படும்].

மற்றுமோர் வினோதம் [a] "NIP IN THE BUTT" என்ற பிழையான சொல்லாடல்.. உண்மையில் [b]   NIP IN THE BUD என்பதே சரி [b ] அதாவது முளையிலேயே கிள்ளி எறி =தவறை வளர விடாதே என்ற பொருள் , மாறாக  [a ] உணர்த்தும் பொருள் பின்புறம் பிட்டத்தில் கிள்ளு என்பது .

மேலும் 'Set foot in ' என்பதை தவறாக Step foot in என்று பயன்படுத்துகின்றனர்.

It is a case in point என்ற சாட்டு வாக்கியத்தை case and point என்று பயன்படுத்துகின்றனர். It is a case in point என்றால் குறிப்பிட்ட வகை விளக்கத்திற்கு மிகச்சரியான உதாரணம் என்ற பொருள்.

அதுபோன்றே beck and call என்பதனை beacon call என்று உளறக் காணலாம், முன்னது கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருதல் என்று பொருள் தரும் ஆனால்   beacon call முறையான சொல்லாடல் அல்ல. beacon =கலங்கரை விளக்கம் அல்லது அது போன்ற ஒளி தரும் அமைப்பு , அது எப்படி இங்கு பொருந்தும்? இவை அனைத்துமே காதில் உணர்ந்த ஒலியை, .உணர்த்த  வந்த  பொருள் என்ன என்று கணக்கில் கொள்ளாமல் பேசுவது /எழுதுவது போன்ற "ஏனோ தானோ" அலட்சியங்கள்/ அவலட்சணங்கள்  எனில் மிகை அன்று.

வளரும்

அன்பன் ராமன்       

No comments:

Post a Comment

GOOD- BUT A LITTLE OFF MEMORY [-15]

  GOOD- BUT A LITTLE OFF MEMORY [-15] நல்லவை ஆனால் அறிந்தும் சற்றே மறந்தவை[-15]    A FLUTE GALORE பச்சை விளக்கு குழலி சையில் இ...