AVOIDING MISTAKES
பிழை தவிர்த்தல்
[ரகுநாதன் தம்பதியரின் வேண்டுகோள் -அடிப்படையில் பதிவிடப்படுகிறது].
இதுவும்
ஒரு
வேண்டுகோள்
ஈடேற்றும்
பதிவு..
எனவே
கோபம்
கிளம்பினால்
ரகுநாதன்
களுக்கே
அது
போய்ச்சேர
கடவது
என்று
முனிவன்
போல்
சொல்லிவிட்டு
, வேலையை
தொடங்குகிறேன்.
நீ
என்ன
பெரிய
ஞானியா,?
குறை
களைவோம்
என்று
கிளம்பிவிட்டாயே என்று சிலர் உள்ளூர குமைவார்கள் - அறிவேன். மனித குலத்தின் குறை களைய,
நான்
என்ன
இறைவனா?
குறைந்தபட்சம்- அரசியல்வாதியா? இரண்டும் இல்லை. சாதாரண ஆசிரியன், ஆயினும் ஆசை யாரை விட்டது? இயன்ற அளவு, விளக்க முயலுவோம்.
என்ன?
விளக்கமா -“ஐயோ” என்ற அலறல் கேட்கிறது. அலறினாலும் அரற்றி னாலும் தப்ப முடியாது .
நாம் களைய முயலும் குறை --தவறான மொழி பயன்பாடு [WRONG HANDLING OF LANGUAGE] நான் மொழி விற்பன்னன் அல்லன் --ஆயினும் ஒரு சில அறிந்தவற்றை தெளிவு படுத்தலாம் என்று ஒரு நப்பாசை தான்..
வாத்திப்பயல்களுக்கு அறிவும் ஆற்றலும் இல்லாவிடினும், ஆசைக்கு குறைவில்லை என்று இந்த சமுதாயம் எப்போதோ தீர்மானித்து விட்டது.
அதனால் தான் கற்கும் பருவத்தில் வாத்தி [யார்] சொன்னதை கேட்காமல் , மனமே மந்திரி , சொல்லே -செயலர் என்று இயங்கிவிட்டு எவரேனும் Thank you என்று சொன்னால் உடனே please don't mention என்று[முறையாக ] சொல்லாமல் no mention
please என்போர் ஏராளம். இன்னும் சிலர்
"WELCOME" [இன்னும் இரண்டு தடவை நன்றி சொல் என்பது போல்] என்கிறார்கள். எந்த சொல்லாடலையும், அதன் பொருள் கருதாமல் உளறு ம் பண்பு இது.
மற்றுமோர் வியாதி
GOOD MORNING SIR / MADAM என்று சற்று வயதில் பெரியவர்களையும் , சம வயதினரை GOOD MORNING என்று ஒவ்வொரு நாளும் சொல்கிறோம் - மணி என்ன என்று பாராமலேயே.. மதியம் 12.30 , 2.00 மணி ஏன் 3.00 ஆனாலும் இதையே சொல்லித்திரிகின்றனர்.
அதை சுட்டிக்காட்டும் போது -ஒரு இளைஞனுக்கு கோபம் வந்து , GOOD MORNING என்று சொல்வது நல்ல பழக்கம் தானே அதற்கு ஏன் பிழை சொல்கிறீர்கள்?
உங்களுக்கு
-GOOD MORNING சொன்னதே
தவறு
என்று
கொந்தளித்தான்.
நான்
அப்போதும்
அவனை
விடவில்லை,
ஆம்
இந்த
நேரத்தில்
GOOD MORNING சொன்னதே
தவறு
தான்
என்றேன்.
[2.00 pm] அவன்--
ஒரு
தவறும்
இல்லை,
ஒருவரை
சந்திக்கும்
போது
GOOD MORNING என்று
சொல்வது
நல்ல
பழக்கம்,
நான்
அதைத்தான்
செய்தேன்
என்று
வெற்றிப்பார்வை பார்த்தான்.
தவறை
செய்துவிட்டு
நியாயப்படுத்தாதே.. இதை உனக்கு சொல்லிக்கொடுத்தது யார்?
அவன் –“ஸ்கூல் ல அப்படி சொல்லணும்
னு, . சொல்லிக்கொடுத்ததை 7, 8 வருஷமா கடைப்பிடிக்கிறேன், நீங்கள் தான் குற்றம் காண்கிறீர்கள் என்றான்.
நான் சொன்னேன் "காலை 12.00 மணிக்குள்
GOOD MORNING என்று
சொல்வது
தவறல்ல
; ஆனால்
12.00 மணியைக்கடந்து விட்டால் GOOD
AFTERNOON , 3.30 மணிக்கு மேல் இரவுக்குள் GOOD
EVENING என்பது மொழி மரபு. ஒருவருடன் பேசிமுடித்து விடைபெறும் போது [அந்தி நேரம்] GOOD
NIGHT என்று
சொல்லவேண்டும். GOOD NIGHT என்பது பிரிவுபெறும் போது மட்டுமே. இவற்றை பின்பற்றி
பழகிக்கொள் என்றேன்.
மறுநாளில் இருந்து அவன் என்னைப்பார்த்ததும் வேறு புறம் திரும்பிக்கொள்வான் GOOD MORNING என்று சொல்வதையே நிறுத்திவிட்டான். இதுதான் -இன்றைய இளையோர் மனோபாவம். நான் வருத்தப்படவில்லை,
ஏனெனில் வருத்தம் போன்ற சூடு சொரணை இருந்தால் வாத்தியார் வேலை யில் ஒருநாள் கூட இயங்க இயலாது. ஆனால் உள்ளூர மகிழ்ச்சி தான் மாலை வேளையில் GOOD MORNING என்று சொல்வதை விட, பேசாமல் கடந்து போவது உண்மையிலேயே கௌரவம் தான். இப்படித்தான் வாத்துகள்-[அதாவது வாத்திகள்] தங்களை தேற்றிக்கொள்ளவேண்டும்..
இப்படியெல்லாம் பாராமுகம் காட்டி மாணவப்பருவத்தைக்கடந்து வெவ்வேறு நிறுவனங்களில் பணி நிமித்தம் சேர்ந்தபின் அங்கு உங்களின் பற்றாக்குறைகள் , பேசுபொருள் ஆவதும் நீங்கள் கேலிப்பொருள் ஆவதும் அரங்கேறும் போது ஆசிரியனை கிள்ளுக்கீரைபோல் நினைத்து வாழ்ந்த நபர்கள் விளக்கமோ விவாதமோ தொடராமல் தலைகவிழ்ந்து நிற்கும்போது நிச்சயம் வெட்கம் பிடுங்கித்தின்னும்.
அந்நிலை தவிர்த்திட, எந்த ஒரு கருத்தையும் [சினிமா நடிகை T P முத்து லட்சுமி போல், அதான் எனக்கு தெரியுமே என்று] கடந்துபோகாமல்
ஊன்றி
கவனித்து
மனதில்
இருத்திக்கொள்ளுங்கள். இன்றேல், பிறரிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment