Thursday, March 20, 2025

PB SRINIVAS -7

 PB SRINIVAS -7    

பி பி ஸ்ரீனிவாஸ் -7

மனிதன் என்பவன்-- [சுமை தாங்கி -1963], கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி, பி பி ஸ்ரீனிவாஸ்

மனிதன் தன்னைத்தானே எந்த அளவிற்கு உயர்த்திக்கொள்ள முடியும் என்று வெவ்வேறு அளவீடுகளை பட்டியல் இடுகிறார் கவியரசர் ; இது சோகமா, தத்துவமா , தன்னிலை ஊக்கமா எதுவாயினும் பிபி ஸ்ரீனிவாஸ் வெகு அற்புதமாக பாடியுள்ளார். மெரினா கடற்கரையில் இரவில் படப்பிடிப்பு [ambience என்ற இருக்கும் ஒளியிலேயே கருப்பு வெள்ளையில் வின்சென்ட் -சுந்தரம் காட்டிய ஜாலம். தெரு விளக்குகளும் சில கார் விளக்குகளும் ஒளியூட்ட [மொத்தம் 7 கார்கள் -அனைத்தும் கவியரசுருக்கு சொந்தம்], பின்னணியில் , இரவில் கடல் அலைகள் என்று காவிய அமைப்பு. இந்தப்பாடலுக்கு பியானோவை உபயோகி த்த வித்தகம் . ஒரு விரக்தி சிரிப்புடன் நாயகன் பாடத்துவங்க அவன் மனநிலை போராட்டம் தெளிவாக அமைந்த காட்சி அமைப்பு. சொல்லித்தெரிவதில்லை சோகக்கதை . காட்சியே சாட்சி. பாடலுக்கு இணைப்பு https://www.google.com/search?q=MANIDHAN+ENBAVAN+VIDEO+SONG&oq=MANIDHAN+ENBAVAN+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIICAEQABgNGB4yCggCEAAYCBgNGB4yBwgDEAAY7wUyBwgEEAAY7wUyBwgFEAAY7wUyBwgGEAAY7wXSAQkzNzQ0OWowajmoAgiwAgHxBWmUFrJHOyOF8Q

மயக்கமா கலக்கமா [சுமைதாங்கி 1963] பிபிஸ்ரீனிவாஸ்

இதே படத்தில் அமைந்த இன்னுமோர் பாடல் தொய்வடைந்த மனங்களை  தட்டி எழுப்பி ஊக்கம் கொள்ள வைக்கும் சொல்லாடல், அதற்கேற்ற நளின இசை. என்னைப்பொறுத்தவரை இப்பாடல் ஒளிப்பதிவில் ஒரு மைல் கல் . ஆம் ஒரே நேரத்தில் நாயகனும் அவனது மனசாட்சியும் திரையில் ; அதுவும் வெவ்வேறு அமைப்புகளில் பதிவிடப்பட்ட புதுமை 1963இல் ; மீண்டும் வின்சென் ட் சுந்தரம் களப்படுத்திய ஆளுமை. பாடலின் உள்ளார்ந்த சிறப்புகளை நான் விளக்குவதை விட அதை கவிஞர் வாலி சொல்லக்கேளுங்கள் . அதற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0 mayakkamaa sumai thaangi kd vr pbs

https://www.google.com/search?q=vali+on+%27mayakkamaa+kalakkamaa%27+song&oq=vali+on+%27mayakkamaa+kalakkamaa%27+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyBwgDECEYnwUyBwgEECEYjwLSAQkyMTA0M2owajSoAgCwAgE&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:f220b4dd,vid:DMiWo4UXb00,st:0 vali

மற்றுமோர் விரக்தி பாடல்

கண்களே கண்களே [வாழ்க்கை படகு -1965] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ்

காதலித்தவன் தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணிப்புலம்பும் பாடல். கவிஞர் சிறப்பாகப்புனைந்த பாடல். குறைந்த இசைக்கருவிகள், வயலின் மற்றும் குழல் கொண்டு அமைந்த பாடல். அன்றைய வெற்றி பாடல் கேட்டு மகிழ இணைப்பு இதோ 

kangale vazhkai paagu 1965 kd v r pbs

https://www.google.com/search?q=kangasle+kangale+video+song&oq=kangasle+kangale+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIHCAQQIRiPAtIBCTI2MTYwajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:7131aa5c,vid:w0CvSTAxQ6Y,st:0    

வளரும்           நன்றி  அன்பன் ராமன்.

No comments:

Post a Comment

VEENA – A DIVINITY BY ITSEF

  VEENA – A DIVINITY BY ITSEF வீணை -- அதுவே ஒரு தெய்வீகம் கல்வி பற்றி எழுத முற்பட்டால் கல்லெறி நிச்சயம் . அந்த அளவுக்கு எழுதிய...