P MADHAVAN
இயக்குனர் பி மாதவன்
பெருமை மிக்க தமிழ் சினிமா இயக்குனர்களில் இவருக்கு ஒரு உன்னத இடம் உண்டு..
அந்த நாட்களிலே யே பட்டதாரி இவர். ஆரம்பத்தில் இயக்குனர் டி ஆர் ரகுநாத் [வீனஸ் பிக்ச்சர்ஸ்] அவர்களிடம் உதவியாளர் ஆனார். அதனாலேயே இயக்குனர் ஸ்ரீதரின் குழுவில் இணை இயக்குனர் ஆனார். பின்னர் அதன் நீட்சியாக ஒளிப்பதிவாளர் பி என் சுந்தரம் [வின்சென்ட் ] திரு மாதவன் யூனிட்டில் ஆஸ்தான அந்தஸ்து பெற்றார். இவ்வாறாக வளர்ச்சிபெற்ற மாதவன் அனைத்து முன்னணி நடிக நடிகையரை வைத்து படங்கள் இயக்கிய பெருமை உடையவர்.அதிர்ந்து பேசாதவர் ,
நல்ல உயரமான தோற்றம் [ நெஞ்சில் ஓர் ஆலயம்
படத்தில் ஆரம்ப காட்சிகளில் ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவராக வருபவர்] பின்னாளில் தயாரிப்பாளராக [அருண் பிரசாத் மூவிஸ்] உருவெடுத்தார். தமிழ் சினிமாவின் திறமைகளில் இவரும் ஒருவர்.
திரு மாதவனின் இயக்கத்தில் வெளிவந்த முதல்
படம் "மணி ஓசை "
தேவன் கோயில் மணி ஓசை [மணி ஓசை-1963] கண்ணதாசன் விஸ்வநாதன் - ராமமூர்த்தி , சீர்காழி கோவிந்தராஜன்
இயக்குனர் மாதவனின் முதல் முயற்சி நல்ல .படம் . இந்தப்பாடல் தெய்வ நம்பிக்கையையும் , வாழ்வில் இருந்த இருந்த அமைதி போய்
, நம்பிக்கை அற்று இருப்பவர்களையும் அரவணைத்து ஆதரிக்கும் சொல்லாடல் நிறைந்தது. ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால் என்று உடல் ஊனம்
கொண்ட மனிதனை தேற்றி அன்பு செலுத்தும் கவிதை .
இப்பாடல் பற்றி, ஒரு கதை உண்டு. எம் எஸ் வி மறுநாள் பாடல் பதிவிற்கு ஏற்பாடு செய்து விட்டு மணி க்கு ஏற்பாடு பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போய் விட்டார். மறுநாள் காலை வந்ததும் மணி வந்தாச்சா என்றாராம் . சார் நம்ம ஆர்கெஸ்டரா ல மணி னு ... என்று இழுக்க , போய் மணி வாங்கிகிட்டு வாங்க பாட்டுல முதல் வரியிலேயே மணி னு இருக்கே; பாட்டை படிக்கவே மாட்டீங்க போலிருக்கே. போய் வாங்கிட்டு வாங்க , ஒரு டிஸ்கஷன் இருக்கு போயிட்டு வரேன் என்று போய் விட்டார்.
4--5 .பேராக பாரிஸ் கார்னருக்கு போய்
பார்த்தால் வித விதமான அளவுகளில் மணிகள். எதை
வாங்குவது? தப்பா வாங்கினா கொன்னுடுவாரே ஐயோ என்று குழம்பி 4, 5 அளவு மணிகளை வாங்கிக்கொண்டு போனார்களாம்.
எம் எஸ் வி வந்து மணிகளை பார்த்து இத்தனை மணியா என்று திகைத்து, சரி ஒரு கொடிபோல் கயிறு கட்டி மணிகளை தொங்கவிட சொன்னாராம் . ஒவ்வொன்றாக ஒலித்து பார்த்து அவருடைய அனுமானப்படி 1, 2
5, 3 4 என்று ஒவ்வொன்றையும் அடையாப்பப்படுத்திவிட்டு ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஒலிக்க வைத்து பாடலை பதிவிட்டாராம். அந்த ஒலி பாடல் துவக்கம்/ முடிவு இரண்டிலும் ஒலித்து ஒரு அபூர்வ நாதவரிசை உருவாகி பாடலை மேம்படுத்தியதை உணரலாம்.
இணைப்பு
. இதோ
1963 Devan koil maniosai
kd vr sg
முன்னணி நடிகர்களை இயக்கிய மாதவனின் கைவண்ணத்தில் வெளிவந்த மற்றுமோர் படம் தெய்வத் தாய்
ஒரு பெண்ணைப்பார்த்து
[தெய்வத்தாய் -1964] வாலி, விஸ்வநாதன் -ராமமூர்த்தி , டி எம் எஸ்
அதி விரைவான தாள சுழற்சி, ட்ரம் , போங்கோ , மாண்டலின் பாடலை சுமந்து வந்தாலும் லய விற்பன்னர்களின் ஆதிக்கம் + பாவம் குன்றாத குரல் வளம் இரண்டும் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். நடன அசைவுகளில் எம்
ஜி
ஆர் , சரோஜா தேவி காட்டிய
விரைவு மற்றும் பி எ ன் சுந்தரம் தந்த ஒளிப்பதிவு உன்னதம் என காட்சி பெரும் வரவேற்பு கண்டது . கேட்டு மகிழ இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=RfhgYO1GrKA ORU PENNAI PARTHU
DEIVATHAI VAALI V R TMS NOTE BEATS
மடி மீது தலை வைத்து அன்னை இல்லம் -1963, கண்ணதாசன் , கே வி மஹாதேவன் , டி எம் எஸ் , சுசீலா
மென்மையான காதல் பாடல் , ஆர்ப்பாட்டமில்லா இசை அமைப்பு ஆனால் ஒரு எதிரொலி போன்ற வடிவம் பாடலின் சிறப்பு. குரல்கள் அற்புதம் , இசைக்கருவிகள் கனவுலகில் இயங்குவது போல் ஒலிப்பது புதுமை. . கேட்டு மகிழ இணைப்பு இதோ
சத்திய முத்திரை [கண்ணே பாப்பா -1969] கண்ணதாசன் ,விஸ்வநாதன், சுசீலா
கிறிஸ்துமஸ் வகைப்பாடல் சுசீலாவின் சிறப்பான குரலில் . என்று கேட்டாலும் மங்காத சுவை , கோரஸ் , நடனம்
நடிப்பு
என
பல்வேறு அம்சங்களின் ஊடே கோரஸ் குரல்களின் பங்களிப்பு, குழந்தைகளின் நடனம் எதையும் மறக்கவோ மறைக்கவோ வழி
இல்லை.குதூகலம் மிக்க பாடலுக்கு இணைப்பு இதோ
வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment