LET US PERCEIVE THE SONG – 14
பாடலை உணர்வோம் -14
வீணை பேசும் [ வாழ்வு என் பக்கம் -1976] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்வநாதன் , குரல்கள்
யேசுதாஸ், பி எஸ் சசிரேகா .
இப்படி ஓர் பாடல் அமைவது எளிதன்று . நயம் நயம் நயம் நயம் என்று திரும்பிய பக்கமெல்லாம் மிளிரும் ஒரு ஒப்பற்ற
பாடல்
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை க்கண்டு
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை க்கண்டு
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று
நாணம் ஒரு வகை கலையின் சுகம்
ஒரு வகை மொழியின் பதம்
ஹ் ம் ஹ் ம் ஹும் ஹு ஹூ ஹு ஹும் [பெண்]
தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே
[வீணை]
காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதை க்கலை
ஊ ஹூம் ஹு ஹு ஹூம் ஹு ஹு ஹூம் [பெண்]**
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
தாய்மை கொண்டாடு
பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே
ஹ்ம் ஹ்ம் ஹூஹூம் ஹுஹு ம்ம்ம் [பெண்]
ஆ ஆ அஹஹா ஹாஹா
ஹா ஹ ஹ ஹா [ஆண் ]
என்று அமைதியாக பனி போல மெல்ல மேகமென அசைந்து செல்லும்
பாடல் இரு குரல் ஹம்மிங் உடன் முடிகிறது மீண்டும் பல்லவியை பாடாமல்
.ஆழமான ஆர்ப்பாட்டம் இல்லாத மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி
நடித்த முத்துராமன் - லட்சுமி கூர்ந்து கவனிக்கத்தக்க
திறமைசாலிகள் . கவிஞனின் சொல்லாடலை மேலும் செம்மைப்படுத்திய இசை வடிவம் இரண்டையும்
காட்சியின் அமைப்பினைக்கொண்டு அலசுவோம்.
கதையின் அடித்தளம்
ஊமைப்பெண்ணை மணந்த ஆடவன் . அவளுக்கு பேச்சுத்திறன் இன்மையை
கொச்சைப்படுத்தாமல் போற்றிப்பாடி அவளுக்கும் பிறர் போல் வாழும் திறனும் தகுதியும் இருப்பதை
உணர்த்தும் பாடல்.
முக்கிய இடங்கள்
மௌனம் ஒருவகை
மொழியின் பதம் ,நாணம் ஒரு சுகம் [ நீ பேசா விட்டாலும் -உடல் மொழி கவிதை என்று புகழ்ந்து
அவளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறான் ] எண்ணற்ற சொற்கள் அவன் அவள் மீது செலுத்தும் அன்பின்
அடையாளமாய் கவிஞர் சொல்ல இசையில் அனைத்தையும் பின்னிப்பிணைந்த விஸ்வநாதன் , மௌனத்துக்கும் ஹம்மிங் வழியே குரல் தந்து அதிலும் உணர்வு மேம்பட ஒலிக்கவைத்துள்ளார்.
ஆண் குரல் மென்மை, பெண் ஹம்மிங் [சசிரேகா] மேன்மை. இவ்வனைத்தையும் பல முறை கேட்டு பாடலை நுணுக்கமாக புரிந்துகொள்ளுங்கள். இது
சாதாரண ஹம்மிங் அல்ல, ஆழ்ந்த பொருள் கொண்டது. என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம். பாடலின் நுணுக்கங்கள் அடுத்த பதிவில் . பாடலுக்கு இணைப்பு
இதோ.
https://www.google.com/search?q=veenai+pesum+adhai+mettum++video+song&newwindow=1&sca_esv=3ec8625b255dccb3&sxsrf=AHTn8zpgfOHO2Wrzc0Ml5xuBPfAvD10n8w%3A1741268216327&ei=-KTJZ_3CE-iQ4-EP3NSH4Qk&ved=0ahUKEwj9nvjLyfWLAxVoyDgGHVzqIZwQ4dUDCBA&oq=veenai+pesum+adhai+mettum++video+song&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiJXZlZW5haSBwZXN1bSBhZGhhaSBtZXR0dW0gIHZpZGVvIHNvbmcyBRAAGO8FMgUQABjvBTIFEAAY7wUyBRAAGO8FMggQABiABBiiBEju7AFQAFiVpAFwAHgAkAEAmAHJAaAB7hyqAQYyLjI1LjG4AQzIAQD4AQGYAhygAtEewgIQEAAYgAQYsQMYQxiDARiKBcICCRAAGAcYxwUYHsICBhAAGAcYHsICFRAAGIAEGLEDGAIYQxiDARiKBRifAcICCBAAGBMYBxgewgILEAAYExgHGMcFGB7CAgYQABgNGB7CAggQABgFGA
இதில்
சிவகுமார்
பெருமாள்
என்பவரின்
பதிவை
தொடருங்கள்
முழுப்பாடலும் கிடைக்கும்
Quarantine from Reality |
Veenai Pesum | Vaazhvu En Pakkam | Episode 2 qfr
https://www.youtube.com/watch?v=cAn2KJ-1Vg4
veenai pesum ananthu
நன்றி
ராமன்
No comments:
Post a Comment