Monday, March 3, 2025

RENGAA VENDAAM

RENGAA VENDAAM                    

ரெங்கா வேண்டாம்...

காலை 7.00 மணி வீடே திமிலோகப்படுகிறது . என்ன? ஆம் ½ ஆண்டு பரீட்சை மார்க் லிஸ்ட் வந்துவிட்டது அப்பா ரெங்கசாமி [ரெங்கு] கொந்தளிக்கிறார், காபி யுடன் மனைவி மைதிலி நிற்க , காபி காபி என்று அலையும் ரெங்கசாமி கோபம் கொண்டு காபி யாவது பீப்பியாவது -எங்கே அந்தக்கழுதை ?  

மைதிலி  --‘யாரு’?

‘அவன் தான் அந்தக்கிராதகன்’ - ரெங்கு

‘ஐயோ காலங்கார்த்தால கிராதகன் , பராசரன் ன்னா புரியல்லஎன்றாள் மைதிலி

‘உனக்கு ப்புரியாது அந்த தடியனுக்கு சோறுபோட்டு பாராட்டி , சீராட்டி கெடுத்துவெச்சிருக்க எங்க அந்தக்கழுதை’ ?

 ஐயோ யாரைத்தேடறீங்க;என்றாள் -மைதிலி

‘அவன் தான் சந்தானம்’ -ரெங்கு                                       ‘அவன் மாடிலே படிக்கிறான்’ -மைதிலி

‘ஊக்கும் படிக்கிறான் -சும்மா நடிக்கறான்’ -ரெங்கு

“டேய் நானும் ரொம்ப நாளாவே பாக்கறேன் -எல்லாரையும் சீறிப்பாயற , நீ என்ன சிங்கம் புலியா? இல்ல மனுஷனாஎன்றார் தாயார் கோமதி. .

நீ எங்க குறுக்க வர’? -ரெங்கு.

“வீட்டுல என்ன சிக்னல் மாட்டிவெச்சிருக்கியா? , குறுக்க வர, நெடுக்க வர னு ஏதோ சொல்றியே , அப்பிடி எல்லாம் பேசாத . இப்ப எதுக்கு  சந்தானம்”?

‘அந்தக்கழுதைக்கு மார்க் வந்திருக்கு -- எவ்வளவு னு பார்த்து அவனைஅடி நிமிர்த்தணும்’ .

ரெங்கா வேண்டாம் சொன்ன கேளு” .- தாயார் கோமதி. .‘நீ சொல்லி நான் கேட்கணுமா’? -ரெங்கு

“நீ எப்ப, யார் பேச்சை ஒழுங்கா கேட்டிருக்க சொல்லு” ? “உன் அழிச்சாட்டியம் தாங்காம வெங்கடாச்சாரியார் [உங்க அப்பா] ராவோட ராவா ஊரை விட்டே  போய்ட்டார்
. ராவோட ராவா வா”-? மைதிலி

“ஆமாம் ஒரே நாள் கோவிந்தராவ் , கோபால் ராவ் , இவர் ஓடிப்போனதுனால ராவோட ராவா ஓடினார் னு எல்லாருக்கும் தெரியும். எங்கயோ திருப்பதில இருக்கார் னா  சீரடில இருக்கார் னா தேடி தேடி அலைந்துதான் மிச்சம்  என்று சொல்லும் போதே "ப்ரிச் என்று சத்தம் கோமதி மாமி மூக்கை உறிஞ்சி  கோபத்தை /சோகத்தை காட்டினாள்.

‘இப்ப நல்லவன் மாதிரி அவனை ஒதைக்கணும் இவனைக்கொல்லணும் னு அலையற . அப்பவே உன்னைக்கொன்னிருந்தா இந்த தொல்லையே இருந்திருக்காது. ஒரு சாவோட போயிருக்கும்’ . ‘அப்பா வைக்காணும் , நீ பேரனையும் தொலைச்ச்சுடு போல் இருக்கு .. வேண்டாம் கால வேளை குழந்தைகளை துன்புறுத்தாதேஎன்றார் தாயார் கோமதி.. தெரியாத்தனமாக கீழே வந்த சந்தானம் வசமாக சிக்கினான் அப்பாவிடம் .

டேய் கணக்குல எவ்வளவு?  இந்தக்கேள்வியை 11 ஆண்டுகளாக எதிர்கொண்ட சந்தானம்  பனங்காட்டு நரி  

“புதுசா என்ன வந்துடும் அதே 32 தான். அதுக்கு மேல இருந்தா நானே சொல்லிருப்பேனேஎன்று ஆடிட்டர் மாதிரி பேசினான்.. ரங்குவுக்கு கோபம் தலைக்கேறியது.  ஏண்டா நாயே இங்கிலீஷிலே ?  

சந்தானம் -          46

அப்பா நீங்க இங்கிலீஷிலே எவ்வளவு. ?-சந்தானம்

“அப்பல்லாம் 60 மார்க்கே போட மாட்டான் ; பெஸ்ட் மார்க்கே 62-63 தான். .100 லாம் கிடையாது”.

“சரிப்பா   நீங்க  63 வாங்கிருக்கீங்களா?” -சந்தானம்  கண்ணாடி யணிந்த ஆந்தை போல் பேந்த பேந்த விழித்தார் ரெங்கு .

‘ரெங்கு வேணாம் வேணாம் னு அடிச்சுண்டேனே -கேட்டியா? இப்ப பிள்ளையாண்டான் கேக்கறான் சொல்லுஎன்றார் கோமதி. . “எதுக்கும்மா பழசையெல்லாம் பேசணும்”. -ரெங்கு. .

‘ஏன் உனக்கு கூச்சமா இருக்கா. நான் சொல்றேன்  ;அந்த சீனிவாசய்யருடைய பிள்ளைகள் 3 அண்ணன்  தம்பிகளோடும் படித்த பெருமை உனக்கே .

8ம் க்ளாஸ் ஐந்தாண்டு திட்டம் மாதிரின்னா உக்காதிருந்த;அதான் அண்ணா-தம்பி எல்லோரோடும் படிச்ச , வெக்கமா இல்லை உனக்குஎன்றுபொரிந்தாள் கோமதி அம்மாள்.

அப்போது வாசலில் சாமீ , ரெங்கசாமி என்று குரல் கேட்டது. என்னது ஏ-ரெங்கசாமியா-- என்று குடும்பமே அதிர்ந்தது..

ரெங்கசாமி, என்ற அந்த "உரிமைக்குரலை"க்கேட்டு குடும்பமே வாசலுக்கு விரைந்தது.       பச்சை  சட்டை வெள்ளை வேட்டி, நெற்றியில் விபூதிப்பட்டை நடுவில் வட்ட குங்குமம் இருபுறமும் 3 வரிசை சந்தனக்கீற்று வாயில் வெற்றிலை , வலது கையில் ப்ரேஸ் லெட்,    கை இரண்டும் பின் புறம் ,உடலும் கையும் சேரும் இடத்தில் பாய் ஜமுக்காளம் , பாக்கட்டில் தடித்த பிசுக்கேறிய புத்தகம் . மந்திரவாதி போல் தோற்றம் . இடது கையில்?

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

RENGAA VENDAAM

RENGAA VENDAAM                     ரெங்கா வேண்டாம் ... காலை 7.00 மணி வீடே திமிலோகப்படுகிறது . என்ன ? ஆம் ½ ஆண்டு பரீட்சை மார்க் ...