LET US PERCEIVE THE SONG -12
பாடலை உணர்வோம்-12
சிலை எடுத்தான் ஒரு [சர்வர் சுந்தரம் -1964] கண்ணதாசன்
, விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி சுசீலா குழுவினர்.
படத்தின் துவக்கமே பாடல் என்றமைந்த பல நிகழ்வுகளில் பாடலும்
படமும் வெற்றி அடைவதென்பது, எழுதப்படாத விதி போலும். அதைப்போன்ற ஓர் காட்சி தான் சர்வர்
சுந்தரம் படத்தில்..
பாடல் மஹாபலிபுரம் கடற்கரையில். . கதையை எளிதாக துவக்க
பாடல் உதவுதல் அந்நாளில் சகஜம், ஏனெனில் அன்றெல்லாம் கதை இருந்தது , எனவே அதையும் துவக்க
பாடல் எளிய டெக்னீக். நாயகி ஓட்டல் முதலாளியின் பெண் தோழியருடன், பிக்னிக் வந்து பாடி ஆடி குதூகலிக்கக்
கூட்டமாக குவிந்துள்ளனர். வேறென்ன ஏவிஎம் நிறுவனத்தின் பெண் நடன மாதர், டான்ஸ்மாஸ்டர்
சாந்தா உள்பட அனைவரும் ஆட்டத்தில் பங்குகொள்ள. கவியரசரின் பாடல்
இசை யின் துவக்கம்
“சிலை எடுத்தான் ஒரு சின்னப்பெண்ணுக்கு”
கவிதை
சிலை எடுத்தான்
ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான்
அவள் வண்ண கண்ணுக்கு [
ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான்
அவள் வண்ண கண்ணுக்கு
அவள் உடலினிலே
ஆட விட்டான்
இந்த கடலினிலே [2]
தொட்டு பார்க்க
கவிஞர்கள் தமிழால்
தட்டி பார்க்க [2]
போட்டி போட
பொல்லாத பருவத்தை கல்லாக்கியே
சிலை எடுத்தான்
ஒஓஓ..
ஆக்கிவைத்தான்
பருவத்தின் சாரத்தை
தேக்கி வைத்தான்
கன்னி பெண்ணை தேரினில்
தூக்கி வைத்தான்
காதலை ஏன் அவன்
பாக்கி வைத்தான்
MUSIC
லாலலால லாலலால...
MUSIC
அன்னமிவள் வயதோ
பதினாறு
ஆண்டுகள் போயின
ஆறுநூறு
இன்னும் இவள் முதுமை எய்தவில்லை
என்னதான் ரகசியம் தெரியவில்லை
சிலை எடுத்தான்
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே
சிலை எடுத்தான்
பல பாடல்களில் இல்லாத அமைப்பாக, பல்லவி குறைந்தது 6 முறை பாடப்பட்டுள்ளது. அது மட்டுமா?
சரணங்கள் குறைந்தது 4 பகுதிகளில் வரக்காணலாம். சரி பாடலின் நுணுக்கங்களைப்பார்க்கும் முன், சில தகவல்களை
குறிப்பிட வேண்டும்.
கருப்பு வெள்ளைப்படம்
எனவே மொட்டை வெய்யிலில் படப்பிடிப்பு நடந்துள்ளது, நடனக்குழுவினர்
கடுமையாக உழைத்துள்ளனர் .
எப்படி எனில், வெவ்வேறு வகை நடன அசைவுகள், ஒவ்வொரு அடியாக
ஆடிக்கொண்டே முன்னேறுதல், நாயகியுடன் அவ்வப்போது முதன்மை நடன கலைஞர் சாந்தா ஆடிவர
.பாடல் கம்பீரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிற நாரிமணிகள் அவ்வப்போது நாயகியை சூழ்ந்து
கொண்டு ஆடுவது, நடனப் பாடலில் அமைந்துவிடக்கூடிய குறையை தவிர்க்க பெரிதும் உதவியுள்ளது..
இவற்றை உணர பாடலை பலமுறை கேட்க/ காண வேண்டும். மேலும் இந்தப்பாடலை காட்சிப்படுத்த ஒளிப்பதிவுக்குழு
கடுமையாக உழைத்துள்ளதை உணர முடிகிறது. வெளிப்புறக்காட்சிக்கு பளீரென்ற ஒளிவிளக்குகள்
அமைக்கவேண்டியதில்லை தான் ;ஆனால் வேவ்வேறு கோணங்களில் reflectors எனும் பிரதிபலிப்புப்பலகைகளை
ஏந்திப்பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும் அவர்களே light boys எனப்படுவோர். ஏனெனில் நடனங்களில்,
காமெராக்கோணங்கள் மாறிக்கொண்டே வரும் அதற்கேற்ப reflector அமைப்பு மாறும் .அவற்றை
மாறிமாறி வெவ்வேறு கோணங்களில் தூக்கிப்பிடிக்க நல்ல அனுபவமும் சுறுசுறுப்பும் வேண்டும்.
ஏனெனில் 4.00, 4.30 மணிக்குமேல் சூரிய ஒளி சாய்வாக பாயும் , அப்போது நடிகர்களின் கண்
கூச துவங்கும். கண்ணை இடுக்கிக்கொண்டு. நடனக்காட்சியில் நடிக்க நாயகியர் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்
அவர்களின் திரைவாழ்வு கேள்விக்குறியாகும். ஆண் நடிகர்கள் கருப்புக்கண்ணாடி மாட்டிக்கொண்டு
நடித்துவிடலாம். பெண்கள் நிலை அப்படி அல்ல. ஏனெனில்,
eye
lashes பொருத்திய இமைகளை படபட
என்று அடித்து நடிக்கும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் குவியும், இவ்வனைத்துக்கும் ஒளிப்பதிவுக்குழுவினர்
சிறப்பாக ஒத்துழைப்பு அளித்துள்ளனர் என உணர முடிகிறது.. பட்டப்பகலில் நீல வானம் கருமையாகத்தெரிகிறது,
கடல்நீர் கூட அடர் கருப்பு கொள்கிறது. அதுதான் ஒளிப்பதிவின் கைங்கரியம்.
ஆம் கடற்கரை
போன்ற இடங்களில் ஒளி தேவைக்குமேல் பன்மடங்கு பிரகாசமாக இருக்கும் [அதுவும் பட்டப்பகலில்] . அதற்காக காமெராவை அட்ஜஸ்ட் செய்தால்
கருமை நிற முகங்கள் மேலும் இருள் கொள்ளும். திரையில் பார்க்க விகாரமாகும்.. அதனால்
நீலவானத்தை அடர்த்தியாக்கிவிட்டால், இருக்கும் ஒளிக்கேற்ப N
D பில்டர் மாட்டி தலைமை ஒளிப்பதிவாளர்
காட்சியை அழகாக. சமாளித்துவிடுவார். அதைத்தான்
செய்துள்ளார், திரு மாருதிராவ் இந்தக்காட்சியில்.
yellow filter அணிந்த கமெரா நீலப்பகுதிகளை
, மங்கலாக்கி விட கடல் நீர் , வானம் இரண்டும் கருமைகொள்ள, மேகக்கூட்டங்கள் பளிச்
என பதிவாகும். அதுவும் ஆங்காங்கே தெரிகிறது.மொத்தத்தில் கடும் உழைப்பின் வெகுமதி இப்பாடல்,
மற்றும் காட்சி..
இசை அமைப்பில் முற்றிலும் மாறுப்பட்ட உத்திகள் இப்பாடலின்
சிறப்பு அவற்றை அடுத்த பதிவில் பேசுவோம்
https://www.youtube.com/watch?v=2ZnWq_yalFU
silai eduththaan maruthi rao
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment