P B SRINIVAS-5
பி பி ஸ்ரீனிவாஸ் -5
இந்த மன்றத்தில் [போலீஸ் காரன் மகள் -1963] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஏசுஜானகி, பி பி ஸ்ரீனிவாஸ்
இப்பாடலில் 'தன் கண்ணனை தேடுகிறாள் மன காதலைக்கூறுகிறாள் , இந்த அண்ணனை மறந்து விட்டாள்’ என்று அவனும் அதே தென்றலை தூதுக்கு அழைக்க , எவ்வளவு இயற்கையான காட்சி. இன்றைய தமிழ் சினிமாவில், இதுபோன்ற மென் உணர்வுகள் மருந்துக்குக்கூட இல்லை.
அண்ணன்களே தாடி, போதை, புகை என்று அலைய மென் உணர்வாவது சுயநினைவாவது-- களம் ரொம்பவே மாறிவிட்டது. வெறும் ஒரு flute உதவியால் எத்துணை சஞ்சல உணர்வுகளை பதிவிட்டுள்ளார்
எம்
எஸ்
வி.
கேட்டு
மகிழ
இணைப்பு
இதோ .
பூஜைக்கு வந்த மலரே வா [பாத காணிக்கை -1963] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,பிபி ஸ்ரீனிவாஸ் எஸ் ஜானகி
இது ஒரு கனவுப்பாடல் எனவே உள்ளம் மிதப்பது போன்ற உணர்வு, எனவே கோரஸ் இணைத்துள்ளார் எம் எஸ் வி. பாடலில்.
எவ்வளவு
பூரிப்பான
மன
ஓட்டம்,
சொல்லொணா
இன்பத்தில்
மிதக்கும்
மனங்கள்
சொற்களில்
கம்பீரம்
வற்றாத
மொழி 1960
களில்
தமிழ்
சினிமாதொட்ட
உயரம்
மகத்தானது.
எளிமையான
ஆனால்
வலிமையான
இசை,
சொல்
குரல்
என
அனைத்திலும்
முதல்
ரகம்
. கேட்டு மகிழ இணைப்பு இதோ
பாடலின் நளினங்களை மேலும் உணர "கோபால் சப்தஸ்வரம்
" குழுவினரின் இதே பாடலை கேட்டு அனுபவிக்க இணைப்பு இதோ
அழகுக்கும் மலருக்கும் [நெஞ்சம் மறப்பதில்லை -1963] கண்ணதாசன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி எஸ் ஜானகி பிபி ஸ்ரீனிவாஸ்
ஓரு சிறிய ரேக்ளா வண்டியில் தோட்டத்தினுள் பயணித்த காதலர்கள், அழகுக்கும் மலருக்கும் ஜாதி இல்லை என்று பணக்கார ஜமீன் -ஏழைப்பெண் காதல் ;விறுவிறுப்பான காதல். சுறுசுறுப்பான குதிரை பூட்டிய ரேக்ளா வில்
விரைந்து ஓடிவர பாடல் காட்சி [திருச்சூர் பழ தோட்டம் ].
பாடல் முழுவதும் முகபாவங்களையும், அங்க சேஷ்டைகளையும் தவற விடாமல் கவனியுங்கள்.
இருப்பது இருந்தபடி என்ற ஆங்கில சொல்லாடல் போல [As is where is ] காட்சியில் இயல்பான சூரிய ஒளி மட்டுமே உதவிட கமெரா காட்சியை உண்மை விலகாமல் பதிவிட்டுள்ள பெருமைக்குரியது. ஹாலிவுட் ரக ஒளிப்பதிவு. அதிகப்படி ஒளி /reflector இன்றி நிழலோ, அரைகுறை ஒளியோ /ஒளிக்கீற்றோ, கண்ணால் கண்டதை பதிவிட்ட வின்சென்ட் சுந்தரம் , எப்போதோ தொழிநுட்பத்தில்
உச்சம்
தொட்டனர்.
காமரா குதிரையோடு ஒடிப்பயணித்து இடை விடாமல் பதிவிட்ட காட்சியை பார்க்கும் போது - தத்ரூப உணர்வு நம்மை பற்றிக்கொள்ள நாம் உணரவேண்டியது 1960 களில் மூளையே மூலதனம் என்று செயல்பட்ட திரைப்படக்குழுவினர் பெரும் மரியாதைக்குரியவர்களே.எங்குமே செயற்கைத்தனம் இல்லாத படப்பிடிப்பு. கண்டு மகிழ இணைப்பு இதோ
https://www.google.com/search?q=azhagukkum+malarukkum+jadhi+illai+video+song&newwindow=1&sca_esv=f0149a8253a94ec9&sxsrf=AHTn8zrkf2bR87Vw54Ex27TaC8J8mxxumg%3A1740808408882&ei=2KDCZ6XLNdzDvr0Pv6HWkAM&oq=azhagukkum+malarukkum+jadhi+illai+video+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiKGF6aGFndWtrdW0gbWFsYXJ1a2t1bSBqYWRoaSBpbGxhaSB2aWRlbyAqAggA azhagukkum malarukkum nenjam
marappadhillai 1963 kd v r pbs sj
ஜானகியை கண்டெடுத்ததாக பேருவகை கொள்வோரே , 63 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் [ஜானகி ] கொடிகட்டிப்பறந்துள்ளார்
என்பதை
இந்த
சிறிய
பதிவில்
இருந்து
அறியலாம்
தொடரும்
அன்பன் ராமன்
Once again, a lovely collection of PBS golden voice....
ReplyDelete