Tuesday, March 4, 2025

A BHIM SINGH 3

 A BHIM SINGH 3

A-பீம்சிங்-3

இன்றைய பதிவில் , ஆரம்ப கால விஸ்வநாதன்-ராமமூர்த்தி -பீம்சிங் கூட்டணியில் வெளிவந்த அருமையான பாடல்கள்  இடம் பெறுகின்றன. அன்பர்கள் கவனம் செலுத்தவேண்டிய அம்சங்கள் வருமாறு :

1 அனைத்தும் கருப்பு வெள்ளைப்படங்களே எனவே காட்சிகளில் வசீகரம் குறைவு , ஆனால் கம்பீரம் கண்ணியம் இரண்டும் அதிகம் . உடையமைப்பில் சாதாரண நடுத்தர வர்க்க குடும்பப்பாங்கு, உடலை மறைத்த ஆடை, பாவங்களை பளிச்சென வெளிப்படுத்தும் நடிப்பு, பாடலின் மிடுக்கு [காட்சியை ஊன்றி உணர்ந்து எழுதப்பட்ட கவிதை] இசை மென்மையான உணர்வுகளைப்பேசும் யதார்த்தம், தாள ஒலிகள் வெகு இயல்பு மொத்தத்தில் 1960 களில் வி-ரா வழங்கிய மென்மையான ,மேன்மையான பாடல்கள். சுமார் 5, 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடல் அமைப்பில் அவ்வப்போது விஸ்வநாதன் தொடர்ந்து அறிமுகப்படுத்திய மாடெர்னைசேஷன் .என்னும் முன்னேற்றங்கள் ,செவ்வனே புரிந்துகொள்ளத்தக்க வகையில் தெளிவாகிறது.

தங்கத்திலே  ஒரு [பாகப்பிரிவினை] 1959 கண்ணதாசன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி , பி சுசீலா

ஒரு கை செயலிழந்த கணவன், மனம் வாடி இருக்க அவனை மனம் தளராமல் காக்க மேலான பண்புகளை விவரித்துப்பாடும் நாயகி. பாடல் அந்நாளில் தமிழ்நாடெங்கும் முழங்கிய அசரீரி . நேர்த்தியான ஒப்பீடுகள் ,அன்பான சொற்கள் , எந்த நிலையிலும் உன்னுடன் தொடர்வேன் என்று தீர்க்கமாக தெம்பூட்டிய பெண். இருவரின் முக பாவங்களும் குறை சொல்லமுடியாத முழுமை. பாடல் மனத்திற்கு தெம்பூட்ட , இசை வெகு மென்மையான அமைப்பில் , குறைந்த கருவிகள் ஆனால் நிறைந்த சுகம் அளிக்கும் திறன் கொண்டது. வி-ரா பற்றி சினிமா ரசிகர்கள் பரவலாக- ப்பேச துவங்கியிருந்த காலம் -இசையின் பொற்காலம் . பாடலுக்கு இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=_9wznix9OSQ THANGATHTHILE ORU  BAAGAPPIRIVINAI 1959 KD   V R  PS

 

காதல் சிறகை [பாலும் பழமும் -1963] கண்ணதாசன் , விஸ்வநாதன் -ராமமூர்த்தி , பி சுசீலா

விளக்கவொண்ணாத உன்னதம் இப்பாடல், கவிஞன் ஒருபுறம் மனக்குமுறலை தேர்ந்த தத்துவங்கள் வழியே அரங்கேற்ற , இசை தன்  பங்கிற்கு வெளிப்படுத்திய   பெண்மையின் மன அர்ப்பணிப்பு ; விஸ்வநாதனின் இசை அமைப்புத்திறனை அதியற்புதமான ஒலிக்கலவை மற்றும் பாடும் பாவம் வழியே வெளிச்சம் போட்ட ஆரம்பகாலப்பாடல்களில் தலையாயது. உதாரணம் : இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி[இரு கை கொண்டு வணங்கவா?] என்ற சொற்றொடரை இரண்டுமுறை பாட வைத்து சோகத்தை பிழிந்த திறமை. கவிஞன் தன பங்கிற்கு பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால்  கொஞ்சம் நிம்மதி , பேச மறந்து சிலையாய் இருந்தால் பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னதி பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் காதல் சன்னதி  என்று மனப்போராட்டங்களின் வலிமையை எளிதாய் சொல்லிவிட்டானே, அந்தக்கவியும் இசை அமைப்பாளனும் இனி எங்கே கிடைப்பர் ? திரைப்பாடல் ஏழ்மை ஆயிற்று. பாடலுக்கு இணைப்பு 

https://www.google.com/search?q=haadhal+siragai+kaatrinil+viriththu+video+song+download&newwindow=1&sca_esv=b6effe6b46dbd085&sxsrf=AHTn8zrA30t5N8j2_d2C4o0M4PVfoFRb1A%3A1740905695581&ei=3xzEZ-uVI8OO4-EPxZWwkAc&oq=HAADHAL+SIRAGAI+KAATRINIL+VIRITHTHU++VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiMEhBQURIQUwgU0lSQUdBSSBLQUFUUklOSUwgVklSSVRIVEhVICBWSURFTBTT05HICoCCAAyBxAhGKABGAoyBxAhGKAB PAALUM PAZHAMUM 1963 KD VR PS

ஆலய மணியின் ஓசையை  [பாலும் பழமும் -1963] கண்ணதாசன் , விஸ்வநாதன் -ராமமூர்த்தி , பி சுசீலா

இது ஒரு குதூகலப்பாடல் ; அதை இசை அரங்கேற்ற , கவிஞனின் சொற்களில் தான் எவ்வளவு ஆழம் ,ஆலய மணியும், பறவைகள் ஒலியும் அவளின் காதலுக்கு கட்டியம் கூற , என் இறைவன் அவனே அவனே எனும் ஊக்கம் விளைந்ததாகப்பா, பின்னர் உன் தலைவன் அவனே அவனே என தாய் மொழிந்ததாக உவகை கொள்ளும் பெண். இது போன்ற மகிழ்ச்சி பாடலில் ஷெனாய் இசைக்க எவருக்காவது துணிவு வருமா? விஸ்வநாதனுக்கு வரும் ஏனெனில் பல ஒலிகள் பின்னிப்பிணையும் போது ஒலி யும் உணர்ச்சியும் காற்றில் மிதக்க , காட்சி தெய்வீக காதல் மணம் கொள்ளுதல் இயல்பன்றோ? கேட்டு மகிழ இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=paalum+pazhamumovie+aalaya+maniyin+osaiyai+video+song+download&newwindow=1&sca_esv=b6effe6b46dbd085&sxsrf=AHTn8zrYv2_PTBPcn0W4c-d6NM3xsOGa-g%3A1740906169218&ei=uR7EZ7uCDcWY4-EPxvjf-AQ&oq=paalum+pazhamumovie+AALAYA+MANIYIN+OSAIYAI+VIDEO+SONG+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiNnBhYWx1bSBwYXpoYW11bW92aWUgQUFMQVlBIE1BTklZSU4gT1NBSVlBSSBWSURFTyBTT05HICoCCAEyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGAoyBxAhGKABGApIo-0BUKoKWI3NAXABeAGQAQCYAdUBoAG_KaoBBjAuMzYuMbgBAcgBAPgBAZgCJaAC8CnCAgoQABiwAxjWBBhHwgIFEAAY7wXCAgoQIRigARjDBBgKmAMAiAYBkAYIkgcGMS4zNC4yoAe0tgE&sclient=gws-wiz-serp#fpstate=ive&vld=cid:64987d65,vid:Oi74iRUuJQk,st:0 AALAYAMANIYIN OSAIYAI

வளரும்

அன்பன்  ராமன்

 

No comments:

Post a Comment

A ‘WE TWO’ COMBO

  A ‘WE TWO’ COMBO   நாமே இனி இது என்ன விடுகதையா எனில் இல்லை இது விடு கதையம் அ ல்ல , நான் விடும் கதையும் அல்ல . இது இந்த...