Sunday, April 6, 2025

AVOIDING MISTAKES-4

AVOIDING MISTAKES-4     

பிழை தவிர்த்தல் -4

பிழைகளுக்கு குறைவு இல்லை ஆனால் பிழை சொன்னால் ஏற்போர் இல்லை. மாறாக பொருளற்ற விளக்கம் தர எவரும் தயங்குவதில்லை. இது ஏன் நிகழ்கிறது என்று கவனமாகப்பார்த்தால் சில உண்மைகள் தெரிகின்றன.

1 தவறு என்று தெரியாமலே கற்பிக்கும் சில ஆசிரியர்கள் , அதை முற்றாக ஏற்கும் மாணாக்கர்கள்.

2 பல நாட்களாக தவறையே   பேசி / எழுதி வந்தவர் தனது நிலைப்பாடு பிழையானது என ஏற்க மறுக்கிறார்.

3 பலரும் ஒரே மாதிரி பிழையை வெளிப்படுத்துவதால், சுட்டிக்காட்டப்படும் 'திருத்தம்' அவருக்கு நம்பிக்கை தரவில்லை.

4 சரி வா பார்த்துவிடுவோம் என்று உரிய அகராதி யை நாடி உண்மை அறிய பலர் முயல்வதில்லை அது ஏன்? என்பது எனக்கு புரியவில்லை. டிக்ஷ்னரி, தெசாரஸ் போன்ற நம்பிக்கைக்குரிய தகவல் களஞ்சியங்கள் பற்றிய புரிதலே இல்லாமல் ஒரு பெரும் கூட்டம் பட்டதாரிகள் என்று உலவி வருவதை என்னென்று சொல்ல? இவ்வனைத்துக்கும் காரணம் verification என்னும் சரிபார்த்தல் செயலை பள்ளி நாட்களிலேயே பழகிக்கொள்ளாமல் உயர்கல்வி வரை வந்துவிட்டவர்களால், சரிபார்த்தல் மேற்கொள்ள நாட்டம் இல்லை.. இவை எல்லாம் வேரூன்ற வைத்த அவலம் ஒன்று உண்டென்றால், அது நோட்ஸ் என்னும் கறிக்குதவாத பொருள் எனில் மிகை அல்ல.

முன்னாட்களில் ஆசிரியர் வாய் வழி சொல்லாட , பயில்வோர் எழுதிக்கொள்வர். ஸ்பெல்லிங் போன்ற விவரங்களை டிக்ஷனரி கொண்டு சரி செய்து வந்தோம்; எனவே தவறாக எழுதாமல் -------------- இடம் விட்டு எழுதி பின்னர் முறையாக நிரப்பிக்கொள்வோம். இந்த நடை முறைகள் எதையும் அறியாமல், நோட்ஸ் படிக்கும் செயல்பாடு வேரூன்றிப்போய், முறையான நூல்களை நாடி பாடங்களைப்படிக்கிற குழந்தைகள் எது சரி, எது தவறு என்றுணராமலேயே /நுனிப்புல் மேய்வோராக வலம் வருகின்றனர்.

REGARDLESS என்று சொல் வழக்கில் உள்ளது. அது REGARD என்ற சொல்லுக்கு எதிர்மறை பொருள் தரும். அதையும் மீறி  IRREGARDLESS  என்று எழுதுகின்றனர் இது ஒரு இந்தியக்குழப்பம் , பின்னர் விரிவாக அலசுவோம்

REGARD என்ற சொல் வெவ்வேறு சூழல்களில் மாறுபட்ட பொருளில் இயங்குவது.

YOU SHOW REGARD எனில் நீ கவனம் /அன்பு செலுத்து என பொருள்படும்.

WITH REGARDS எனில் நிறைந்த அன்பு/ பாசத்துடன் என பொருள் படும்.

AS REGARDS  / WITH REGARD TO எனில் 'இது' சம்பந்தமாக அல்லது இது தொடர்பாக என்று ஒரு பீடிகையாக பொருள் தரும். சான்றாக, AS REGARDS MY VISIT TO  DELHI  [WITH REGARD TO or REGARDING   MY  DELHI VISIT,  ] , NO DECISION HAS BEEN TAKEN YET  எனும் வாக்கியம் தரும் பொருள்

எனது டெல்லி பயணம் குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறாக பிரிட்டிஷ் வகை ஆங்கில சொல்லாடலி ல்  REGARD என்பதும் REGARDS என்பதும் உணர்த்தும் பொருள் / PREPOSITION  வெவ்வேறு . ஆனால் அமெரிக்க ஆங்கில மரபில் REGARD என்பதும் REGARDS என்பதும் கிட்டத்தட்ட ஒன்று என்பது போல் பயன்படுவதைக்காணலாம்.

 நமது நாட்டு ஆங்கில செய்தி ஊடங்கங்கள் அமெரிக்க மரபு சொல்லாடல்/ பிரிட்டிஷ் வகை சொல்லாடல் இரண்டையும் கையாள்வதால் சற்று தெளிவின்மை தலை தூக்குவதை க்காணலாம் . -ம் . WITH REGARDS TO LANGUAGE BILL , NO ANNOUNCEMENT FROM PRESIDENT TILL  NOW என்று தலைப்பிடுகிறார்கள் . இது போல் போகிறபோக்கில் எழுதி/ பேசி, மொழியில் தெளிவின்மையை விதைக்கிறார்கள்.

சரி, சில சொல் அமைப்புகளை கூர்ந்து கவனிப்போம்

பிரிட்டிஷ் ஆங்கில மரபில்

AS REGARDS = WITH REGARD TO; அதாவது AS REGARDS TO என எழுதுவதோ, பேசுவதோ தவறு WITH REGARDS = அன்புடன் என்று உணர்த்துவது; WITH REGARD TO என்பது 'இது தொடர்பாக ' என பொருள் படும். இணைப்பு சொற்கள், சில இடங்களில் இரண்டும் பயன்படும் [WITH REGARD TO ] சில இடங்களில் ஏதேனும் ஒன்றே அமையும் [WITH  REGARDS ] 

இது போன்ற விதிமுறைகள் பிரிட்டிஷ் ஆங்கில இலக்கணத்தில் அதிகம் ஆனால் துல்லியம் வெகு வலுவானது.. நம்மவர்கள்  'அதனால் என்ன ஒரு 'S ' தானே, WITH , OF , AT இவைகள் தானே என்ன பெரிய தவறு நிகழ்ந்துவிட்டது ? என்று சமாதானம் பேசுவர்.

 நண்பர்களே மொழி விதிகள் கடைபிடிக்கும் வரையே அம்மொழியின் சிறப்பு நிறுவப்படும். எந்த மொழியையும் சிதைப்பதற்கு நாம் யார்? ஆனால் அறியாமையை மூடி மறைக்க ஏதேதோ பேசி தற்காப்பு தேடுகிறோம். தமிழில் "பொர்க்கை பாண்டியன் கர்க்க போனான்" என்று எழுதிவிட்டு நியாயப்படுத்த  இயலுமா?

 இன்னும் சில

[S ]he  is good at english  என்பதை [S ]he is  good   in english என்றுசொல்லி அதனில் என்ன தவறு   என்று       நியாயப்படுத்துகிறோம். வெவ்வேறு மொழிகளில், சொற்களும், சொல்லாடலும் வேறு நடைமுறைகளில் அமைவன. . நமது மொழி அமைப்பில் சரியாக இருக்கும் சொல் வரிசை வேறு மொழியில் வேறு வகையினதாக இருக்கும். அவற்றின் செயல் வடிவங்கள் அந்தந்த மொழியின் மரபு ஒட்டி பயன்படுத்தப்படும் போ து தான் , நம் அந்த மொழியை அறிந்தவர் என்ற தகுதியை பெறுகிறோம். I fear God என்பது வேறு,I FEAR FROM GOD என்பது வேறு. முன்னது[ I  fear God] இறைவன் மீது இருப்பது  மரியாதை கலந்த  பயம். பின்னது [FEAR FROM] என்பது பாம்பு, சிங்கம் புலி போன்றவற்றை குறித்து எழும் அச்சம் போல இறைவன் துன்பம் விளைவிப்பான் என்ற எண்ணத்தினால் தோன்றும் அச்சம் மட்டுமே. பலரும் ,I FEAR FROM GOD என்று பெருமிதத்துடன் சொல்லுவதை எவ்வாறு புரிந்து கொள்ள இயலும்?

எனவே CONJUNCTION , PREPOSITION , இவை குறித்த செயல் முறை சட்டங்கள் பற்றி தெரிந்து செயல் படுவதே சரியான அணுகுமுறை . CONTINUAL / CONTINUOUS இவைகளும் ஒரே பொருள் தருவன அல்ல.. JUDICIOUS / JUDICIAL   இரண்டும் வெவ்வேறு. SUPERFICIAL மற்றும் SUPERFLUOUS இரண்டும் ஒன்றல்ல. இன்னும்   நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டிய மொழி சார்ந்த விதி முறைகள் எண்ணற்றவை.

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

P B SRINIVAS -10

  P B SRINIVAS -10 பி பி ஸ்ரீனிவாஸ் –10 யார் யார் அவள் யாரோ [ பாசமலர் -1962] கண்ணதாசன் , விஸ்வநாதன் - ராமமூர்த்தி , பி பி ஸ்...