P B SRINIVAS -9
பி பி ஸ்ரீனிவாஸ் -9
தென்னங்கீற்று [பாதை தெரியுது பார் -1960] ஜெயகாந்தன் , எம் பி சீனிவாசன் , பி பி எஸ், எஸ் ஜானகி
வெகு இயல்பான கிராமீய மணம் கொண்ட பாடல் -எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆக்கம் ; நேர்த்தியான உணர்வுகளுடன் பி பி ஸ்ரீனிவாஸ் -ஜானகி குரல்களில் . கிராமியப்பாடலுக்கும் ஜானகியின் திறமைக்கும் பங்கு கோரும் அன் பர்கள் , இவை 1960 இல் உருவான பாடல் மூலம் எப்போதோ ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக ளை ப் பெற்ற இனிய பாடல்கள் என நினைவு கொள்ளுதல் நன்று. பாடலுக்கு இணைப்பு இதோ
T
JAYAKANTHAN, MB SRINIVASAN , PBS S JANAKI
நான் பாடிய பாடல் [வாழ்க்கை வாழ்வதற்கே -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் -ராமமூர்த்தி ,
பிபி
ஸ்ரீனிவாஸ்,
பி
சுசீலா
இது ஒரு நாடகக்காட்சியில் அமைந்த பாடல். நாடகத்தனம் இல்லாமல் நேர்த்தியாக அமைந்த சொறிகளும் இசையும், பாடலின் போக்கும் கேட்க ரம்மியமானவை . பலருக்கும் இந்தப்பாடல்கள் தெரிவதில்லை. இதே படத்தில் நல்ல பாடல்கள் பல உள . பாடலுக்கு இணைப்பு இதோ
NAN
PADIYA PADAL MANNAVAN KETTAN VAZHKAI VAZHVADHARKE -1964 ,KD V R , PBS PS
ஆத்தோரம் மணல் எடுத்து [வாழ்க்கை வாழ்வதற்கே -1964] கண்ணதாசன் விஸ்வநாதன் -ராமமூர்த்தி ,
பி
பி
ஸ்ரீனிவாஸ்,
பி
சுசீலா
சிறு பிராயத்தில் பாடிய பாடலை பின்னாளில் பெரியவர்கள் சோகமாக படுவதாக அமைந்த காட்சி. திரைப்படங்கள் வர வர செயற்கைத்தனமாக ப்போய் விட்டதை இது போன்ற பாடல்கள் வலியுறுத்துவது வலிக்கத்தான் செய்கிறது. சொல்லிலும் இசையிலும் வேரூன்றிக்கிடக்கும் இல்லச்சூழல் ;இனி எங்கு தேடினாலும் கிடைக்காது. பாடலுக்கு இணைப்பு இதோ
AATHORAM
MANAL EDUTHU V V -1964 , KD V R , PBS PS
சித்திரமே சொல்லடி [வெண்ணிற ஆடை- 1965] கண்ணதாசன் , விஸ்வநாதன் -ராமமூர்த்தி ,
பிபி
ஸ்ரீனிவாஸ்,
எஸ்
ஜானகி
ஸ்ரீகாந்த் வெண்ணிற ஆடை நிர்மலா பங்கு கொண்ட டூயட், பிபி எஸ் வெகு அன்பாக துவங்க நளினமாக பயணித்த பாடல். . முக்கியமாக, பல்லவி, சரணம் அனைத்தும் நிதானமாக பயணிக்க , இடை இசையில் வரும் கிடார் குழல் , ட்ரம்ஸ் போங்கோ அனைத்தும் வேகம் கொண்டு பாய பாடலின் விறுவிறுப்பு வேறு நிலையை எட்டி கேட்பதற்கு இனிமையான அனுபவம். பாடலுக்கு இணைப்பு இதோ
CHITHIRAME
SOLLADI [VENNIRA AADAI-1965] KD VR PBS S J
நீ சொல்லு, நீயே சொல்லு [குமரிப்பெண்
-1966] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்வநாதன் , பிபி ஸ்ரீனிவாஸ் எல் ஆர் ஈஸ்வரி
ஒரே பாடலில் குறும்பும் , கரும்பும் சேர்ந்தார் போன்ற நளினம். அதிலும் எல் ஆர் ஈஸ்வரிசரியான பிச்சில் பாடி, பட்டையைக்கிளப்பி நீ சொல்லு , ஹூம்ஹூம் நீயே சொல்லு என்னும்போது தோன்றும் வசீகரம் ஒருவகை எனில் பி பி எஸ் பாடும் சரண சங்கதிகள் வெகு நேர்த்தி மற்றும் துடிப்பு நிறைந்தவை . இருவரும் சைக்கிளில் பயணித்து ப்பாடிய அந்நாளைய டூயட் . அதிலும் வி-ரா பிரிந்து எம் எஸ் வி , டி கே ஆர் என்று ஆனநிலையில் இது
ஜெயலலிதா வின் 4வது படம் குமரிப்பெண் ; தயாரிப்பு டி ஆர் ராமண்ணா , எனவே பாடல்களில் இசையின் தாக்கம் இருப்பதில் வியப்பென்ன ? மொத்தத்தில் அருமையான காட்சி, மற்றும் பாடல் . இணைப்பு இதோ
NEE
SOLLU [KUMAREUPEN 1966] KD, MSV , PBS LRE
வளரும்
அன்பன்
ராமன்
No comments:
Post a Comment