Sunday, May 4, 2025

AVOIDING MISTAKES-8

 AVOIDING MISTAKES-8

பிழை தவிர்த்தல் -8

பிழை தவிர்த்தல் என்பது பல அம்சங்கள் கொண்டது. அவை எழுத்து வரிசை [SPELLING], உச்சரிப்பு [PRONUNCIATION] NOUN [பெயர்ச்சொல்] VERB [வினைச்சொல்] என வெவ்வேறு அமைப்புகள் கொண்டது.                     ஆங்கிலத்தைப்   பொறுத்தவரை, அடிப்படை வகை BRITISH ENGLISH எனப்படுவது.

ஆனால், பின்னாளில் பொருளாதார குறியீடுகளால் முன்னேற்றம் கண்ட வகை AMERICAN ENGLISH எனப்படுவது. . முன்னது மரபு அடிப்படையில் இயங்குவது , பின்னது CONVENIENCE எனும் சௌகரிய நிலையை முன்னிலைப்படுத்தி இயங்குவது. எனவே   AMERICAN ENGLISH வகையில் சொற்கள் எளிமைப்படுத்தும் விதமாக எழுத்துக்குறைப்பு செய்வது அதிகம்

உதாரணம் COLOR [COLOUR], HONOR [HONOUR], PROGRAM [PROGRAMME] அடைப்புக்குறிகளில் இருப்பவை BRITISH மரபில் அமைந்தவை.  கணினிகளில் இருக்கும் ஆங்கில SPELLCHECK -அமெரிக்க வகையில் அமைந்தது, முனைந்து தேடி பிரிட்டிஷ் வகை எது என்று அறிந்தாலொழிய, கவனக்குறைவாக நாம் உபயோகிக்கும்  நமது ஆங்கில நடை உலகில் இல்லாதபிரிட்டிஷ் அமெரிக்க வகையின் கலப்பு வடிவமாக அமைந்துவிடக்கூடிய இன்னல் விளையலாம் .

இவை தவிர, வேறு வகை குழப்பங்களுக்கும் பஞ்சமில்லை - ஆங்கில மொழியில். ஆங்கில மொழி குழப்பம் நிறைந்தது என்று சொல்லிக்கொண்டு, பல நுணுக்கங்களை சரியாக உள்வாங்கிக்கொள்ளாமல் முறையாக ஆங்கில மொழியில் எழுதவோ பேசவோ தடுமாறிக்கொண்டு, தமில் நாட்டில் எதற்கு ஆங்கிலம், தமிலே போதும் என்று நொண்டிசாமாதானம் சொல்லிவிட்டு, தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் போதிய ஆளுமை இல்லாமல் ஆந்தைகளுக்கு நிகராக விழிப்பதை வேலை வாய்ப்பு நேர்காணலில் அடிக்கடி காணலாம் 

பின் வரும் சொற்களை கவனியுங்கள் பலவற்றிலும் SPELLING அனேகமாக ஒன்றுதான் , சிலவற்றில் சிறிய வேறுபாடு உள்ளது. அவற்றை உரிய நேரத்தில் புரிந்து கொள்வோம். இது என்ன மென்மேலும் குழப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறதே என்று கவலையோ, மலைப்போ கொள்ள வேண்டாம். அவற்றின் தன்மைகளை உணர்ந்துகொண்டால் வெகு எளிதாக அவற்றை பயன்படுத்தலாம் .

RECORD /RECORD      MINUTE/MINUTE

RECORD [noun] , RECORD [verb ]  இரண்டும் வடிவில் ஒன்றே ஆனால் Noun நிலையில் அது ரெக்கட்  என்றும் Verb நிலையில், அதே சொல்வரிசை ரெக்காட் என்றும் உச்சரிப்பதே சரி.

இதை இப்போது பாருங்கள்

YOU RECORD YOUR OBSERVATIONS IN THE RECORD

“யூ ரெக்காட் யுவர் அப்ஸர்வேஷன்ஸ் இன் தி   ரெக்கட்என்று சொல்வர்.

 பதிவிடும் செயல்= ரெக்காட், பதிவேடு= ரெக்கட் என்று கவனமாக சொல்லின் இடம் பார்த்து உச்சரிக்கவேண்டும்.

அதாவது, இட அடிப்படையில் உச்சரிப்பு  வெவ்வேறு மாற்றங்கள் பெறக்கூடும். உதாரணம் Every minute [மினிட்] your observation should be minute [மைன்யூட்] ஒரே சொல் 'minute' ஆனால் உச்சரிப்பு மாற்றம் காண்கிறது.  

CLOTH/ CLOTHE 

Cloth [க்ளாத் ] துணி , CLOTHE [க்ளோத் ] தைக்கப்பட்ட துணி உச்சரிப்பில் வேறுபாடு  CLOTHE என்ற சொல்லில் இறுதியில் வவல் "E " இருப்பதால் முன்னம் உள்ள வவல் 'O ' தனது ஒலியில் என்று ஒலித்து க்ளோத் ஆகிறது.

  SOOTH/SOOTHE   

இவ்விரண்டு சொற்களுக்கும் உச்சரிப்பு ஒன்று தான் ஆனால் sooth [noun] = உண்மை / யதார்த்தம் என்ற பொருள் கொள்ளும்.  Soothe [verb]  =சமாதானப்படுத்து, ஆறுதல் தெரிவி என்ற பொருள் கொள்ளும் 

,LEAD /LEAD , PRACTICE / PRACTISE

இது போன்ற ஒத்த ஒலிகள் தரும் குழப்பம், மிகுந்த இன்னல் விளைவிக்கும். ஏனெனில் ஒரு சொல் எந்த வகை பண்பை உணர்த்துகிறது என்பதே அதன் உச்சரிப்பை நிர்ணயிக்கிறது.. பின்   வருவனவற்றை  நன்கு கவனியுங்கள்.

LEAD [N] உச்சரிப்பு= லெ ட் =[ஈயம்].   LEAD [V] =உச்சரிப்பு லீட் = வழி நடத்து /தலைமை ஏற்று செல்.   PRACTICE   [N] = வழக்கம் /பயிற்சி

இதற்கான வினைச்சொல்- பிரிட்டிஷ் முறையில் PRACTISE எனவும்,     அமெரிக்க முறையில் PRACTICE எனவும் எழுதப்படுகிறது.

அநேக சூழல்களில், வினைச்சொல்லில்- 'C 'க்கு பதில் 'S ' எழுதுவது பிரிட்டிஷ் முறை.

WIND /WIND  

மற்றுமொரு ஒத்த ஸ்பெல்லிங் WIND [N] = காற்று.   WIND [V] = உச்சரிப்பு வைண்ட் = திருகுஅல்லது முறுக்கு. கடிகாரத்திற்கு சாவி கொடுப்பது என்று திருகுவது.

பலர் உளறும் அரைகுறை ஆங்கிலம்: I am giving key to my watch.                                                  I am winding my watch   என்பதே சரி. ஆனால்,“WINDING UP” என்றால், முற்றிலும் வேறு பொருள். அது ஒரு தொழிலை / செயலை நிறுத்திவிடப்போவதாக அறிவிப்பது.We are winding up our medical shop in Bangalore.

வளரும்                                     அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -31

  LET US PERCEIVE THE SONG -31            பாடலை உணர்வோம் -31   ஆயிரம் பெண்மை மலரட்டுமே [ வாழ்க்கைப்படகு -1965]   கண்ணதாசன் , விஸ்வ...