Monday, May 5, 2025

RENGA VENDAAM -7 / 8

RENGA VENDAAM -7 / 8

ரெங்கா வேண்டாம்-7/ 8

நான் பாத்தேன் பகவதி கூட ஒரு மாமா இருந்தார் என்றான் சந்தானம்.

நான் என்ன ஜென்மம்?--  திண்ணைக்கு வந்த மனுஷனை க்கூட கவனிக்கல என்று ரொம்பவே கலங்கினாள் கோமதி.

மைதிலி வியப்பின் எல்லைக்கே போனாள் ; காசு பணம், வஸ்திரம் எதுவும் வேண்டாம் என்கிறார் நினைத்த நேரத்தில் பகவதியை வரவழைக்கிறார். ஏதோ நல்லது நடந்தால் சரி , வெங்கடாச்சாரியும் பெரும் அருள் பெற்ற சுவாமி தான் போலிருக்கிறது. இதுவரை இந்த மனிதன் செய்யும் எல்லாம் நன்மையில் தான் முடிந்துள்ளன . நமக்கும் பகவான் கண் திறக்காமலா போய்விடுவான் என்று தெரிந்த தெய்வங்களை     மனப்பூர்வமாக வேண்டி நின்றாள் மைதிலி.

திடீரென்று நினைவு வந்தவளாக , வாழை இலையை எடுத்துக்கொண்டு திண்ணைக்கு விரைந்தாள் , அங்கே மிகவும் களைப்பாக இருந்த ,  ரெங்கராஜு கோலத்தில் இருந்த கரியை வழித்து  உள்ளங்கையில் வைத்து , ஒரு சொட்டு எண்ணெய் விட்டு குழப்பி நடு விரலில் எடுத்து சாமி வாங்க என்று சந்தானத்தின் நெற்றியில் சிறிய வட்டபொட்டு வைத்து விட்டு, மீதியை ஒரு மாவிலையில்  தடவி , தாயீ வீட்டுல மத்தவுங்க நெத்தியில வைங்க , பெரியம்மாவுக்கு உச்சி நெத்தியில வைங்க ரெங்கசாமி எனக்கு வேணாம் னு சொன்னா விட்டுருங்க என்று கொடுத்துவிட்டு வாழை இலையை வாங்கி கொண்டு  பகவதி கோலத்தில் கோணலாக [நுனி தென்கிழக்கு , பின் பகுதி வடமேற்காக இலையை இட்டு வணங்கி , இலையின் வடக்கில் அமர்ந்து கை கூப்பி தியானம் செய்தான். மைதிலி : சாப்பாடு பரிமாறலாமா ?

ரெ .ரா : " ம் , ஆனா தம்பி பரிமாறுனா விசேசம்"

மைதிலி : "ஐயோ அவனுக்கு ஒண்ணும் தெரியாதே"

ரெ .ரா "அதெல்லாம் மாறிப்போச்சு தாயி , இப்ப பகவதி  இயக்கம் தம்பிக்கு வந்தாச்சு , நீங்க வேணும் னா பாருங்க பெரிய மனுசாள் மாதிரி வேலை செய்வாரு " சொல்லிக்கொண்டே கூட்டை திறந்து விட்டான் . கிளி வெளியே வந்தது .

சந்தானம் "ஒரு கிளி தான் இருக்கு , அது எங்கே ?

ரெ .ரா: "மது மதியா? "அது ஆஸ்பத்திரில இருக்கு "

சந்தானம் "எதுக்கு"

 ரெ .ரா: "அது, சரியா முட்டை போட மாட்டேங்குது" சந்தானம்"இது சரியா முட்டை போடுமா?"

ரெங்கராஜு சிரித்தான் .

மைதிலி " டேய் சும்மா இருடா " அவர் சாப்பிடட்டும் "

ரெ ரா : முதல்ல  4 மிளகு இந்த மேல் மூலைல வையுங்க , சந்தானம் 4 மிளகை  வைத்தான் , அது மேல 1 எலுமிச்சை பழம் வைங்க . மைதிலி திகைத்தாள் எலுமிச்சை என்று தயங்கினாள் .

ரெ ரா பரவால்ல தாயி எங்கிட்ட இருக்குது என்று 1 பழம் எடுத்து , தம்பி இதை க்கழுவி , உள்ளே சாமி முன்ன வெச்சு தீபம் காட்டிநல்லா வேண்டிகிட்டு   கொண்டு வாங்க என்றான் . மிகுந்த சிரத்தையுடன் தீப வழிபாட்டின் பின்னர் பழம் வந்தது , வலது  கையில் பழத்தை வாங்கி கண்ணை மூடிக்கொண்டு விபீஷணா என்றான் , கிளி இலையின் தெற்கு பக்கம் தரையில் படுத்து தலை வணங்கி நிமிர்ந்தது , கத்தி இல்லாமலே பழத்தை இரண்டாக கிள்ளி , விபீஷணா என்றான் கிளி வாய் திறக்க 2 சொட்டு ஜுஸ்  வாங்கி சாப்பிட்டு கிளி, ரெங்கராஜு வை பார்க்க, போடா  என்றார் ரெ ரா. உடனே சந்தானத்தின்  தோளில் ஏறி உட்கார , சாமி எல்லா பதார்த்தமும் வைங்க என்றார் .

3 வகை காய்கள் , பச்சடி , ஊறுகாய் , உப்பு எல்லாம்        உரிய  இடத்தில் சந்தானம் பரிமாற   மைதிலி வியந்தாள், பகவதி உதவி இல்லாமல் இவன் செய்வானா என்று உருகினாள்.

மத்ததெல்லாம் நீங்க கொண்டாங்க தாயி என்றார் ரெங்கராஜு

மீதி எல்லாம் மைதிலி பரிமாற அளவாக சாப்பிட்டார்  ரெங்கராஜு. அது வரை கிளியுடன் சந்தானம் வேடிக்கை பார்த்தான் . சாமி ஒரு வாழைப்பழத்தை விபீஷணனுக்கு கொடுங்க என்றார் ரெங்கராஜு . அவ்வாறே செய்தான் சந்தானம் . கிளி பழத்தை வாங்கிக்கொண்டு கூண்டிற்குள் வைத்து விட்டு நின்றது..

போஜனம் நிறைவாக உண்டு அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு , மாசம் ஒரு முறை தம்பியை மாரியம்மன் கோயிலு க்கு கூட்டிக்கிட்டு போங்க , தொட்டதெல்லாம் பலிக்கும் . பகவதி அருள் பரிபூரணமான இருக்கு , எல்லாரும் நல்லா  இருக்க பகவதி உதவும். அம்மணி , தாயீ, சாமி, ரெங்கா எல்லாருக்கும் நன்றி உத்தரவு வாங்கிக்கறேன் என்று விடை பெற்று , சாப்பிட்ட இலைய நானே முறைப்படி ஆத்துல விடறேன் என்று  ஒரு பையினுள் பாதுகாப்பாக  எடுத்துக்கொண்டு திண்ணையை சுத்தம் செய்து விட்டு கிளி /கிளிக்கூண்டுடன்  வெளியேறினார் ரெங்கராஜு. .

அன்பன் ராமன்

 

RENGA VENDAAM -8

ரெங்கா வேண்டாம்-8

உத்தரவு

தாயீ தாயீ என்று வாசலில் குரல் . வந்துட்டான் கௌரவப்பிச்சை , ஏதாவது குறி சொல்றேன் தறி நெய்யறேன், வரி கட்டணும் னு காசு/சோறு ஏதாவது தேருமானு அலையறானுங்க. யாரும் வெளியிலே போகக்கூட்ட்து என்று ரெங்கசாமி குமுற [வீட்டில் உள்ள ஏனைய மூவரும் செய்வதறியாது திகைக்க] வெளியே இருந்து ரெங்கராஜுவின் உரத்த குரல் வேண்டாம் ரெங்கா -கரையேற வேண்டிய நேரத்துல படகைக்கவுத்துறாதீங்க வேண்டாம் ரெங்கா என்று ஆக்ரோஷமாக அலறினான் ரெங்கராஜு.

தாயீ உத்தரவு கொண்டாந்துருக்கேன் , ஒருத்தராவது வந்து பகவதி சொல்லுக்கு மதிப்பு கொடுங்க , இல்லைன்னா எனக்கு ஒண்ணும் நஷ்டமில்லை, நின்ன இடத்துலேயே பகவதியைக்கூப்பிட்டு  உங்க வீட்டுல பகவதி சொல்லுக்கு என்ன மரியாதை -நீயே பாத்துக்கனு சொல்லி ,வெள்ளிக்கிளமைக்கு 12 தேங்காயை ஒடச்சி மன்னிப்பு வாங்கிகிட்டு நான் ஒதுங்கி போயிருவேன் , உங்களுடைய போக்கினால் நான் பகவதி கோபத்துக்கு ஆளாக முடியாது. உத்தரவோடு வந்தேன் -நீங்க கேக்க தாயாரா இல்ல , நான் என் வழியே போறேன்  என்று எவருக்கும் காத்திராமல் வானத்தில் சூரியனைப்பார்த்த படியே பகவதி கடிகம்  பாடல்களை உச்சாடனம் செய்தபடி நடந்து மறைந்தான் ரெங்கராஜு..

இப்போது கதை உங்கள் கையில்

யார் வேண்டுமானாலும் இந்த முடிச்சை அவிழ்க்கலாம்  கதையில் சுவை இல்லை என்றவர்கள் இப்போது அறுசுவை அமுது படிக்கலாமே ;இதோ பார் எங்களது கற்பனை என்று சிறகடிக்கலாமே

சரி ஒரு சின்ன லீட் --வீட்டுக்குள் ரெங்கசாமிக்கு தர்மஅடி  விழவேண்டியது தான் பாக்கி. 

மேலே தொடர்க.

நன்றி அன்பன் ராமன்

 USE WA TO SHARE YOUR CREATION. I CAN BRING IT TO BLOG. 

THANKS.                                                             K Raman

No comments:

Post a Comment

DIRECTOR SRIDHAR - 9

  DIRECTOR SRIDHAR - 9             இயக்குனர் ஸ்ரீதர்-9          ஒரு ராஜா ராணியிடம் [ சிவந்த மண் -1969] கண்ணதாசன் , எம் எஸ் விஸ்...