SINGER A L RAGHAVAN
பாடகர் ஏ எல் ராகவன்
மென் குரல் மற்றும் அமைதியானவர் , பல நல்ல பாடல்களை வழங்கிய அனுபவம் மிக்க பாடகர்
எல்லா வகைப்பாடல்களையும் எளிதில் கையாள்பவர். கொரோனாவின் பிடியில் மறைந்துவிட்டார்.
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை [இருவர்
உள்ளம் ] கண்ணதாசன் , கே வி மஹாதேவன் , ஏ எல் ராகவன் எல் ஆர் ஈஸ்வரி
இது ஒரு நகைச்சுவைப்பாடல் 6 குழந்தை பெற்ற பெற்றோர் பாடி முடிவில் மீண்டும்
சபலம் கொள்வதாக கண்ணதாசனின் கவிதை. எத்துணை முறை கேட்டாலும் சலிக்காத நகைச்சுவை பாடலுக்கு
இணைப்பு இதோ
Budhi sigaamani [iruvar ullam] kd
kvm , al r lr e
எங்கிருந்தாலும் வாழ்க [நெஞ்சில் ஓர் ஆலயம் 1962] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஏ எல் ராகவன்
நீங்காப்புகழ் கொண்ட காட்சி /பாடல் மற்றும் காதலின் மகோன்னதம் , உயர்ந்த சீரிய நெறிகொண்ட காதலன் கண்ணியவான் , காதலிக்க மறுத்தால் முகத்தில் ஆசிட் வீசும் இக்கால மனிதன் இல்லை. அவனது பண்பினை விளக்கும் வரிகளும் தேர்ந்த இசையும் பாடலின் சிறப்பு. இணைப்பு இதோ
engirundhaalum [n o a-1962] kd vr
al r
அன்று ஊமைப்பெண்ணல்லோ [பார்த்தால் பசி தீரும் 1963] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , குரல்கள் ஏ எல் ராகவன், சாவித்ரி எம் எஸ் வி , பி சுசீலா.
வித்யாசமான பாடல். துவக்கத்தில் வரும் பெண் குரல் சாவித்ரி, அடுத்துவரும் குறள் மற்றும் அறிவுரை எம் எஸ் வியின் குரலில் பின்னர் பாடல் முழுவதிலும் சுசீலாவின் குரலில். இது போல் வேறு பாடல் இல்லை எனலாம்.
கேட்டு மகிழ இணைப்பு. [ராஜேந்திரா ஸ் இணைப்பு தேர்வு செய்யுங்கள்]
andru oomaipennallo[ paarthal
pasi 1963] kd vr alr savithri msv alr [RAJENDRAS]
இதே பாடலை மேடையில் ஏ எல் ராகவன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்[ஜெயா மேக்ஸ் ] பெண்மணி பாடலை தொடங்கும் போதே தடுமாறி தலை குப்புற கவிழ்ந்தது தான் விளைவு. பழைய பாடல்களை ப்பாட மொழியறிவும் ஆழ்ந்த பொருள் உணரும் பண்பும் தேவை. ஓ ஓ என்று துவங்கும் இடத்திலேயே குழப்பம் கண்றாவி . கண்றாவியை காண இணைப்பு
பைலா என்பது அந்நாளில் இலங்கையில் பிரபலம். அந்த வகைடயில் ஒரு பாடல்
ஒன்ஸ் எ பப்பா [அன்பே வா=1966] இசை எம் எஸ் வி, குரல் ஏ எல் ராகவன் குழுவினர்.
படத்தில் முக்கியமான தருணம் 'HAPPY GO LUCKY ' வகைப்பாடல்
எல் ராகவன் எவ்வளவு எளிதாக பாடியுள்ளார். கேட்டு ரசிக்க இணைப்பு
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment