“VALAI KAAPPU” CATEGORY SONGS
வளைகாப்பு வகை" பாடல்கள்
தமிழ் சினிமா 1960 களில் அடைந்த மகோன்னத உயரம் இன்றைய தலைமுறையினரால்
புரிந்து
கொள்ளவே
முடியாது.
அவை
மனித
வாழ்வியலின்
நெருடலான
பல
சூழல்களுக்கும் விடை தரும் ஆர்வமும் அக்கறையும் கவனமும் கொண்டிருந்தன.
எனவே
புதிய
சிக்கல்களை
உருவாக்காமல், சராசரி மனித உணர்வுகளோடு பயணித்து, நம்பகத்தன்மை கொண்ட ஒரு ஆலோசகனைப் போல்
இயங்கி வந்தது. இன்று வன்முறை இல்லாத சினிமா வும் வக்கிரம் இல்லா நடனமும் உண்டா ? இதைத்தான் மக்கள் விரும்பி ஏற்பதாக சொல்லிவிட்டு கீழ்த்தர வகை காட்சிகளை யதார்த்தம் என்று பெயரிட்டு ஏமாற்றி இப்போது முதலுக்கே மோசம் நிலை நோக்கி சரிந்துகொண்டுள்ளது
சினிமா.
அன்றைய சினிமா, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் சுவையூட்டும் வன்மையுடன் பயணித்து வெற்றிகளைக்குவித்தது. அதனை விளக்கும் விதமாக இன்றைய பதிவில் "வளைகாப்பு வகை" பாடல்கள் இடம் பெறுகின்றன.
அக்காளுக்கு வளை காப்பு [கல்யாணபரிசு -1959] பட்டுக்கோட்டை
, ஏ எம்
ராஜா
, குரல்கள்
சுசீலா
ஜமுனாராணி
எவ்வளவு இயல்பான குதூகலம் , புதுவரவை எதிர்நோக்கும் குடும்பம் , விழாவில் மாப்பிள்ளை தவிர ஏனையோர் பெண்களே. கைதட்டி ஆடிப்பாடி மகிழும் பெண்கள் கண்டு ரசிக்க இணைப்பு இதோ
குங்குமப்பொட்டு குலுங்குதடி [இது சத்யம் -1963] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி
,
குரல்கள் சுசீலா , எஸ் ஜானகி, கண்ணாம்பா
வி -ரா வின் இசை நுணுக்கம் தனித்தன்மையுடன் வெளிப்படக்காணலாம், தாளக்கட்டுகக்ள்,
கிளாப்
வகை
பின்னிசை
மற்றும்
இயல்பான
ஓட்டம்
கண்டு
ரசிக்க
இணைப்பு
இதோ
தங்க மகள் வயிற்றில் [வாழ்க்கைப்படகு -1965 ] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ,
குரல்
சுசீலா
எவ்வளவு மகிழ்ச்சி , துள்ளல். பாடல் பயணம் வெகு சீராக0, அதிலும் தாள நடையு ம் , மாற்றங்களும்
என்று
கேட்டாலும்
மகிழ்வு
தரும்
. இணைப்பு
இதோ
இதோ ஒரு
அரண்மனை வளை
காப்பு
மஞ்சள் முகம் நிறம் மாறி [கர்ணன் -1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி ,
சுசீலா
குழுவினர்.
பாடலை கோரஸில் துவக்கி, கிளாப் வகை தாளத்தில் மிதக்கவிட்டு மீண்டும் கோரஸ், ராக மாறுபாடு என இசைப்ரம்மாண்டம் காண இணை ப்பு இதோ
இது போன்ற பாடல்கள் இனிமேல் கிடைக்காது ...இந்த தலைமுறைக்கு இந்த பொக்கிஷங்களின் அருமையும் மகிமையும் புரிந்து கொள்ள மனமில்லை..
நன்றி
அன்பன் ராமன்
ஆஹா.. ஆஹா.. இப்பாடல்கள் தான் என்னை MSV யின் பக்கம் ஈர்த்து அவர் இசைக்கு அடிமையாக்கியவை. தாளஞானத்தை ஊட்டியவை. இன்றும் என்றும் எனக்கு குதூகலம் அளிப்பவை.
ReplyDelete_மங்கல மங்கையர்_ நீலவானம் தினமும் டோலக் வாசிக்கும் பாடல்.