Wednesday, June 11, 2025

DIRECTOR SRIDHAR -4

 DIRECTOR SRIDHAR -4              

இயக்குனர் ஸ்ரீதர்-4

சென்ற பதிவில் வெண்ணிறஆடை படத்தில் இருந்து பாடல்களை பார்த்தோம். ஆனால் என்னைப்பொறுத்தவரை , அப்படத்தின் பாடல்களை ஒரு தொகுப்பாகவே பார்க்க வேண்டும் என்று நினைப்பவன். படத்தில் மொத்தம் 8 பாடல்கள் -5 நாயகிக்கானவை   அதில் ஒன்று வெட்டப்பட்டுவிட மீதி4.

நாயகியின் 4 பாடல்களிலும் ஸ்ரீகாந்த் முழு சூட் அணிந்து கௌரவமிக்க மனோதத்துவ நிபுணராக இடம் பெற்றுள்ளார். நாயகி ஜெயலலிதா [ஜெ மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் டூயட் பாடவே இல்லை]. உடனே விமரிசகர்கள் சிலர் ஹீரோ மரம் மாதிரி நிற்கிறார் , ஜெயலலிதா இளமைத்துடிப்போடு பாடி ஆடுகிறார் என்று 'கண்மூடி 'கருத்துகளைவிமரிசனம் என்ற பெயரில்  அள்ளி வீசினர். மடையர்களுக்கு புரியவில்லை இதே ஹீரோ வேறொருத்தியை காதலிக்கிறான் [படத்தின் துவக்கமே அவர்கள் பாடலில் தான் , பின்னர் ஒரு பாடல் மொத்தம் 2 ஸ்ரீகாந்த் -நிர்மலா இணைக்கு] 1 பாடல் காமெடி ஜோடிக்கு [அல்லிப்பந்தல்]  நாயகியின் 4 பாடல்களையுமே ஒரு [ensemble] தொகுப்பாகவே பார்க்கவேண்டும் என்றே எனது புரிதல்

4 ம் படத்தின் கதையை வெகு நேர்த்தியாக கொண்டு செல்லும் வகையில் அமைந்ததால் எம் எஸ் வி அவர்கள் எப்போதும் சொல்லும் டீம் ஒர்க்[team work ] என்பதையும் அவை ஒரு தீம் ஒர்க் [theme work ] என்னும் தரத்திற்கு உயர்ந்தன என்பதை கவிஞர் , இசை அமைப்பாளர், உடை அமைப்பாளர் [costumer], நடன இயக்குனர் [தங்கப்பன்] இயக்குனர் [ஸ்ரீதர்]  அனைவரும் வெகு சிறப்பாக ஒருங்கிணைந்ததை உணரும் வாய்ப்பு இது . சில ஆண்டுகளுக்கு முன்னர் இது குறித்து [MMFA] மெல்லிசை மன்னர் FANS ASSOCIATION சார்பில் நான் வெளியிட்ட ஆடியோ பதிவு   இணைத்துள்ளேன். சுமார் 1/2 மணி நேரம் எடுக்கும். எனது கருத்துகளை க்கொண்டு பாடல்களை கவனியுங்கள். வெட்டப்பட்டுவிட்ட பாடலும் இணைத்துள்ளோம் .அந்தக்கால படங்கள்  பாடல்களை பயன்படுத்திக்கொண்ட உத்தியை தொலைத்துவிட்டு இப்போது இருக்கும் துயர நிலையையும் காண்கிறோம்.

இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=GyLYy3e-3bM&t=758s

MSV https://www.youtube.com/watch?v=QeCygNjGWU4

நன்றி    அன்பன் ராமன்

1 comment:

  1. I missed your this posting and am seeing it only now. Your appreciation to Sridhar and team is well known and your analysis about VenniraAdai is amazing.
    Though earlier I failed to observe the beauty of MSV 's BGM that connects to the song AmmammA, today I got sunned listening to
    that !!
    What a beauty !!
    In fact, just listening to the prelude, I told my wife that AmmammA song is going to come !!!
    When He goes to composing and rerecording he transcends to Divine world and that's why his music is sooo mesmerising and distinct from the rest. Thanks

    ReplyDelete

Do we need so much ?

  Do we need so much ? இவை எல்லாம் தேவையா நமக்கு ? இது என்ன துறவி போல் கேள்வி என்கிறீர்களா ? துறவுக்கு நமக்கும் இடை வெளி அ...