GROUP RAGGING
கூட்டமாக கிண்டல்
இவ்வகை அமைப்பில் ஆண்கள் /பெண்கள்
இரு குழுவாக ஒன்றை ஒன்று கேலியும் கிண்டலும் செய்து பெரிய களேபரம் வரும் வரை போய் எவனாவது ஒருவன்
கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட்
செய்யப்பட்டு என்று கதை நகரும். இது
போன்ற பாடல்காட்சிகள் ஏராளம் . அவற்றில் சில
பெரும் வெற்றி கண்டவை
காதலெனும் [ கை ராசி ] சுதர்சனம்
சரோஜாதேவி தலைமையில் ஒரு படை , மற்றோன்று ஜெமினிகணேசனின் தலைமையில் என்று படகில் ஏறி கூத்தும் கும்மாளமும்
என்று பெரும் பேசுபொருள் ஆன வெற்றிப்பாடல் .
இணைப்பு இதோ
KAIRASI1960
பெண்களில்லாத உலகத்திலே ஆடிப்பெருக்கு [1962] ஏ எம் ராஜா -சுசீலா -ஏ எம் ராஜா
மற்றுமோர் கிண்டல் பாடல்
இது போட்டி வாதங்கள் கொண்டு பெண்/ ஆண் பெருமை யை உயர்த்திப்பேசும்
போட்டிப்படல் ஆனால் கிண்டல் தொனி அதிகம் . இணைப்பு இதோ
https://www.youtube.com/live/J_TDJgpZJIU
பாக்கியலட்சுமி படத்தில் அமைந்த "கல்லூரி
ராணிகாள் '
சென்சார் குறுக்கிட்டு சிங்காரச்சோலையே என்று மாற்றப்பட்ட பாடல்
வெகு பிரபலம். பாடலுக்கு எம் எஸ் வி வழங்கிய துடிப்பான ட்யூனும்
தாளக்கட்டுகளும் கிளாப் வகை தாள வரிசையும் அசல் அக்மார்க். எம்
எஸ் வி .போங்கோவை பெரிய உத்தியாக கையில் எடுத்து பெரிய
ஆளுமை காட்டியுள்ளார்.
ஈ வி சரோஜா -வாங்கடா பார்க்கலாம்
மென்ற ரேஞ்சுக்கு ஜமாய்த்திருக்கிறார். [காதலிக்க நேரமில்லை -சச்சுவின் தகப்பன்
-இப்பாடலில் இருக்கிறார் -தெரிகிறதா பாருங்கள்] மொத்தத்தில்
பாடல் அதகளம் 1960 களிலேயே -இது எப்படி இருக்கு ? இணைப்பு இதோ BAGYALAKSHMI
நாடோடி நாடோடி
அன்பே வா படத்தில் சரோஜாதேவி
குழுவினரைப்பறக்க விட்ட எம் ஜி ஆரின் துரித துள்ளல் நடனம்
பார்க்கவும் கேட்கவும் என்றும் குதூகலம் பாடலுக்கு
இணைப்பு
NAADODI NAADODI [ANBE VA 1966]
VAALI MSV AL R TMS PS CHORUS
என்னவேகம் நில்லு பாமா [குழந்தையும் தெய்வமும் -1966] வாலி , எம் எஸ் வி ,ஏ எல் ராகவன் குழுவினர்.
இது மாணவ கும்பலின் கிண்டல்,
கல்லூரி வளாகத்தில் , பெரும் கூட்டமும் கும்மாளமும்
அந்நாளில் வெஃகி பிரபலமான பாடல் மிகவும் விறுவிறுப்பான காட்சி இணைப்பு இதோ ENNA VEGAN NILLU BAMA
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment