Wednesday, June 25, 2025

DIRECTOR SRIDHAR - 6

  DIRECTOR SRIDHAR - 6           

இயக்குனர் ஸ்ரீதர்-6

வர வேண்டும் ஒரு பொழுது [கலைக்கோயில் -1964] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி எல் ஆர் ஈஸ்வரி

ஈஸ்வரிக்கு ரசிகர்கள் சூடிய முக்கிய பெயர்கள் 2.                    1] ராட்ஷசி,  2] அரக்கி  இரண்டும் கன  பொருத்தம்  பலரும் நடுங்கும் பாடல்களை ஊதித்தள்ளும் பேராளுமை. அதுவுமெப்படி? சொ.ன்னது சொல்லாதது சொந்தக்கற்பனை எல்லாம் பிணைத்து பாடலை வழங்கும் அலாதி திறன் + குரல் கட்டுப்பாடு. 

 ல்லை நான் பாடுவேன் என்று பிடிவாதம் காட்டி எது வேண்டுமோ அதை போதும் போதும் என்று கும்பிடு போட வைக்கும் தொழில் திறமை. அம்மணியின் சொந்தவூர் பரமக்குடிப்பக்கம் . ஆனால் பாட்டு வெஸ்டர்ன் ஜாஸ் [w JAZZ]  இந்தப்பாடலில் எம் எஸ் வி பிழிந்த பியூகிள் , சாக்ஸ் , ட்ரம்பெட் , க்ளாரினெட், அனைத்தும்     குலவிக்குழைய , ஈஸ்வரி பாடிய ஸ்டைலில் இப்போதும் பாட பலர் நடுங்குகிறார்கள். அவ்வளவு ஏற்ற இறக்கங்கள் மிகவும் கவனம் செலுத்திப்பாடவேண்டும். இசைக்குழுவினர் எவரும் இந்தப்பாடலை தொடவே தயங்குவர் அவ்வளவு இசைக்கோர்வைகள், ஒலிகள், தாள கோலங்கள். 60 ஆண்டுகளுக்கு முன் இப்படி ஓர் பாடல்.அடிப்படைக்கல்வி பெறாத  எம் எஸ் வி எப்படி இது போன்ற அமைப்பில் பாட உருவாக்கினார் ? இறையருள் மற்றும் தொழில் பக்தி இரண்டும் அவருக்கு கிடைத்த வரங்கள் .இவ்வளவு துல்யமாக கருவிகளை ஒருங்கிணைத்து ஜாஸ் வகை பாடல் 1964 இல்-- எவ் ஆர் எஈஸ்வரி குரலில் -அதீத நம்பிக்கை , இப்போதும் கூட இந்த அளவுக்கு நளி னமான ஒலிக்கூட்டுகள் -எளிதல்ல. பிரமிக்க வைத்த இசைக்கோர்வை. அடிப்படைக்கல்வி பெறாத  எம் எஸ் வி எப்படி இது போன்ற அமைப்பில் பாட உருவாக்கினார் ? இறையருள் மற்றும் தொழில் பக்தி இரண்டும் அவருக்கு கிடைத்த வரங்கள் .இவ்வளவு துல்யமாக கருவிகளை ஒருங்கிணைத்து ஜாஸ் வகை பாடல் 1964 இல்-- எவ் ஆர் எஈஸ்வரி குரலில் -அதீத நம்பிக்கை , இப்போதும் கூட இந்த அளவுக்கு நளி னமான ஒலிக்கூட்டுகள் -எளிதல்ல. பிரமிக்க வைத்த இசைக்கோர்வை.   ஒளிப்பதிவாளர் என் பாலகிருஷ்ணன் ஸ்ரீதர் யூனிட்டில் பணி புரிந்த முதல் படம், ஒளிகுறைந்த பார் நடனம்.

அதில் ஒரு சிகரெட் புகை வளையம் நாட்டியப்பெண் சாந்தாவின் மீது மோதி மேலெழுவது [time 3.10] பதிவிடப்பட்டுள்ளது.. மொத்தத்தில் ஒரு சிலந்திவலைப்பின்னல் இது. கேட்டு உணருங்கள் இணைப்பு + QFR பதிப்பும் இணைக்கப்பட்டுள்ளது

kalai koil varavendum https://www.youtube.com/watch?v=smRyeVnf0YU lre

https://www.youtube.com/watch?v=UAkhjsRBKec&t=34s qfr 16

தேடினேன் வந்தது [ஊட்டி வரை உறவு -1967] கண்ணதாசன் , விஸ்வநாதன் , பி சுசீலா

காலை 9.00 மணி க்கு துவங்கி நாள் கடந்து இரவு 12.00 மணிக்கு பாடல் பதிவு துவக்கம் இயக்குனர் ஸ்ரீதரைக்காணோம். எம் எஸ் வி பதறிப்போனார். ஏனெனில் ஏதோ விபரீதம் அதனால் தான்  ஸ்ரீ  யை காண வில்லை. எம் எஸ் வி ஹால்ட் என்று கத்திவிட்டு போய்விட்டார். சுற்றிலும் தேடினர் ஸ்ரீ

 -எங்கோ பார்த்தபடி நிற்க என் இங்க இருக்கீங்க -ரெக்கார்டிங் பண்ணனும் நீங்க இல்லாம எப்படி?   வாங்க என்றார் எம் ஸ் வி. .

ஸ்ரீ " பாட்டா அது? எல்லாரும் இஷ்டத்துக்கு ஒண்ணா சேந்து இதுதான் பாட்டு  ன் ரீங்க? எனக்கொண்ணும் பிடிக்கல்ல நான் வரல்ல "

விசு -'ஏன்"

ஸ்ரீ " அவ எல்லாரையும் ஏமாத்திட்டு 'ஆஹா எனக்கே வெற்றி னு ஜம்பமா பாடறா ;இந்தப் பாட்டு அப்படியா  இருக்கு ?

விசு "என்ன பண்ணலாம் ?

ஸ்ரீ  -என்னவேணா  பண்ணு ங்க -எனக்கு இந்த ட்யூனே பிடிக்கல்ல

விசு --என்ன ஸ்ரீ -இப்படி சொல்றீங்க -இப்பவே ட்யூனை மாத்திடறேன் வாங்க வாங்க என்று ஸ்ரீ யை இழுத்துக்கொண்டு உள்ளே ஓடி

விசு -சுசீலாம்மா வேறே ட்யூன் அதுனால கொஞ்சம் உக்காருங்க என்று இரவு 1.10  மணிக்கு எம் எஸ் வி சொல்ல சுசீலாவுக்கு சொல்ல முடியாத அழுத்தம்.

அவ்வளவு தான் 7 நிமிடத்தில் பாட்டையே மாற்றிவிட்டார் எம் எஸ் வி., இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு வேணும் என்றார் ஸ்ரீதர்

இருங்க ஸ்ரீ -இப்ப பாருங்க என்று பியானோவில் துணை சேர்த்து தாளத்திற்கு ட்ரம்

டக் டக் டக் க் டக் என்று ஒலி க்க ராத்திரி 1.20க்கு சுசீலாவிற்கு புதிய ட்யூன் பயிற்சி. , இசைக்கோர்வை எல்லாம் மாற்றி பியானோவின் தலைமையில் புது  மெருகில் கவர்ச்சிப்பாடல். , எனவே ஓ ,,,,,,,,,                      என த்தொடங்கி ஹஹ் ஹா   ஹஹ் ஹா என்று தேடினேன் வந்தது டக் டக் டக் க் டக்  என்று இரவு 1.45 மணிக்கு பதிவிட்ட பாடல். , சுட சுட தோசை மாதிரி அப்பவே பாடி பயிற்சி பண்ணி  உடனே ரெக்கார்டிங்,  பாதி ராத்திரில பாடின மாதிரியா இருக்கு என்று இப்போதும் சுசீலா ஒரு நாள் முழுவதும் இந்த ஒரு பாட்டுக்கே உழைத்தோம்என்று இப்போதும் நினைவு  கூறுவார். [இல்லைன்னா எம் எஸ் வி தூங்கமாட்டார், தூங்கவும் விட மாட்டார் என்று எல்லோரும் அறிவர்.]

தமிழ் சினிமாவில் புடவை கட்டிக்கொண்டு கவர்ச்சி நடனம் ஆடிய ஒரே நபரே கே ஆர் விஜயா தான் , புடவை பம்பாயில் இருந்து ஓர் இரவில்வந்தது  [ரூ 2000/- பெரிய தொகை அந்த நாளில் -அன்று எனது மாத ஊதியம் ரூ 360/-] பசுமர்த்தி  கிருஷ்ணமூர்த்தி நடன இயக்கம் , வந்தவுடன் பாடல் அடைந்த இமாலய வெற்றி , நீங்கள் அறிந்ததே, கேட்டு ரசிக்க இணைப்பு இதோ 

தேடினேன் வந்தது [ஊட்டி வரை உறவு -1967] கண்ணதாசன் , விஸ்வநாதன் , பி சுசீலா

OOTY VARAI  URAVU THEDINEN [1967] KD MSV PS

https://www.google.com/search?q=thedinen+vandhadhu+video+song+download&oq=THEDINEN+VANDHADHU+VIDEO+SONG&gs_lcrp=EgZjaHJvbWUqBwgBECEYoAEyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigATIHCAMQIRiPAtIBCTE2MTc4ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:01300c94,vid:yOOQYa48cFU,st:0

இரண்டு பாடல்களையும் பலமுறை கேளுங்கள் , உழைப்பு என்றால் என்ன என்று புரியும்.

"தேடினேன் வந்தது' பாடல் குறித்து ஒரு நேர்காணலில் எம் எஸ் வி அவர்களும் எம் எஸ் வி டைம்ஸ் .காம் நிறுவன நிகழ்ச்சியில் பாடகி பி சுசீலாவும் பகிர்ந்து கொண்ட பழைய நினைவுகளை இணைத்துள்ளேன் . கவனமாக கேளுங்கள் அன்றைய கலைஞர்கள்  அயராது உழைத்தவர்கள் என்ற உண்மை புலப்படும். 

https://www.youtube.com/watch?v=p0GK8d2HBSM&t=3s MSV PS ON THEDINEN VANDHADHU

நன்றி

2 comments:

  1. Yes.. as you rightly said, nobody even now dare to touch "Varavendum oru pozhuthu" song, leave alone creating an equivalent !!
    "Thedinen vanthathu" a gem lingering in us even now and will he forever. Team work of Sridhar MSV KD !!!!!

    ReplyDelete

MAKE LEARNING –A PLEASURE -2

  MAKE LEARNING –A PLEASURE -2      Every teacher should impress upon wards that anything can be learned, provided the learner is attentiv...