Monday, June 23, 2025

IN OUR DEFENCE

 IN OUR DEFENCE

STILL IT IS FINE                                      

நல்லாத்தானே இருக்கு -இப்ப என்ன? L 70

இது என்ன புதிய கதையா என்று யாரும் எண்ண  வேண்டாம்; ஆனால் இது ஒரு பழைய சமாச்சாரம் , நமது போர்க்கருவிகள் ஒன்றில் சமீபத்திய குங்குமப்பொட்டு நிகழ்வில் எதிரியின் எண்ணற்ற முயற்சிகளை தகர்த்து நிலை குலைய வைத்த L 70 என்ற பீரங்கிபோன்ற துப்பாக்கி. 

அந்நாளைய போபோர்ஸ் [BOFORS] நிறுவனத்தின் தயாரிப்பு.

சுமார் 50-55 வயது துப்பாக்கி -- போர் விமானங்களை தாக்கக்கூடியது.  அதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? அதன் சிறப்பு இப்போது அது பழைய கிழத்துப்பாக்கி அல்ல புத்தம் புதிய மேம்படுத்தப்பட்ட புதிய செயல் திறன் கொண்ட பழைய துப்பாக்கி .

பழைய நிலை

 பயிற்சி பெற்ற ராணுவ வீரர் மனித முயற்சியால் பீரங்கி குண்டு போல் வானில் செலுத்தி  எதிரி விமானங்களை  தாக்கி அழிப்பதற்கென உருவாக்கப்பட்டிருந்தது. எனவே பனி மூட்டம் , புகை , அடர் வானிலை சூழல்களில் போர் வீரர்களால் பறந்து வரும் இலக்குகளை 'பார்த்து' சுடுவது மிகவும் கடினமான 'வாச்சான் போச்சான்' செயல். இவ்வகை கருவிகள் மனித திறன் அடிப்படையிலேயே சிறப்பாக செயல் படவேண்டியிருந்தன.

புதிய நிலை

இவ்வகை பீரங்கிகளை தயாரிக்கும் உரிமம் நம்மிடம் இருப்பதால் நல்ல திறன் மேம்பாட்டுக்குரிய புதிய நவீன கருவிகளை இவ்வகை பீரங்கிகளுடன் இணைத்து இவற்றை குலைநடுங்க வைக்கும் கருவிகளாக வடிவமைத்துள்ளோம். எந்த வானிலை, இரவு பகல் பாகுபாடின்றி எதிர் இலக்குகளை துல்லியமாக கணித்து அவற்றின் நிலைகளை கண்காணித்து தேவையான வகை குண்டுகளை அதிவேகமாக செலுத்தி எதிரியின் கருவிகளை முடக்கி வீழ்த்தி அழிக்கும் தேவைக்கான அதி நவீன ராடார் தொழில் நுட்பம் பிணைக்கப்பட்டுள்ளது

 இவை ஆட்டோமேட்டிக் வகை இயந்திரங்களாக .சுழன்று சுழன்று செயல்பட்டு பல எதிரி ட்ரோன்களை    அவர்களின் எல்லைக்குள்ளேயே தகர்த்து பெரும் வெற்றிக்கு வழி வகுத்தன.

எதற்கு புதிய கருவிகளை கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்க வேண்டும்?  இந்த கருவியையே முறையான ரேடார் உடன் இணைத்து கண்ட்ரோல் மூலம் இயக்கினால் என்ன என்று ராணுவ ஆராய்ச்சியினர் எடுத்த முடிவு பழைய கருவி , 40mm பாரல் [barrel] அசுரத்தனமாக சுடும் , 

இப்போது  நவீன ரேடார் , மின்னணு கண் உணர் திறம் [electro -optical sensor] தானியங்கி முறையில் tracking என்ற கண்காணிப்பு வசதி மேம்படுத்தியதால் துல்லியமும் துரிதமும் கொண்டு எதிர் வினை ஆற்றி மிகப்பெரும் போர்க்கருவி நிலையை எட்டியுள்ளது    "நல்லாத்தான்ல இருக்கு"  இப்ப என்ன? என்று தெம்பாக பேச வைத்துள்ளது.

நிமிடத்திற்கு 240 முதல் 330 குண்டுகளை சர சர  வென தீபாவளி வாணம் போல்    பீய்ச்சி 4 கிலோமீட்டர் விளிம்பிற்குள் இருக்கும் படைகளின் இலக்குகள் விமானங்கள் ட்ரோன்கள் , டாங்குகள் என  எதையும் சீர்குலைக்கும் திறன் உடையன இவை.

ஈசல் கூட்டம் போல் வரும் எதிரி ட்ரோன்களை கொத்தாக அழித்து குப்பையாய் சிதறவிடும்.

https://www.youtube.com/watch?v=IPCIEranhto on L 70

 

நன்றி       அன்பன்     ராமன்            

 

2 comments:


  1. அற்புதமான செய்திக்கு நன்றி.ராணுவ கண்டுபிடிப்புகள் வியக்க வைக்கின்றன.

    ReplyDelete
  2. அருமையான செய்திக்கு நன்றி. D R D O வின் கண்டுபிடிப்புகள் வியக்க வைக்கின்றன.

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG -44

  LET US PERCEIVE THE SONG -44                    பாடலை உணர்வோம் -44 POSTING     /    பதிவு 1500 அந்த மாப்பிள்ளை காதலிச்சான் [ பண...