Wednesday, June 11, 2025

LET US PERCEIVE THE SONG -27

 LET US PERCEIVE THE SONG -27                   

பாடலை உணர்வோம் -27

காதலில் பிழிந்தானா சோகத்தை, அன்றி சோகத்தில் காதலைப்பிழிந்தானா என்ற விவாதப்பொருள் காட்டும் பாடல் ஒன்று வேண்டும் எனில் இதோ

'மாலைப்பொழுதில் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழீ " என்ற துவக்க வரியிலேயே அனேகமாக மற்றும் அமோகமாக பறைசாற்றிய கவியரசர் கண்ணதாசன் -ஆணித்தரமான கவிதை அதனை அற்புத இசையில் அடைத்தார் எம் எஸ் வி. இவ்விருவரின் அசாதாரண புரிதல் இயற்கை வழங்கிய கொடை . சுணக்கம் இல்லாமல் இணக்கம் காட்டிய இசை கூட்டாளிகள் இருவரும்.

எந்த சூழலுக்கும் எளிதாக பாடல் புனைகிறாரே இவர் கவிஞரா அன்றி கடவுளா? பாருங்கள் பல்லவியின் தொடர்ச்சி 2ம் வரியில் "மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை --காரணம் ஏன் தோழீ  என்று தோழியிடம் கேட்டு விடை தேடும் அபலை. சோகத்தில் சிக்கி சீரழிந்தவர்கள் பேசுவது என்பதே அதிகம் அதைத்தான் கவிஞர் "மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை" என்று சொல்லி காரணம் ஏன் என்று விடைதெரியாமல் அலையும் நிலை . இதை இவ்வளவு எளிய நடையில் எழுதினாலும் இதே காவிஞன் பாடல் நெடுகிலும் ஆங்காங்கேவஞ்சிக்கப்பட்ட அல்லது சூழ்நிலைப்புயலில் சிக்கி அழிந்தபின் சொந்த அனுபவமாக சம்பவங்களை தோழிக்கு சொல்வது போல் அடுக்குகிறாள். வளமான கவி அல்லவா , ஒவ்வொரு தகவலையும் சொல்லி தோழீ தோழீ என்றே விளித்துப்பாடுவதாக கவிதை அமைத்துள்ளார். இது ஒரு பாடல் என்ற நிலையை தாண்டி ஒரு சோக காவியம் என்பதாக 1962க்குப்பின் பல ஆண்டுகள் ஆண்  பெண் . அன்றாடம் பாடித்திரிந்த நிலை என் மனத்திரையில் விரிகிறது. அப்போது நான் கல்லூரி மாணவன் ஆனால் திரும்பிய பக்கம் எல்லாம் இந்த ஒலி பாடலாகவோ, சீட்டி ஓலி வடிவிலோ, முணுமுணுப்பாகவோ கேட்ட வண்ணம் முதலாம் ஆண்டு BSc முழுவதும் பயணித்தேன். தமிழே தெரியாத கன்னட பையன்கள்/பெண்கள் எப்படி இந்தப்பாடலை?

நண்பன் சிவண்ணா விடம் கேட்க அவனோ "பேடாப்பா ஹாடு கேளு தர ஏனோ ஆகுத்தத -அந்த்ர பாளா இஷ்டா அதன்னகேளக்கே " என்றான் .

அதன் விளக்கம் "வேண்டாம்ப்பா அந்த பாட்ட கேட்டா என்னமோ ஆகுது,.ஆனா ரொம்ப இஷ்டம் அதைக்கேக்க " என்றான்.  அதன் தாக்கம் ஏன் ? மொழி மட்டும் அல்ல அதனை மொழிந்த ட்யூனில் எழுந்த ஆழ்ந்த சோகம் என்பதை மொழி தாண்டிய வீரியம் இசையில் கிடைக்கிறது என்று புரிந்து கொண்டேன். இப்படி பல தமிழ் பாடல்களை அன்றைய கன்னட மாணவ மாணவியர் ஆழ்ந்து ரசித்ததை நான் நேரடியாகக்கண்டவன் எனவே இசைக்கு பாவம் தான் உயிர் என்ற மாற்றவொண்ணாத விதி தான் பாடல்களுக்கான இலக்கணம் என்று 60 களில் தமிழ் சினிமா நிரூபித்த உண்மை அது .

பாடலின் பிற சரணங்களில் இருப்பது உண்மையா துயரமா எனில் உண்மை என்பதே துயரம் தான் என்று கட்டமைக்கிறார் கவிஞர். மீண்டும் பல்லவி யை துரத்தி வரும் வீணையின் ஒலியைத்தொடர்ந்து சரணம்

;இன்பம் சில நாள் துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி ? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழீ                    என்று வினா  [இதனை மறுக்கும்  நிலை இருப்பதாக நான் உணரவில்லை ]

விளக்கம்; மண முடித்தவர் போல் அருகினிலே ஓர் டிவு கண்டேன் தோழீ  

மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழீ

வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழீ  

அவர் மறவேன் மறவேன் என்றார் .. உடனே மறந்துவிட்டார் தோழீ .. பறந்துவிட்டார் தோழீ

பல்லவி

கனவில் வந்தவர் யார் எனக்கேட்டேன்  கணவர் என்றார் தோழீ

கணவர் என்றால்  அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழீ  இவ்விடம் பாடலின் உச்ச நிலை துயரம்

வாழ்க்கையின் குழம்பிய தருணங்களை பேசும் கவிஞர்  "இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்

தெளிவும் அறியாது      முடிவும் தெரியாது      மயங்குது எதிர் காலம் , மீண்டும்

பல்லவியை முற்றிலும் பாடி  என்று குரல் மெல்ல அமிழ பாடலின் உணர்வலைகளை  வீணை  மீட்டி அடங்க  நம்மை துயர் பீடித்து மனம் பாடலின் சோகம் கூட சுகம் தான் என்று நம்முள் சாம்பிராணி ப்புகைபோல் மௌன சஞ்சலம்

சொல்லின் வினைதனை ஈடேற்றிய கம்பீரம் வில்லின் விசை போல் அதிர்ந்த இசையின் மாண்பு எனில் மறுப்பதற்கு இல்லை . இசையின் பங்களிப்பை காண்போம் .

எந்த ஓர் பாடலையும் வெர்றிப்பீடத்தில் அமர்த்துவது இசை தான் . அதிலும் சோகமும் துயரும் பின்னிய பாடல்களை , தேர்நத இசைக்கோர்வைகள் மற்றும் உணர்ச்சியை மேம்படுத்தும் ராக அமைப்புகள் , முறையான கருவிப்பிரயோகங்கள் என பலவும் ஒரு நெருடல் இல்லா வடிவத்தில் வந்தால் தான் அவற்றிற்கு வாழ்வு. இல்லையேல் கவிதையும் சேர்ந்து காலனுக்கு இரையாக வேண்டியது தான் . அப்படிப் பார்த்தால் "மாலை பொழுதின் மயக்கத்திலே" பாடல் துவங்கிய நொடியிலேயே கவனயீர்ப்பு பெற்று சிரஞ்சீவி நிலையையும் பிடித்துவிட்டது. அவ்வளவு ஏன் ? "பாக்கியலட்சுமி" படத்தில் ஒரு பாடல் என்று பேச்சை துவக்கினால் 100க்கு 95பேர் 'மாலைப்பொழுதின்" என்று கிளம்புவார்கள். இதைக்கவனியுங்கள் . துவக்கச்சொல்  என்னவோ 'மாலைப்பொழுதின் ' தான் . ஆனால் எம் எஸ் வி இது போன்ற சொல் அமைப்புகளில் ஒரு சிறிய உத்தியை முன்னெடுப்பார். அதாவது ஈரெழுத்து சொல் ஒன்று துவக்கத்திலோ இடையிலோ, இறுதியிலோ அமைந்துவிட்டால் அப்புறம் அவர் ராஜ்ஜியம் தான்.

இந்தப்பாடலில் மாலைப்பொழுதின் என்ற அமைப்பை மாலை வேறாக பொழுதின் வேறாக கையாள்கிறார் [ஆங்கிலத்தில் treatment என்பார்கள் ] ஆம்  பாடும் போது ஒவ்வொரு வாய்ப்பிலும்  மா ..லை பொழுதின் என்று பாட வைத்துள்ளார். அங்கேயே பிடித்துவிட்டார் . [இது போல் பல  பாடல்கள் அவருடைய முத்திரை கொண்டவை . உதாரணம் பூ .... மா .... லையில் ஓர் மல்லி .... கை , அங்......கே   மா ..லை மயக்கம் யாருக் கா.., ,  மல் ...லிகை என்  மன் ..னன் மயங்கும்  பொன் ......னான மலரல்லவா ] இப்படித்தான் தனிச்சொற்களுக்கு அதிகப்படியான அலங்காரம் செய்து இதில் ஏதோ விளக்கவொண்ணா ஈர்ப்பு இருக்கிறதே என்று பாடலை திரும்பத்திரும்ப கேட்க வைத்து விடுவார்.]  ரெண்டெழுத்து வார்த்தைன்னா பாவம் நல்லா தூக்கலா குடுக்கலாம் என்பார்.எம் எஸ் வி.. அனால் இந்தப்பாடலில் முதல் சொல்லிற்குப்பின் வேறெங்கும் சொல்லை விலக்கிப்பிரிக்காமல்,  பாடும் முறையில் சோகத்தை குழைத்துள்ளார். மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை [இருந்தும் என ஒரு அழுத்தம் , பின்னர் 'இல்லை' என்று சோகமான அழுத்தம் காரணம் ஏன் தோழீ என்று ழீ யை சற்று நீட்டி ப்பாடவைத்துள்ளார்.

மங்கை என் கையில் குங்குமம் தந்தார் , மாலையிட்டார் தோழீ மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழீ [நெஞ்சை முட்டும் சோகம் குரலில் ]       மீண்டும் பாடு ம்போது பறந்துவிட்டார் என்று ஏமாற்றப்பட்டதை சொல்லும் ஆழ்ந்த துயரம். ஆங்காங்கே வீணையின் அதிர்வுதரும் நடுக்கம் [பிச்சுமணி]  சிலிர்த்து அதிரும் தபலா டோலக் தாள அரவணைப்பு .தூக்கலான சோகத்தினைப்பிழி ஷெனாய் [வாசிப்பு சத்யம்]..

.   கனவில் வந்தவர் யாரெனக்கேட்டேன் [வேகம் ], நிதானமாக கணவர் என்றார் தோழீ , பின்னர் கணவரென்றாலவர் என்று 3 சொற்களை சேர்த்து ப்பாடி  , கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழீ [ஏன் தோழீ யில் எவ்வளவு ஏக்கம் ]

இறுதியாக இளமையெலாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவு மறியாது முடிவும் அறியாது மயங்குது எதிர்காலம் [இந்த சரணம் இளையராஜாவுக்கு மிகவும் மனம் கவர்ந்த கவிதை. இது மனிதர் ஒவ்வொருவருக்கும் கல்வியோ, வேலையோ திருமணமோ சரியாக புரியாமல் மயங்கும் எதிர்காலத்தை சொல்வது. இதுதான் நிலையான உண்மை. கவிஞன் எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்தை சொல்ல வேண்டும். இதை அந்த நாளில் எதிர்காலம் தெரியாமல் நான் குழம்பிய நிலையில் சற்று ஆறுதல் பெற்றேன் என்பார்.]

இப்படி ஒவ்வொரு பகுதியிலும் உணர்ச்சி பிறழாமல் பாடி வெற்றி கண்ட பாடல்  இவ்வாறு இசை அமைப்பில் காட்டிய ஆழ்ந்த கவனம் இன்றளவும் இதை காவிய உயரத்தில் வைத்து நீங்காப்புகழ் கொள்ள வைத்துள்ளது.

எனது குறைந்த ஞானம் கொண்டு இயன்ற வரை பேசியுள்ளேன் குறைகளை மன்னிப்பீர்.  பாடலுக்கு இணைப்பு   மற்றும் QFR குழுவினரின் பதிவும் கீழே

MALAIPPOZHUTHIN MAYAKKATHTHILE BAGYALAKSHMI 1961  KD V R PS

https://www.youtube.com/watch?v=KPXbUyzu7xQ

MSV ON COMPOSING SOME SONGS https://www.youtube.com/watch?v=Y1dLoJMQ-Xg

QFR EPISODE 401

https://www.google.com/search?q=QFR+EPIDODE+401&oq=QFR+EPIDODE+401&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgcIAhAhGI8CMgcIAxAhGI8C0gEJMzU2ODVqMGo0qAIAsAIA&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:93a06b61,vid:-kK3fvx2CO8,st:0

நன்றி அன்பன் ராமன் 

 

 

 

1 comment:

  1. Wonderful analysis. Prof. பிழியும் சோகத்திலும் சுகத்தை உணர வைத்த MSV யின் இசை ஆளுமை நிகரற்றது. அனுபவித்து அளித்த தங்கள் அலசல் அருமையோ அருமை.
    👍

    ReplyDelete

Do we need so much ?

  Do we need so much ? இவை எல்லாம் தேவையா நமக்கு ? இது என்ன துறவி போல் கேள்வி என்கிறீர்களா ? துறவுக்கு நமக்கும் இடை வெளி அ...