Monday, July 28, 2025

AMCA

 AMCA       [ADVANCED MEDIUM COMBAT AIRCRAFT]        

மேம்பட்ட நடு த்தர  இலகு ரக போர் விமானம்

[A M C A ]  என்பது இந்தியாவின் நவீன முயற்சிகளில் ஒன்றாக இறுதி வடிவத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.

என்ன? முன்னேறிக்கொண்டிருக்கிறதா என்போர் இதன் இறுதி அமைப்பு ஒரு முக்கிய முடிவுக்காக [DECISION] நின்றுகொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்க  .  இந்த வடிவமைப்பு சிலகாலமாக குறிப்பிட்ட  வகை எஞ்சின் எது என காத்திருக்கிறது . ஏன் காத்திருக்க வேண்டும்? பிற நாட்டினரின் தயாரிப்புகளை வாங்க வேண்டுமானால் இப்படித்தான் காத்திருத்தல் தவிர்க்கஒண்ணாத தலை வலி யாக நீண்டு கொண்டே போகும் .

நிலவரம் என்ன?

இப்போது இறுதி உத்தரவும் பதினைந்தாயிரம் கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டு விரைவாக பணிகள் நடந்தேறி வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 5 AMCA  இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட உள்ளன. மேலும் பலவற்றை தயாரிக்கவும் உத்தரவும் உதவிகளும் வந்தபடியுள்ளன.  

இவை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க AMCA வகை போர் விமானங்களை உருவாக்குவதில் உள்ள நன்மைகளைக்கருத்தில் கொண்டு , விமான தயாரிப்பிற்கான கட்டுமான தளங்களை உருவாக்க ஆந்திர மாநில அரசு பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு நிலங்களை வழங்கி , AMCA வடிவமைப்பு தயாரிப்பில் ஆந்திர மாநிலம் அக்கறை காட்டுவதால் அப்பகுதிகளில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உருவாகிட உதவும் முயற்சியில் முன்னிலை வகிக்கிறது

இதுவரை போர் விமானங்கள் 5ம் தலை முறை நிலையை எட்டி உள்ளன. ஒவ்வொரு தலைமுறை என்பதும் சுமார் 10-15 ஆண்டுகள் அளவில் உலகில் ஆளுமை செலுத்தியவை. ஒவ்வொன்றும் முந்தைய தலைமுறையை விட மேம்பட்ட வேகம் மற்றும் செயல் திறன் துல்லியம் மற்றும் எதிரியை ஏமாற்றும் வித்தைகளில் முன்னேறியது. ஐந்தாம் தலை முறை அமைப்புகள் எதிரி ராடாரில் சிக்கிக்கொள்ளாமல்   புகுந்து தாக்கிவிட்டு மீண்டு வரும் ஆற்றல் கொண்டவை ராடாரில் சிக்காமல்  தப்ப விசேஷ உலோகக்கலவைகள் , பிரத்தியேக வண்ணப்பூச்சு [வான்வெளி போன்ற நிறம்] கொண்டு எதிரி ராடாரின் கண்ணில் மண்ணைத்தூவுவது இவற்றை வடிவமைப்பதிலேயே பெரும் வெற்றி ஒளிந்துள்ளது என்கின்றனர்.

இதுபோன்ற AMCA வகை விமானங்களை இத்தாலி , இங்கிலாந்து , ஜப்பான் இவை கூட்டாக தயாரிக்க, இந்தியா எவருடனும் கூட்டு சேராமல் சொந்த வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி எல்லோரையும் மிரள வைத்துக்கொண்டிருக்கிறது. நமது AMCA -6ம் தலைமுறை [இன்னும் அமெரிக்கா கூட எட்டவில்லை].  

இவ்விமானங்கள் உருவில் சிறிதாக சிறிதாக ரேடாரை ஏமாற்றி தப்பித்தல் எளிது. அதே நேரத்தில் AMCA -நமது தயாரிப்பில் செயற்கைநுண் அறிவு ரேடார் தொழில் நுட்பம் செயல் படுகிறது. நேரடித்திறன் ஆயுதங்கள்[DIRECT ENERGY WEAPONS] பயன்படுத்தும் தொழில் நுட்பம் செயல் படுத்தப்படுகிறது. அதாவது லேசர் /மைக்ரோவேவ் போன்ற கதிர்கள் ஆயுதங்கள் போல மிகவும் தீவிர தாக்குதல் நடத்தும். திடீரேன்று எதிரி நிலைகள் சிதைந்து நசுங்கி பொசுங்கி தகர்ந்து போகும்.  . இவ்வகை விமானங்களில் குண்டுகளையும் பயன் படுத்தலாம். அவை- வேண்டுமாயின் வெளியில் பொருத்தவோ  [எக்ஸ்டர்னல் ] உள்ளே [இன்டெர்னல் ] அமைப்பிலோ கொண்டு செல்லலாம். வெளி அமைப்பில் ரேடாரில் மாட்டும் வாய்ப்புகள் அதிகம் . எனவே உள்  அமைப்பு குண்டுகள்  ரேடாரில் சிக்காமல் தப்ப உதவும் . இவைகளை  தேவையை பொறுத்து பயன் படுத்த முடியும்.

இவை விமானத்திலிருந்து வெகுதொலைவில் [400 KM ] உள்ள எதிரி விமானத்தை ரேடார் மூலம் கண்டு தாக்கும் . தரை மீதும் தாக்க ஆகாஷ் ,ஆகாஷ் NG ,வலிமையான தாக்குதலுக்கு ப்ரம்மோஸ் , ருத்ரம் , சுதர்சன் போன்ற கொடூர ஏவுகணைகளை AMCA மூலம் செலுத்தி தாக்கலாம். இத்தகைய திறன் வாய்ந்த வடிவமைப்பிற்கு கண்டிப்பாக காவேரி எஞ்சின் பொருத்தினால் இது 100% இந்திய தயாரிப்பாகும். வெளிநாட்டு எஞ்சின் பொருத்தினால் 75% இந்திய தயாரிப்பு  என்ற நிலையில் இருக்கும் .  

இந்திய AMCA க்கு இணையாக 6ம் தலைமுறை போர் விமானம் ஜப்பானிடம் மட்டுமே உள்ளது . வேறு எவரிடமும் இல்லை. போர் கருவிகளிலும் முறைகளிலும் , உத்திகளிலும் பீதியை ஏற்படுத்தும்  அசுர வளர்ச்சியை எட்டி இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது. இவற்றை அறிய இணைப்பு இதோ 

FY25Q2 CC Individual CCIAllApps in en Reliability Variation 1 VID16x9mp4AMCA     ASIR

நன்றி  அன்பன் ராமன்

No comments:

Post a Comment

MAKE LEARNING –A PLEASURE -2

  MAKE LEARNING –A PLEASURE -2      Every teacher should impress upon wards that anything can be learned, provided the learner is attentiv...