Monday, July 28, 2025

LET US PERCEIVE THE SONG -32

LET US PERCEIVE THE SONG -32          July-30

பாடலை உணர்வோம் -32

Kaadhal kaadhal enru pesa [ UUV -1972] KD  MSV PS ML S

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ [ உத்தரவின்றி உள்ளே வா- 1972] காண்ணாதாசன் , எம் எஸ் வி, குரல்கள் பி சுசீலா , எம் எல் ஸ்ரீகாந்த்

இதை ஒரு சினிமாப்பாடல் என்று பட்டியலிட இயலாது. ஏன் ?

மிகுந்த காவியமணம்  நிறைந்த சொற்கள் . கிட்டத்தட்ட மஹாபாரதக்கண்ணன் காலத்திற்கே கற்பனையை விரித்த கண்ணதாசன்,

கற்பனை உமக்குத்தான் வருமோ? என்று சரிநிகர் சமமாக இசையில் கிளர்த்தெழுந்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், மேலும் சொல்லுக்கு உயிரும் சுவையும் ஊட்ட இசை அமைப்பின் நுணுக்கம் அல்லவா  கரம் நீட்டுகிறது?

 குறை சொல்ல முடியாத எண்ணற்ற நுணுக்கங்களின் சுரங்கம் இந்த 53 வயதுப்பாடல்.

அது மட்டுமா? கண்ணன் காலம் என்றாதால் சிதார் , குழல் , மென் தாளம் , குரல்களே  குழல்களாய் ஒலிக்கட்டும் என முடிவெடுத்தார் போல சங்கதிகள் -அதுவும் ஏற்ற இறக்கங்களை அற்புதமாக வடிவமைத்து அவை திருமதி சுசீலாவின் குரலில் கேட்பதே ஒரு சுகானுபவம்..

அது மட்டுமா?  ஆணுக்கு சொற்களே இல்லாத ஒரு காதல் டூயட் இந்தப்பாடல்., இது என்ன வினோதம் என்போர் நன்கு கவனியுங்கள் எந்தக்காலத்திலோ தமிழ் திரை இசை கற்பனைக்கு எட்டாத உயரத்தை அனாயாசமாக கைப்பற்றி கோலோச்சிக்கொண்டுதான் இருந்தது என்பதற்கு இப்பாடலில் அமைந்த எண்ணற்ற உத்திகளை புரிந்துகொண்டால் போதும். சிகரம் தொட்டவர்கள் கடைப்பிடித்த  அமைதி  வேறு  சிலருக்கு உதவி செய்துவிட்டது என்பதே உண்மை.

அப்படி இந்தப்பாடலில் என்னதான் இருக்கிறது என்று

கேட்கதோன்றுதல் இயல்புதான்.   அதையும் பார்த்தால் தானே "பாடலை உணர்வோம்" என்ற தலைப்பிற்கு நியாயம் பிறக்கும் .

காதலுனுக்கு சொல் இல்லாவிட்டால் என்ன, இசை, விசில், ஹம்மிங் என்று பிற உத்திகள் என்று எம் எஸ் வி எந்த ஆயுதத்தையும்  கையில் எடுக்கும் இசை மன்னன்.

போங்கடா வார்த்தை இல்லாமல் ரொமான்ஸ் என்ற சிருங்கார ரசம் ததும்ப ஹம்மிங் ஒரு வலுவான உதவிக்கராகிம் என்று எப்போதோ செயல்படுத்தியவர் எம் எஸ் வி..

இவ்விடத்தில் சில தகவல்களை புரிந்து கொள்ளுதல் நலம்.       பி பி ஸ்ரீனிவாஸ் , சாய்பாபா , எஸ்பீ பாலு, எல் ராகவன் மற்றும் அவரே [MSV] கூட ஹம்மிங் தரக்கூடியவர் தான்   அனைத்து வாய்ப்புகளையும் தாண்டி திடீரென்று பிடித்தார் ஒரு மிக ரம்மியமான காதல் ததும்பும் ஹம்மிங் குரலை திரு. எம் எல் ஸ்ரீகாந்த் அவர்களிடம்.

அன்றைய தமிழ் சினிமாவில், குடத்திலிட்ட விளக்காக திகழ்ந்தவர் எம் எல் ஸ்ரீகாந்த். அவரே ஒரு இசை அமைப்பாளர். அவரது குரலையும் திறமை யையும்  நன்கு அறிந்திருந்த எம் எஸ் வி, இப்பாடலில் திரு ரவிச்சந்திரனுக்கு எம் எல் ஸ்ரீகாந்த் அவர்களை ஹம்மிங் செய்ய வைத்தது, யார் இவர் என்று பலரை வியக்க வைத்தது. புதிய குரல்கள் முறையாக வெளிப்படுத்தப்பட்டால் பலரது கவனைத்தையும் ஈர்க்கும் என்பது மறுக்கவொண்ணாத உண்மை 

இவை மட்டுமே அல்ல, இப்பாடலில் எம் எஸ் வி பயன்படுத்தியுள்ள கருவிகளில் ட்ரம் தவிர அனைத்தும் இந்தியக்கருவிகளே.

கிட்டத்தட்ட இதை கண்ணன் பாடலாகவே வடிவமைத்துள்ளனர் கண்ணதாசனும் , எம் எஸ் வியும் எனில் தவறோ மிகையோ அல்ல. 

மேலும் கண்ணன் குழல் ஒலிப்பதும் லீலைகள் செய்வதும் அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் அவன் பாடியதாக நான் அறிந்ததில்லை. அதனாலேயே கூட திரையில் தோன்றிய நாயகனுக்கு சொல் இல்லாத பாடல். இப்போது புரிகிறதா பாடல் உருவாக்கும் போது ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட்டு வந்தது என்பது?.                                 

   தொடரும்   

அன்பன் ராமன்


No comments:

Post a Comment

MAKE LEARNING –A PLEASURE -2

  MAKE LEARNING –A PLEASURE -2      Every teacher should impress upon wards that anything can be learned, provided the learner is attentiv...