HYPERSONIC MISSILE
SCRAM JET TECHNOLOGY
PROJECT VISHNU
ஒலி யை விஞ்சும் அதி வேக
ஏவுகணை
தெளிவாக சொன்னால் ஹைப்பர்சானிக் மிஸைல் எனப்படும் ஒலியைவிட அதிவேக இந்திய ஏவுகணை குறித்த தகவல்கள் அச்சமும் பிரமிப்பும் தர வல்லன. ஏனெனில் இதன் செயல் திறன்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அதி நவீன தொழில் நுட்ப வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்புகளை விளங்கிக்கொள்ள வேறு பல ஏவுகணைகள் குறித்த தகவல் பயன்படும். அவற்றை இயக்கம் எஞ்சின் வகைகள் மூன்று வித வடிவமைப்பில் உருவாக்குகின்றனர். அவை டர்போ ஜெட், ராம் ஜெட் , ஸ்க்ராம்ஜெட் என்பன. அவை அடிப்படையில் ஒரே தத்துவத்தில் இயங்கும் வடிவமைப்புகளே ; ஆனால் எஞ்சின் அளவு, உள்ளமைப்பு மற்றும் ஏற்கும் காற்றின் அளவு போன்ற விவரங்களில்வேறுபாடுகள் கொண்டவை
TURBO
JET
மின் விசிறி போல் சுழன்று காற்றை உள்ளிழுத்து ,அதனை வாயு எரிபொருள் உடன் அழுத்த நிலையில்கலந்து வெப்பம் மிக்க வாயுவை வெளியே தள்ள , உந்து விசையால் விமானம்/ ராக்கெட் இவைகள் முன்னேறிப்பாய்கின்றன. இது டர்போஜெட் அமைப்பு
RAM
JET
இதன் முன்னேற்றம் தான் ராம் ஜெட் [RAMJET ] இது காற்றை வலுவாக எரிபொருளுடன் கலக்க , சுழல் சக்கரங்கள், விசிறி மற்றும் எரிபொருள் கலக்கும் அழுத்த அறை அனைத்தையும் பிணைக்கும் நீண்ட ஷாப்ட் என்ற நீள் உலக்கை போன்ற இணைப்பு அதிவிரைவாக சுழன்று வெப்ப வாயுவை வெளிவிடும் அமைப்பு என விரிவான அமைப்பு உடையது ராம் ஜெட்
[RAM JET ] ஆகாஷ் ஏவுகணையை இயக்குவது .
SCRAM
JET
ஸ்க்ராம் ஜெட்
அதிக சக்கரங்கள் விசிறி, ஷாப்ட் ,
இவை இல்லாமலே ஏராளமான காற்றை உள்ளிழுத்து ஹைட்ரஜன் வாயுவுடன் கலந்து எரியவைத்து அதிவேகமாக பயணிக்க வைப்பது
SCRAM JET. இது சுழலும் பாகங்கள் இல்லாவிடினும் அதிகமான காற்றை ஏற்று எரிவதால் கண்ணிமைக்கும் நேரத்தில் வானில் பாய்ந்து மிகப்பெரும் ஊறு விளைவிக்க வல்லது. நான் இரண்டு வரியில் எழுதி உள்ள தகவல் சற்று விரிவாக பேசப்பட வேண்டியது.
ஆம், இந்த ஏவுகணை கற்பனைக்கு அப்பாற்பட்ட செயல் திறன் கொண்டது. அதாவது மணிக்கு
11,000 கிலோமீட்டர் வேகம் செல்லும் சுமார் 1
மணி + கால அளவில் பூமியை சுற்றிவந்துவிடும். இதன் பொருள் உலகில் எந்த இலக்கையும் தாக்கி சிதைத்துவிடும் என்பதே.. மட்டுமல்ல ஆகாஷ் ஏவுகணை போலவே தந்திரம் சூழ்ச்சி இவற்றை மேற்கொண்டு இலக்கை அழித்துவிடும் என்பதோடு ,
சூழ்ச்சியாக வேறேங்கோபோவதுபோல் போக்கு காட்டிவிட்டு அதி விரைவாக இலக்கை சென்று தாக்கும்.. இவ்வகை ஏவுகணைகள் வரவேற்பு ஆர்ச் போல வளைந்து உயரம் சென்று பின்னர் அங்கிருந்து கீழ்நோக்கிப்பாய்ந்து கண் இமைக்கும் நேரத்தில் இலக்கின் மீது பாய்ந்துவிடும். அதாவது விண்ணிலிருந்து கீழே விழும்போது பன்மடங்கு வேகம் பெற்று வருவதால் எந்த எதிர்வினை கருவிகளும் இதை நெருங்கமுடியாது என்கின்றனர். எந்த ரேடார் இருந்தாலும் இந்த ஏவுகணையை பிடிக்க இயலாது , அவ்வளவு வேகம்.. இந்த மிசைலை தடுக்கவோ தாக்கவோ-- செய்வதறிமால் திகைக்கக்கூட நேரம் இருக்காது. கீழ் நோக்கிப்பாயும் முன் இது எட்டும் வான்வெளி தூரம் 4800 கிலோமீட்டர் ,
CRUISE வகைகள் எட்டும் உயரம் 15 கிலோமீட்டர் .
இதை சாத்தியமாக்குவது
SCRAM JET வகை எஞ்சின் . நமது எஞ்சின் தரை நிலையில் 1000 வினாடிகளுக்கு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. அதுவே மிக அதிகம் என்கின்றனர். இதைப்போன்ற அமெரிக்க தயாரிப்புகள் மேற்கொண்ட சோதனை 250 வினாடிகளுக்கு மட்டுமே. தரையில் சோதித்தால் ஏற்படும் அதிர்ச்சியும் குலுக்கலும் .மிக அதிகமாக இருக்கும் எனவே குறுகிய நேர சோதனைகள் சாத்தியம். நமது SCRAM JET கொண்ட ஏவுகணை
2000 கிலோ எடை கொண்ட குண்டுகளை [அணு ஆயுத வகையினை]எடுத்துச்சென்று துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இதனை வடிவமைத்தோர் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மைய [DRDO ] குழு விஞ்ஞானிகள். இந்த வகை ஏவுகணையின் பெயர்
ETLDHCM
EXTENDED
TRATEJECTORYLONG DRATION HYPERSONIC CRUISE MISSILE.
இது முற்றிலும் இந்திய தயாரிப்பு ,
எனவே உதிரிபாகங்கள், ஒப்பந்த குறுக்கீடுகள் எதுவும் இன்றி உலகை மிரள வைக்கிறது இந்த செயல் திட்டம் இதன் பெயர் ப்ராஜக்ட் விஷ்ணு
[PROJECT VISHNU ]
இந்திய விஞ்ஞான முன்னேற்றம் வரும் நாட்களில் பெரிதும் பேசப்படும். ]
இது குறித்த பல விவரங்களை திரு ஆசிர சாமுவேல் விளக்குகிறார். இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=M1W0u0v2ri0 Indian scramjet technology Asir [PROJECT VISHNU]
No comments:
Post a Comment