INDIA’S BUNKER BURSTER
[AGNI BOMBS ]
பங்கர் தகர்ப்பு குண்டுகள்
பதுங்கு குழிகளை
BUNKER என்கிறோம். இவை சாசுதாரண குழிகள் அல்ல, வலுவான சுவர் மற்றும் பூமியில் ஆழம் நிறைந்த இடங்களில் அனைத்து வசதிகளும் கொண்டவை. இவை ஒரு ஊர் போல அனைத்து வசதிகளும் கொண்ட அமைப்புகள். முக்கியமான ராணுவ கருவிகளையும் ,
குண்டுகாலையும் பிறர் நெருங்க முடியாமல் பாதுகாக்க இந்த பங்கர்கள் பயன் படுகின்றன, மேலும் பொது மக்களை போர்க்கால அபாயங்களிலிருந்து மறைவிடத்தில் பாதுகாக்கவும் இவை உதவுகின்றன. சுவிட்சர்லாந்து இவ்வகை குழிகளை அதிக அளவில் உருவாக்கி வைத்திருப்பதாக செய்திகள் உண்டு. ஆப்கனிஸ்தானின் அமைப்பில் இயற்கையிலேயே மலை அமைப்பில் இதுபோன்ற பதுங்கு குழிகள் அமைந்துள்ளன, எனவே இவற்றின் உள்ளே ராணுவ கருவிகள் போர் விமானங்கள் மற்றும் ரகசிய கருவிகளையும் ஒளித்து வைக்கின்றனர்.
என்ன ஒளித்து என்ன ?
பங்கர்களையே உடைத்து நொறுக்கிவிட்டால் உள்ளே இருக்கும் பொருட்களையும் உடைத்து சிதைத்துவிட முடியும். இவ்வகை தகர்ப்பு குண் டுகளை , நாங்கள் தான் வைத்திருக்கிறோம் என்று அமெரிக்க ராணுவம் மார் தட்டி வந்தது. திடீரென்று அதை விட வலிமையான பங்கர் தகர்ப்பு குண்டுகளை இந்தியா தயாரித்து விட்டது என்பதை அறிந்த நாடுகள் ஐயோ என்று அலறுவது ஒரு புறம் ;
அதே நேரத்தில் ஐயா தகர்ந்தது அமெரிக்க ஜம்பம் என்று உள்ளூர நகைப்பதும் நடந்து வருகின்றது.
இதில் அதி முக்கிய தகவல் யாதெனில் இந்த பங்கர் குண்டுகளை வடிவமைக்க இந்திய பயன் படுத்துவது
nuclear waste எனப்படும் யுரேனிய கழிவுகளை. யுரேனியத்தை சுத்தகரித்து பெரும் சுத்தமான யூரேனியம் சக்திமிக்க அணு பொருள். ஒரு டன் மூலப்பொருளை க்கொண்டு சுமார் 7
கிராம் அளவிற்கே கிடைக்கும் மீதி உள்ள 99.93 அளவுப்பொருள் வேஸ்ட். ஆனால் இது குண்டுகளின் வெளிப்புற சுவராக அமைக்கப்பெறும் போது ,
சுவர் மிகுந்த தடிமனை பெற்று ,
மோதினதும் பெரும் வெப்பத்தையும் சேதாரத்தையும் விளைவிக்கும்.. இதனால் அடிவாங்கிய பங்கர் முற்றாக அழிந்து ,
பதுக்கிவைத்த பொருள் / உயிர் அனைத்தும் தகர்க்கப்படும். சத்தமில்லாமல் இந்திய விஞ்ஞானம் பலரையும் மிரட்டிக்கொண்டிருக்கிறது எனில் மிகை அல்ல. மேலும் அதிக விவரங்களை திரு .
ஆசிர் அவர்கள் விளக்குகிறார் . கேட்டு தெரிந்து கொள்ள இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=mNvB-VZsvt0 ASIR SAMUEL, T
அன்பன்
ராமன்
No comments:
Post a Comment