Tuesday, August 5, 2025

LET US PERCEIVE THE SONG -32 -a

 LET US PERCEIVE THE SONG -32   -a        

பாடலை உணர்வோம் -32 -a

Kaadhal kaadhal enru pesa [ UUV -1972] KD  MSV PS ML S -II

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ [ உத்தரவின்றி உள்ளே வா- 1972] காண்ணதாசன் , எம் எஸ் வி, குரல்கள் பி சுசீலா , எம் எல் ஸ்ரீகாந்த் -II

சென்ற பதிவில் ......

மேலும் கண்ணன் குழல் ஒலிப்பதும் லீலைகள் செய்வதும் அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் அவன் பாடியதாக நான் அறிந்ததில்லை. அதனாலேயே கூட திரையில் தோன்றிய நாயகனுக்கு சொல் இல்லாத பாடல். இப்போது புரிகிறதா பாடல் உருவாக்கும் போது ஆழ்ந்த கவனம் செலுத்தப்பட்டு வந்தது என்பது?. 

அதனால் ஹம்மிங் மூலமே நாயகன் மன  உணர்வினை காட்ட வேண்டும். அதனாலேயே, எண்ணற்ற மாறுபாடுகளுடன் ஆங்காங்கே பெண் குரலுக்குப்பின் ஹம்மிங் இடம் பெற்றுள்ளது.

இத்துணை திட்டமிடல் இப்பாடலை வெகு கவனமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைத்துள்ளது என்பதை அன்பர்கள் ஊன்றி கவனித்துப்புரிந்து கொள்ள வேண்டும். 

கவியரசரோ கண்ணனின் தாசன், விடுவாரா சந்தர்ப்பத்தை? மனிதர் கொட்டிவிட்டார் காவிய ரசம் ததும்பும் சொற்களை. .

பாடல் நெடுகிலும் சிருங்காரமும் , உள்ளார்ந்த நெருக்கமும் பெண் குரலில் வெளிப்பட ரசம் மேலோங்கி ஆனால் விரசம் இல்லாத சொல்லாடல்.

அதனால் தான், இப்பாடல் கண்ணன் பாடல் என்ற அந்தஸ்துக்கு உரியது என்றே சொல்லத்தோன்றுகிறது.

கண்ணதாசன் சங்க இலக்கியம் பக்தி இலக்கியம் இரண்டையும் ஆழ்ந்து உள்வாங்கிய கவிஞர். வாய்ப்பு வரும்போதெல்லாம் முறையான இலக்கியநயம் வெளிப்பட கவிதை புனைவது அவருக்கு வாய்த்த சிறப்பு. இதுவோ கண்ணன் பாடல் எனவே பிருந்தாவனம் ., யமுனா நதி என்றெல்லாம் வர்ணனைகள்  

"கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் "

கல்யாணப்பூப்பந்தல் எந்தன் மனம் "  என்கிறாள் அபலையாக வந்தவள்

நீராட நீ [ர்] செல்லும் யமுனா நதி என்று பாடி விட்டு

மங்கல  மங்கையின்  மேனியில் தங்கிய

மஞ்சள் நதியோ, குங்கும நதியோ 

என்று வியக்கிறாள். [காதல் பித்தம் அதிகரித்து உடலில் மஞ்சள் நிறம், காதல் நாணம் மேலோங்க சிவந்த உடல் குங்கும நதியோ] என்று கவிஞன் பார்வை

காவிய நிலையில் இருந்து தன்னிலைக்கு வந்த பெண்

காணாத உறவொன்று நேர் வந்தது ,

கண்ணா உன் அலங்காரத்தேர் வந்தது

வாழாத பெண் ஒன்று வழிகண்டது 

வாடிய பூங்கொடி நீரினில் ஆடிட

மன்னா வருக மாலை தருக 

சாய்வெழுத்துகள் பகுதியில், பாடல் வேகம் கொண்டு பயணிப்பதைக்காணலாம். அவை இரண்டும் வர்ணனை தாண்டி அவளது வாழ்வுக்கு வழிதேடும் முயற்சியில் பாடப்படும் வரிகள் அதனாலும் சந்த அமைப்பினாலும், வேகம் எடுத்து செல்வதுகூட கேட்பதற்கு ரம்மியமாக அமைக்கப்பட்டுள்ளது. 

இப்போது நேரடியாகவே களத்தினை விளக்கும் பெண்மனம் .            

பூ மாலை நீ தந்து  சீராட்டினால்

புகழ் மாலை நான் தந்து  தாலாட்டுவேன்

பாமாலை பலகோடி பாராட்டுவேன்

பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம்

 சொல்லிட வருவேன் –“ஏதோ" தருவேன்  என்று சொல்ல முடியாமல் சொல்கிறாள்

மீண்டும் சாய்வெழுத்துப்பகுதியில் பாடல் வேகம் கொண்டு பாய்வது பல உணர்வுகளை நேர்த்தியாக சொல்கிறது.  சொல்லத்தெரிந்தவர்கள் சொல்லி விட்டார்கள். 

இதில் நான் ஹம்மிங் குறித்து எதுவும் சொல்லவில்லை

ஏன் எனில் அதை விளக்கும் ஞானம் எனக்கில்லை.. ஒன்று மட்டும் தெரியும் மிகச்சிறப்பான வடிவம் கொண்ட காவியப்பாடல்

நாம் இதைப்பற்றிஎல்லாம்  யோசிப்பதே கிடையாது ஆனால் நீண்ட விமரிசனம் செய்வோம். "ப்ச்"--  சினிமா பாட்டில் என்ன இருக்கிறதென்று அலட்சியமாக பேசுவோம். கீழே இணைப்பு உள்ளது பாடலை ஆழ்ந்து ரசித்து புரிந்து கொள்ளுங்கள். 

https://www.youtube.com/watch?v=6WZwIDk9C5g

இதே பாடலை சுபஸ்ரீ விளக்க மேலும் பல தகவல்களை அறிய இணைப்பு கீழே.

https://www.youtube.com/watch?v=YjI3O6rryEk  QFR -550

பிறிதொரு பாடலுடன் பின்னர் சந்திப்போம்.

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -32 -a

  LET US PERCEIVE THE SONG -32    -a          பாடலை உணர்வோம் -32 -a Kaadhal kaadhal enru pesa [ UUV -1972] KD   MSV PS ML S -II காதல்...