Tuesday, August 12, 2025

LET US PERCEIVE THE SONG -33

LET US PERCEIVE THE SONG -33          

பாடலை உணர்வோம் -33

ராஜாவின் பார்வை [அன்பே  வா -1966] வாலி, எம் எஸ் விஸ்வநாதன் , டி எம் எஸ், பி சுசீலா

என்னவோ தெரியவில்லை 'ராஜா' என்ற சொல்லில் துவங்கும் பல பாடல்களிலும் எம் எஸ் வியின் முத்திரை வெவ்வேறு வகையாக அமைந்து ஒவ்வொன்றும் பெரும் வெற்றி ஈட்டிய பாடல்கள்.

மனிதர் எங்கிருந்துதான் இசை தொகுப்புகளை அமைத்துக்கொடுப்பாரோ --ஆனால் ஒன்று போல் ஒன்றில்லை ஒன்றும் சோடை போனதும் இல்லை. அப்படியொரு விசேஷ கவனம். அதிலும் இந்த பாடல் பல வகையிலும் தனி எனில் தவறில்லை. ஆம் பாடலுக்கு அவர் வழங்கியுள்ள இசை அப்படி.  இப்போதும் கூட இதுபோல் ஒரு கம்பீர இசையும் ராக அமைப்பும் தாள கட்டுகளும் உருவாக்குதல் எளிதன்று.

 ஆம் 1966 எம் எஸ் விக்கு ஒரு போராட்ட காலம்.

1000 இல் ஒருவன் படத்திற்குப்பின் ஒரு வண்ணப்படம் எம் ஜியாருக்கு  அதிலும் பெரிய நிறுவனமாகிய வி எம் குழுமத்திற்கு.[ராமமூர்த்தியை விட்டு விலகியிருந்த நேரம்]  பாடல் களுக்கு எண்ணிக்கையில் குறைவில்லை -10 பாடல்கள் அனைத்திலும் தனித்தன்மை வேண்டும் சாமானிய சவாலா  அது?  நினைத்துப்பார்த்தால் அதீத நெஞ்சுரம் வேண்டும்.

இசை என்று வந்துவிட்டால் எம் எஸ் வி எந்த சமுத்திரத்திலும் நீஞ்ச தயங்காதவர். மனிதர் பியானோ வை ஏற்பாடு செய்து தரச்சொல்லி பலவாறாக முயன்று திடீரேன்று டங் டங் டங் டங் டங் என்று இசைக்கத்துவங்க திரு வி எம் குமரன் இதுதான் சார் ட்யூன் என்று குதூகலிக்க அதன் பின்னர் வாலியின் விளையாட்டு. 

இசையில் அந்நாளில் பெரும் புரட்சி ஏற்படுத்திய பாடல். தொய்வே இல்லாமல் ட்யூனும் இசையும் தழுவிச்செல்வது எம் எஸ் வியின் விசேஷ பார்முலா என்று என்னால் அடித்துச்சொல்ல முடியும்.. பாடல் ஒருபுறம் சொல் வரிசையில் சுமந்த புதுமை எனில் காட்சி அமைப்பில்    மற்றும் காஸ்ட்யூம் எனும் உடை அமைப்பில் அது வரை தமிழ்த்திரை கண்டிராத அமைப்பு மற்றும் கண்ணுக்கு விருந்தாக கனவுக்காட்சி. எம் ஜியார் படங்களில் கனவை பெண் தான் துவங்குவார் இப்போதும் அவ்வாறே.. ஆனால் ஒரு சிறு  மாற்றம்

 ம் ஹ்ஹம் ஹும் ஹும் அஹ அஹ என்று பெண் துவங்கியதும் தேவலோக சிறார் வானிலிருந்து பூ மாரி பொழிய பாடல் துவங்குகிறது. அந்நாளில் graphics என்னும் உதவி இல்லை  ஆயினும் ஆர்ட் டைரக்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் [மாருதி ராவ்] திட்டமிட்டு  உருவாக்கிய இப்பகுதி வரவேற்பு பெற்றது. ஆனால் இதே படத்தில் வேறொரு பாடலில் மாருதிராவ் கோட்டை விட்ட ஒரு பகுதி பாடலில் பின் பகுதியில் சரோஜாதேவி முகம் பவுடரில் மூழ்கி திடீரென்று வைட் ஆங்கிள் லென்ஸ் வழியே விகாரமாக தெரிவதும் அரங்கேறியது.  . ஆனால் வெண் குதிரை தலை அசைத்துக்கிளம்ப குளம்பொலி ஆர்வமாய் முன்னேற பாடல் மேல்வானில் தாவிப்பறந்த  அன்றைய விந்தை.

அந்தக்காட்சியே ஒரு விந்தை தான். ஏன் எனில் , குதிரை தலையை அசைத்து ஓடுவதாக பாவனை செய்ய, சாரட் [chariot ] சக்கரம் சுழல , நாயகியும் நாயகனும் வண்டியில் பயணிப்பதாக நாம் நம்பி ஏற்றுக்கொண்டோம். ஓடாத வண்டியில் எம் ஜியார் லகானை இழுத்து அசைத்து , உடலையும் அசைத்து ஏதோ பயணிப்பதாக மாயையை தோற்றுவிக்க ரசிகர்கள் விசில் பறக்க லயித்து ரசித்த விந்தை.

அது மட்டுமா ஏதோ தேவலோக விண்மீன்கள் போல பின்னணியில் புள்ளிபுள்ளியாக நட்சத்திரங்கள் போல உலவும் மாயைதான் என்ன?

அதுவா, , வண்டியின் பின்னே 2-4 வரிசையில் கலர் செல்லோ பேன் [cellphane ] கண்ணாடிபோன்ற படுதா க்களை மேலிருந்து கீழ்/ கீழிருந்து மேல் என இழுக்க , பக்கவாட்டில் இருந்து செலுத்தப்படும் மின்னொளி          

 ஆங்காங்கே நட்சத்திரங்கள் போல வெல்வேறு வண்ணப்புள்ளிகளாக ஒளிர வானுலக காட்சியாக காண்கிறோம். இவை ஒரு புறம் இருக்க, ஓடாத குதிரைக்கு குளம்பொலி தந்து விந்தையை மேம்படுத்திய ஒலி வித்தை, மீசை முருகேஷ் வழங்கியது.

இரு மூங்கில் குழல்களை லயம் பிசகாமல் ஒரு பளிங்கு டைல் மீது மாறி மாறித்தட்ட குதிரை வெட்கப்படும் அளவுக்கு துல்லிய ஒலி . இப்படியெல்லாம் வெறும் மனித முயற்சியில் விளைந்த வலிமையான ஆர்கெஸ்டரேஷன் -சாதாரண கற்பனைக்கு அப்பாற்பட்ட அற்புத கட்டமைப்பு.

பாடலை மேலும் தேவலோக அமைப்பில் வெளிப்படுத்த           எம் எஸ் வி அமைத்த கோரஸ் ஒலிகள் ப்ரத்தியேகமானவை .  எம் எஸ் வியின் கோரஸ் பற்றி புத்தகமே எழுதலாம்.  அவ்வளவு வகைகளில் கோரஸ் அமைத்த ஒரே இசை அமைப்பாளர் அவரே. இவ்வனைத்தும் ஒருசேர காட்சிப்படும் போது ரசிகர்கள் மயங்கி கிறங்குவது இயல்பன்றோ?.

இப்பாடல் காலத்தால் அழியாத ஆக்கம் எனில் மிகை அல்ல.

பாடலுக்கு இணைப்பு இதோ https://www.youtube.com/watch?v=8megyok_d8w

 ANBE VAA RAAJAVIN  VAALI MSV , TMS PS 1966

மேலும் அதிக [3] இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும்  விசேஷ தகவல்கள் உள்ளன. எனோ தானோ என்று கடந்து போகாமல் ஆழ்ந்து கவனித்து கேட்டு இன்புறுங்கள்

AVM KUMARAN ON MSV https://www.youtube.com/watch?v=YfyoRHrwnz4

https://www.youtube.com/watch?v=P7gYwNVOp2k rajavin parvai priya

https://www.youtube.com/watch?v=LyfgxlgVSu0&list=RDE3Ho_XQ8vQk&index=2 mukesh , party trumpet Thomas

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US PERCEIVE THE SONG -33

LET US PERCEIVE THE SONG -33            பாடலை உணர்வோம் -33 ராஜாவின் பார்வை [ அன்பே    வா -1966] வாலி , எம் எஸ் விஸ்வநாதன் , டி எ...