KULASEKARAPATTINAM
குலசேகரப்பட்டினம்
ஏதோ நம்ம ஊர் போல் இருக்கிறதே என்கிறீர்களா ?
சந்தேகமென்ன நம்ம ஊரே தான்.
இவ்வூர் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்த கடலோர சிற்றூர் . குலசை திருவிழா [முத்தாரம்மன் கோயில்] இங்கு விமரிசையானது. ஆனால், இன்று விண்வெளி- த்துறையில் சாட்டிலைட் அனுப்ப மும்மரம் காட்டி வரும் பல நாடுகளும் முணுமுணுக்கும் பெயர் குலசேகரப்பட்டினம்.
இது தான் இந்தியாவின் SSLV [SMALL SATELLITE
LAUNCHING VEHICLE ] என்ற ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள விண்வெளி துறைமுகம் என்ற பெருமைக்குரியது. இது மிகப்பெரும் வருங்கால முக்கியதத்துவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையம் எனில் மிகை அல்ல. ஆங்கிலத்தில்
'STRATEGIC LOCALE ' என்பார்கள். அதாவது இயற்கையிலேயே பல அனுகூலங்களை உள்ளடக்கி ராக்கெட் ஏவும் பணிக்கு சாதகமான நிலப்பரப்பு பாதுகாப்பு போன்ற அம்சங்கள் கொண்டு இயங்கும் அமைதிப்பட்டணம் இது.
தென் இந்தியாவின் பூகோள அமைப்பு பூமத்திய ரேகைக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் பல நன்மைகளைப்பெற்றுள்ளது. இப்பகுதி களில் புவிஈர்ப்பு விசை குறைவு என்பதால் குறைந்த எரிபொருள் செலவில் ராக்கெட் விண்வெளியில் பாய்ந்து முன்னேறும் [எரிபொருள் சிக்கனம்]. இவ்வூரின் இயற்கை அமைப்பு நமக்கு இடையூறு செய்யும் சில நாடுகளால் எளிதில் நெருங்க முடியாத பகுதியில் அமைந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள ராக்கெட் எஞ்சின் சோதனை நிலையம் மகேந்திர கிரியில் இருந்து
90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது [ஸ்ரீஹரிகோட்டா சுமார் 1450 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது] இதனால் என்ன என்பதை திரு ஆசிர அவர்கள் வீடியோவில் விளக்குகிறார் கேளுங்கள்.
மாபெரும் PSLV GSLV போன்ற வற்றை விண்ணில் செலுத்த சுமார் 190 கோடி ரூபாய் பொருள் செலவு ஏற்படும் அவற்றை பயன்படுத்தி சிறிய சாட்டிலைட்டுகளை விண்ணில் ஏவினால் சிறியநாடுகளால் செலவை ஏற்க இயலாது..
எனவே சிறிய ரக சாட்டிலைட்களை விண்ணில் செலுத்த சிறிய ஏவுதளம் மிக்க உபயோகம் தரும்.
அவ்வகையில் குலசேகரப்பட்டின ஏவு தளம் மிகவும் சிக்கனமானது இங்கு ஒரு முறை சாட்டிலைட் செலுத்த சுமார்
35 கோடி ரூபாய் போதும். மேலும்
500 கிலோ எடை யில் 500 கிலோமீட்டர் உயரத்தில் சாட்டிலைட் நிறுவலாம். அதாவது சிறு சிறு வடிவில் மொத்தம்
500 கிலோ எடைக்கு சாட்டிலைட்களை 35 கோடி ரூபாய் செலவில் விண்ணில் நிறுவலாம் .
சாட்டிலைட்நிறுவ காத்திருப்பு பட்டியலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள..
இவை மட்டுமல்ல ஸ்ரீஹரிகோட்டாவில் ஒரு ராக்கெட் இயக்கிட சுமார் 550 - 600 பேரின் உழைப்பு மாதக்கணக்கில் தேவை இங்கு, சுமார் 1
வாம் -10 நாட்களில் சுமார் 6 பேரின் உழைப்பில் மாதம்
2, 3 முறை கூட சாட்டிலைட் களை விண்ணில் செலுத்தலாம்.
வருங்காலத்தில் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்றும் விரிவாக்கம் பெற்று மிகப்பெரிய ஏவு தளமாக முன்னேறும் என்ற நம்பிக்கையையும் தருகிறது குலசேகரப்பட்டினம். மேலும் தகவல்களுக்கு இணைப்பு இதோ
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment