Sunday, August 10, 2025

UNABLE TO UNDERSTAND ANYTHING -5

 UNABLE TO UNDERSTAND ANYTHING -5

ஒன்றும் புரியவில்லை -5

LEARNING [ BASICS-4]

அறிதல் [அடிப்படை-4]

ஆசிரியரின் பிற செயல் தேவைகள்

2 முறையான வரிசைப்படுத்துதல்  3 நிதானமாக விளக்குதல் 4 ஆழமாக விவாதித்தல் 5 அனைத்தையும் ஒட்டுமொத்தமாக சொல்லி விளங்க வைத்தல்.

இந்த பட்டியலைப்பார்த்தவுடன் சில [பேர்] ஆசிரியர்கள் [அதாவது சில பேராசிரியர்கள் ] நற நற வென்று பல்லைக்கடித்து சிக்கினால் கடித்து குதற தயாராக இருப்பார்கள்.     கருத்து சொன்னவனை  கடிக்கலாம்.  

முறையான வரிசைப்படுத்துதல் 

ஆசிரியப்பணியில் வெற்றி பெற விரும்பினால் பல்லைக்கடிக்காமல் பல வகையான உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களைப் படியுங்கள். சாலை ஓரம் விற்கும் உள்ளூர் நூல்களை அல்ல.

உள்ளூர் எழுத்து கேவலமா ? என்றால் இல்லை ஆனால் அது உலகத்தரம் வாய்ந்ததெனில் கண்டிப்பாக படியுங்கள். எளிமை ஒன்றையே நினைத்துக்கொண்டு புத்தகங்களை தேர்வு செய்யாதீர்கள்.

ஏனெனில், மிகச்சிறந்த நம்பகத்தன்மையை அடிப்படையாகக்கொண்டு   வடிவமைக்கப்பட்ட நூல்கள் தரும் ஆணித்தரமான விளக்கங்களை தரவல்ல ஆய்வாளர்களின் எழுத்துகளை ஆழ்ந்து பயின்றால் உங்கள் வகுப்பறை செயல்களும் உயர் நிலையை எட்டி உங்கள் செயல் திறனுக்கு பெருமை சேர்க்கும்.. 

ஆசிரியப்பணியின் சிறப்பே அசைக்கவொண்ணாத வாதங்களைக்கொண்ட கருத்துகளை விளக்கும் மாண்பில் தான் வேரூன்றுகிறது என்பதை உணர்க. அந்நிலை எய்த தீவிர முனைப்பும் புதிய அணுகுமுறை களையும் நல் உரைகளையும் தொடர்ந்து புதுப்பித்தல் அவசியம். நான் என்றோ முனைவர் பட்டம் வாங்கிவிட்டேன் இன்னும் ஏன் படிக்க வேண்டும் என்று நினைத்தால் தயவு செய்து முனிவராக மாறி தவம் செய்யுங்கள் முனைவர் என்று சொல்லிக்கொண்டு தவறு செய்யாதீர்கள்.

மாறி வரும் உலகில் புதுப்பித்தல் இல்லாத எதுவும் வீழ்ச்சி அடையும் என்பது கண்கூடு. ஒன்றை நினைவில் நிறுத்துங்கள் சில ஆண்டுகள் முன்னர் அனைவரும் கம்பியூட்டர் கல்வி நோக்கி ப்படை எடுத்தனர். இப்போது கம்பியூட்டர் கல்வி , பொறியியல், மைக்ரோபயாலஜி இவை முன்பு போல் முழங்கவில்லை.

ஏன் எனில் மாறுபட்ட தேவைகளை நோக்கி கல்வியும் பயணிக்கிறது. எனவே மொழிகள் உட்பட எந்த கல்வித்திட்டமும் மாற்றங்களை ஏற்று முன்னேறினால் அன்றி தொடர்ந்தும் பயணிக்க இயலாது.. பழைய தலைப்பாக இருப்பினும், புதிய விளக்கங்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன.

எனவே கருத்துக்கோவைகள் மேம்படும் போது அவை முறையான வரிசையில் விளக்கப்பட வேண்டிய  தேவையும் கடமையும் எழுகின்றன. நான் அந்நாளில் எழுதிய நோட்ஸ் கையில் இருக்கிறது- என்று அதை வகுப்பறையில் வாசிக்கும் ஆசிரியன் சந்தேகமின்றி சமூகக்குற்றவாளி என்பதே உண்மை.

எனவே புதுப்பிக்கப்பட்ட கருத்துகளையும் அவற்றின் முறையான வரிசையையும் முன்னிலைப்படுத்திக்கற்பித்தால் பயில்வோருக்கும் அவற்றின் சீரான அமைப்பு புலனாகும்.. வரிசைப்படி அமைக்காமல், ஒரு சில ஆசிரியர்கள் அவ்வப்போது கருத்துகளை சொல்லி காலத்தை ஓட்டுவதால் கற்போரின் வசைமொழிக்கு ஆளாகிறார்கள்.

அதிலும் உயர் கல்வி எனில் மிகுந்த கவனமும், முறையான சொல்லாடலும்,  தேவையான விளக்கங்களும் reference எனப்படும் நூல் குறியீடுகளும் பெரிதும் தேவை.

எனவே பயிற்றுதல் பணியில் முறையான வரிசையில் கருத்துகளை அமைத்து விளக்குதல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.     தொடரும்

No comments:

Post a Comment

FENU GREEK

  FENU GREEK                          Tam: ‘Vendhayam’ Mal: Uluva, Kan: Menthe, Telugu: Menthulu ,    Hindi: Methi’ Botanically Trigonel...