Friday, August 15, 2025

UNABLE TO UNDERSTAND ANYTHING -6

 UNABLE TO UNDERSTAND ANYTHING -6

ஒன்றும் புரியவில்லை -6

LEARNING [ BASICS -5]

அறிதல் [அடிப்படை-5]

ஆசிரியரின் பிற செயல் தேவைகள்

3 நிதானமாக விளக்குதல்

நிதானமாக விளக்குவது என்பது, பல படிநிலைகள் கொண்டது.

சொல்ல வந்த கருத்தை மெதுவாக பேசுவது என்பது மட்டுமே  'நிதானமாக விளக்குவதாகாது' என்பதை ஆசிரியர்கள் நன்கு மனதில் கொள்ள வேண்டும். அப்படி என்றால் செய்ய வேண்டியது என்ன?

ஒவ்வொரு கருத்து அல்லது பாடப்பகுதிக்கும், ஒரு அடிப்படைப்புள்ளி அல்லது மையக்கருத்து- ஒன்றாவது இருக்கும். அந்தப்புள்ளியில் இருந்து பேசத்துவங்கினால், முறையான தொடர்ச்சி அல்லது பொருத்தமான இணைப்பு கிடைக்கும்.

இல்லையேல், ஒவ்வொரு chapter எனப்படும் பகுதியும் முந்தைய மற்றும் பிந்தைய பகுதிகளுக்கு எவ்வாறு தொடர்புடையது என்பதை புரியாமலே 'மனப்பாடம்' எனும் மனன ம் செய்யும் [mugging  up ] நடைமுறை யை பயில்வோர் மேற்கொள்ள துவங்குவர்.

அதாவது அறிதலை அடைய புரிதல் தேவை என்ற அடிப்படைமுற்றிலும்  தகர்வுண்டு 'புரியாமலே' கர தலைப்பாடம் என்னும் தறுதலை அணுகுமுறை துவங்கி கல்வியின் நோக்கமே  வினாவுக்குரிய செயலாகும்.

இந்த அவலம் முற்றிலும் தவிர்க்கப்பட ஆசிரியரின் செயல் திறன் பெரிதும் பயன் படும்.

மாணவர்கள் மனனம் செய்ய கிளம்புவதே- புரியாத பகுதிகளில் இருந்து விடை அளிக்கத்தான். ஏன் ஒருவர் புரியாமலே தேர்வுக்கு செல்ல வேண்டும்.? சற்று தெளிவாகக் விளக்கம் அமைத்துக்கொடுத்தால், முறையான புரிதலும் தெளிவும் இயல்பாகவே தோன்றும்.

நிதான மாக விளக்குதல் பல படி நிலைகள் கொண்டது என்று முதலில் குறிப்பிட்டது இதைத்தான்.

அடிப்படைக்கருத்தை நினைவூட்டி , உரிய definition எனும் கட்டுக்கோப்பான 'விதி' தனை பலமுறை சுட்டிக்காட்டி  விளக்கினால் பெருவாரியான பயில்வோருக்கு புரிதல் மேம்படும். அப்படியும் தெளிவில்லை எனில் தனிப்பட்ட சிலருக்கு வகுப்பறைக்குப்பின் நேரடியாக விளக்கினால், அவர்களும் தெளிவு பெறுவர்.

இப்படியெல்லாம் கற்பிக்க வேண்டுமா? எனில்

"நீங்கள் பண்பட்ட திறமையாளர்"   என்பதை நிறுவிட இவைதான் வலிமையான சான்றுகள்.

சான்றுகள் என்பதையும் விட ஆசிரியப்பணியின் மகத்துவம்

"அவர் விளக்கினால் புரியாதவர்களே இருக்க முடியாது" என்ற சமூக அங்கீகாரம் தான். அதனை அடைந்தாலே ஆசிரியர் வெற்றிக்குரியவர் என்ற பெருமைதனை அடைய இயலும்.

நான் அறிந்த வரை, ஆசிரியப்பணியில் எவரும் தோல்வி அடைய விரும்பவதில்லை.

ஆயினும் வெற்றி பெறுவதில்லையே ஏன்? எனில் அவர்கள் உரிய முயற்சியை மேற்கொள்ளாமல் மாணவர்க்கு என்ன தெரியும்? நோட்ஸ் வழங்கிவிட்டால் போயிற்று தேர்வு எழுதிவிடுவார்கள் என்று நொண்டி சமாதானம் பேசுகின்றனர்,

மாணவர்க்கு என்ன தெரியும்? என்ற கேள்விக்கு விடை

ஆசிரியருக்கு என்ன தெரியும் என்பதை 2 நிமிடங்களில் தெள்ளத்தெளிவாக உணரும் judgment என்ற தீர்மானிக்கும் திறன் எந்த மக்கு மாணவனுக்கும் உண்டு என்பதே..

இதனால் தான் ஆசிரியர்கள் திறமை அடிப்படையிலேயே மாணவர்தம் விமரிசனங்களை பெறுகிறார்கள்.

எந்த மிரட்டலும் உருட்டலும் நல்லாசிரியர் அந்தஸ்தை பெற்றுத்தராது.

செயல் திறன் மாத்திரமே மாணவர்தம் அன்பினையும் அங்கீகாரத்தையும் அபரிமிதமாக ஈட்டித்தரும். நிதானமாக விளக்குதல் என்பது ஆழ்ந்த பொருள் நிறைந்த விளக்கங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது என்றே பொருள் காண்க.

ஆசிரியர், 'நாம்' விளங்கிக்கொள்ள வேண்டும் என்று பெரும் முயற்சி கொள்கிறார் என மாணவர்கள் உணர்ந்தால் நன்கு கவனித்து உள்வாங்கிக்கொள்வர்.

 இது சுமார் 3, 4 வகுப்புகளிலேயே நடைமுறைக்கு வரும்.. பின்னர், அதிக நேரச்செலவில்லாமலே விரைவாக கற்பித்தாலும், தொடர்ந்து கவனச்சிதறல் இன்றி கற்க பயில்வோர் விழைவர்.

இதன் அடிப்படை ஆசிரியர் மீது அவர் கொண்ட நம்பிக்கை -அதாவது இப்போது முயன்று புரிந்துகொள்ளாவிடில் பின்னர் இடையூறு நமக்கே என்று உணர்ந்து இந்த செயல் நோக்கி தங்களை மாற்றிக்கொள்கின்றனர்.

பயனுள்ள ஆசானின் அறிவுரைகளை பின்பற்ற மாணவர் சித்தமாக உளர்.

பயனுள்ளவர் என்ற ஏற்பினை அடைவது ஆசிரியனின் உண்மையான முயற்சியில் உள்ளது என்பதை நிறுவ 'நிதானமாக சீராக கற்பித்தல்' பெரிதும் பயன் படும்.

தொடரும்  

No comments:

Post a Comment

UNABLE TO UNDERSTAND ANYTHING -6

  UNABLE TO UNDERSTAND ANYTHING -6 ஒன்றும் புரியவில்லை -6 LEARNING [ BASICS -5] அறிதல் [ அடிப்படை-5 ] ஆசிரியரின் பிற செயல் தேவ...