UNABLE TO UNDERSTAND ANYTHING -8
ஒன்றும்
புரியவில்லை
-8
LEARNING
[ BASICS -7]
அறிதல்
[அடிப்படை-7]
ஆசிரியரின் பிற செயல் தேவைகள்
5 அனைத்தையும் ஒட்டுமொத்தமாக சொல்லி விளங்க வைத்தல்.
ஒவ்வொரு பாடப்பகுதிக்கும், கற்பித்தலில் இறுதி
நிலை இதுவே. எந்த ஆசான் இதை செம்மையாக
நிறைவேற்றுகிறாரோ, அவர் பல கற்போரின் மனங்களை எளிதில் வசீகரிப்பார்.
எல்லாம் முன்னரே சொல்லிவிட்டேனே மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொண்டிருக்கவேண்டுமா என்று அங்கலாய்க்கும் ஆசிரியர்கள் ஒரு பெரும் வாய்ப்பைத்தவற விடுகிறார்கள் . எப்படி எனில், அனைத்தையும் தொகுத்து
சொல்லும் ]போது முதலில் புரிந்து கொள்ள இயலாதோர் கூட , இப்போது அதிகமாகவே புரிந்து
கொள்வர் ஏனெனில் கருத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக சொல்லப்படும் நிலையில் தொடர்ச்சியும் தொடர்பும் நன்கு விளங்கும்.
முன்பொருவர் விளக்கம் கேட்டாரே அவர் எங்கே ஆசிரியர் வினவும்போது
, அதை மறந்திருந்த மாணவர் கூட , இவ்வாசிரியர் மிகுந்த கவனமும் அக்கறையும் செலுத்துபவர்
என்ற ஆசிரிய பிம்பம் வலுவடையும். இந்த நிலையில் அந்தக்கருத்துக்கு தொடர்பான பல தகவல்களை
தொகுத்துச்சொல்ல மீண்டும் ஒரு நல்வாய்ப்பு அமையும். இதுவே ஆசிரியர்கள் தங்களின் ஆளுமைகளை
கௌரவமான முறையில் நிறுவிட பெரிதும் உதவும். எனக்கு அவ்வளவு அனுபவம் இருக்கிறது, இவ்வளவு
திறமை இருக்கிறது என்று பெருமை பேசுவதை விட இது போன்ற உரிய காலத்தில் மற்றும் களத்தில்
தகவல்களை நீர்வீழ்ச்சிபோல தங்கு தடையின்றி வெளிப்படுத்தினால் ஆசிரியரின் செயல் திறன்
குறித்த புரிதலும் மதிப்பீடும் பன்மடங்கு உயரும்.
இரண்டாவதாக
ஆசிரியர் பல கருத்துகளை விரைவாக அடுக்கி சொல்லும்போது,அவரது புரிதலும் ஆர்வமும் மேம்படும்
எனவே இதனை கடனுக்கு செய்யாமல் கடமையாக செய்தல் அவசியம் .ஐயோ இவன் பெரிய ராட்சதன் போல
அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று எல்லைகளை வகுக்கிறானே என்று சி [ப] லர் கொந்தளிக்கக்கூடும். பாடப்பகுதிகளை குறித்து விவாதித்தல் வேப்பங்காயாக
முகம் சுளிக்க வைக்கிறது..
அது ஏன்?
காலப்போக்கில் ஆசிரியப்பணியின் உண்மையான திறன்
அங்கீகாரம் பெறாமலே கிணற்றில் எறிந்த கல்
போல் , இருப்பிடம் தெரியாமல் இருட்டில் மறைந்து விட்டது.
நல்லாசிரியர் விருதுகள், ரத்ததானம், சமுதாய பணிகள்,
தூய்மை பராமரிப்பு, வருகை பதிவுகளை திறம்பட கையாண்டார், திருவிழாவில் கூட்டத்தினரை
சிறப்பாக ஒழுங்கு படுத்தினார் என்பன போன்ற செயல்கள் அடிப்படையில் வழங்குகின்றனர். வழங்கட்டும்.
அதுபோலவே வகுப்பறையில் ஆசிரியப்பணியில் தெள்ளத்தெளிந்த
கற்பித்தல் திறனை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வெளிப்படுத்தினார் என்று ஒரு விருது வழங்கியதாக
நான் அறியவில்லை.
இது போன்ற சூழலில் என்ன கற்பித்தால் என்ன? 5/-
ரூபாய் சம்பளம் அதிகம் தரப்போகிறார்களா என்ன?
உழைத்தவனுக்கும் உறங்கியவனுக்கும் ஒரே ஊதியம் தானே?
எனவே வேறு -புடவை வியாபாரம், ரியல் எஸ்டேட் , மற்றும் தரகு [ப்ரரோக்கர் ] வேலை களில் நல்ல ஆதாயம் கிடைக்கிறதே என்று ஆசிரியப்பணியின்
மாண்பினை சிதைத்த அவலத்தில் நிர்வாகங்களுக்கும், சமுதாயத்திற்கும், பிற பங்கீட்டாளர்களுக்கும்
பெரும் பங்களிப்பு அரங்கேறியது. சொந்த பந்தங்களின்
அடிப்படையில் /மத /மொழி/ வட்டார அடிப்படையில் ஆசிரியர் தேர்வு என வந்துவிட்ட நிலையில்,
"இருக்கவே இருக்கு வாத்தியார் வேலை" என்று ஏதோ வேறு எதற்கும் தகுதி இல்லாதோர்க்கே
ஆசிரியப்பணி என்ற சமுதாயப்பார்வையே முதல்குற்றவாளி எனில் மிகை அல்ல.
ஒரு தடவை விளக்கி கற்பிக்கவே மூச்சு திணறும் ஆண்
/பெண் ஆசிரியப்பணியினர் --RECAPPING என்ற ஆதியோடு அந்தம் என்ற வரிசையில்
கருத்துகளை கோர்வையாக எடுத்துரைப்பர் என்பது கனவை
விட பலம் குன்றியது. எனினும் நல்லவை யாவை மற்றும்
அல்லவை யாவை என்று இனம் காட்டும் இடத்தில் இருந்து கருத்துகளை சொல்லும்போது செயல் வழுவா
விளக்கங்களையும் தர வேண்டும், தந்துள்ளேன் என்றே நம்புகிறேன். ஏற்பதும் எதிர்ப்பதும்
அவரவர் மன நிலை.
ஆசிரியப்பணி என்பது பலர் நினைப்பதைப்போல எளிதானது
அல்ல, மாறாக அது ஒரு வேள்வி. முற்றான அர்ப்பணம் இன்றி வேள்வி ஈடேறாது.
********************
No comments:
Post a Comment