Sunday, September 21, 2025

KALI

KALI

காளி

அட , நவராத்ரி காலத்தில் காளி ,துர்க்கை என்று கிளம்புகிறாயே என்போர், இது இந்திய பாதுகாப்புத்துறையின் மற்றுமோர் அவதாரம் என புரிந்துகொள்வீர்

ஆம், இது ஒரு போர்க்கருவி வடிவமைப்பில் சீற்றமும் ஆற்றலும் கொண்ட பிரம்மாண்டம் .

KILO AMPERE LINEAR INJECTOR என்பதன் சுருக்கமே காளி [KALI ] எனப்படுகிறது. செயல் திறன் மற்றும் தாக்கும் வலிமையில் இது காளியே தான் என்கின்றனர் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள். நமது வாசகர்களுக்கு நன்கு தெரிந்த திரு ஆசிர் சாமுவேல் பல தகவல்களை தருகிறார் . அவற்றில் சில இங்கே தர முயல் கிறேன்

இதை கருவி என்பதா , தளவாடம் என்பதா , தாக்கு தளம் என்பதா -என்ன பெயரில் அழைப்பது என்பதே பெரும் சவாலாக இருப்பது. அரசினர்  எளிதாக "காளி" என்று சொல்லி விட்டனர். செயல் வடிவில் இது ருத்ர தாண்டவ காளி என்றே தோன்றுகிறது. இந்த காளிக்கு இப்போது சுமார் 25 வயதாகிறது. எள்ளளவும் எந்த தகவலும் கசியாமல் பாதுகாப்பு துறையினர் மௌனம் காத்து உலகினரை மிரள வைத்துள்ளனர். அப்படி என்ன மிரட்சி என்கிறீர்களா ?

இருக்காதா பின்னே , எப்போது வந்தாள் , எப்படி தாக்கினாள் ? என்ன ஆயுதம் ? எதுவுமே தெரியாமல் எதிரியை  பூண்டோடு அழித்தாள் , கூண்டோடு கைலாசம் அனுப்பினாள் எது சொன்னாலும் என்ன செய்தாள் என்பது சொல்லவோ, நிரூபிக்கவோ , தடயங்களோ சாட்சிகளோ இல்லாமல் ஒரேயடியாக முனகக்கூட நேரமில்லாமல் ஒழித்துவிடும் திறன் தான் "காளி ". 

இந்திய அரசோ, ராணுவத்தினரோ, பன்னாட்டு உளவு அமைப்பினரோ எதுவும் அறியாத நிலையில் "ஐயோ இந்தியா எங்களை பெரும் தாக்குதலில் ஒழித்துவிட்டது என்று புலம்பியது பாகிஸ்தான். அதுவரை பாகிஸ்தான் இமய மலை உயரங்களில் ராணுவ முகாம்களில் தங்கி பிறநாட்டவர்க்கு சுற்றுலா விசா வழங்கி ஊடுருவல் கைங்கரியங்களை அரங்கேற்றி மகிழ்ந்தது. முகாம்கள் 12800 அடி உயர கடும் பனிமலையில் இயங்கி வந்தன. உரை பனி மைனஸ் 60 டிகிரி குளிர் முகாம் மீது 60-70 அடி பனிப்போர்வை. இதில் ஒளிந்து கொண்டு இந்தியாவுக்கு தொல்லை தந்தது  பாக் ராணுவம்.

2012  April   திடீரென்று ஒரு நள்ளிரவில் 2 மணி அளவில் பனிப்பாறை உருகி முகாம்கள் புதையுண்டு இருந்த சுவடே இல்லாமல் அழிந்தனர் பாக் படை /உறவினர்/ உதவினவர் மற்றும் கூலி வேலை செய்து ஆயுதங்களை   கொண்டு வந்து தரும் ஊழியர்  என அனைவரும் பனியில் சிக்கி மாண்டனர். 

பன்னாட்டு உதவியுடன் சுமார் 1 1/2 ஆண்டுக்குப்பின்[2013 cOctober] 133 ராணுவ வீரர்களின் சடலங்களை மீட்டது பாகிஸ்தான். உலக அரங்கில் இந்திய அரசு கொடூரமான "காளி" என்ற ப்ரம்மாண்ட ஆயுதம் கொண்டு பனி மலைகளை தகர்த்துவிட்டதாக முதன் முதலில் "காளி " பற்றி அறிவித்ததே பாகிஸ்தான் தான் . இந்தியா மௌனம் காத்து,  இயற்கை பேரிடரில் மலைகள் சரிந்திருக்கும் என்று சமாதானம் சொல்லி ஒதுங்கிக்கொண்டது. எவராலும் எதையும் நிரூபிக்க இயலவில்லை

DEW எனும் DIRECT ENERGY WEAPON அமைப்பின் விஸ்தார வடிவமைப்பு தான் "காளி ".     செயலில் பத்ரகாளி ஏனெனில் சுவடே இல்லாமல் அழித்தொழிக்கும் இறை சக்தி போன்றது. கண்ணுக்கு வெளிச்சமோ , புகையடிப்போ, ஒலியோ, எதுவுமே இல்லாமல் இலக்கை உருக்கி தார் போல ஓட விடும். அவ்வளவு வலிய மைக்ரோவேவ் / லேசர் போன்ற சக்தி வாய்ந்த நேரடி திறன் [ENERGY] மூலம் வெகு தொலைவில் இருந்தே கோர தாண்டவம் ஆடிவிடும். 

என்னவென்று புரியாமலே இளகி சாகவேண்டியது தான் , ஓடக்கூட   வாய்ப்பில்லை.   ஏனெனில் லேசரின் துல்லியம் மற்றும் துளைக்கும் திறன் வெகு அசாத்தியம் . உதவிக்கு யாராவது வந்தால் அவரும் இளகி கூழ் போல் சரியவேண்டியது தான்.

குரூர மனம் கொண்ட எதிரிகளை நிர்மூலமாக்க கொடூர உத்திகள் தேவைப்படுகிறதே அதன் விளைவே பலவகைப்பட்ட DEW கருவிகளும் , காளி ,துர்க்கா என்ற குலைநடுங்க வைக்கும் தொழில் நுட்பங்களும் . 

மேலும் பல விவரங்களை திரு ஆசிர் சாமுவேல் விளக்குகிறார் கேட்டு புரிந்துகொள்ள இணைப்பு இதோ

KALI 500 AASIR India's top secret weapon Kali 5000 What weapon is this?Why does Pakistan fear for this weapon#kali KILO AMPERE LINEAR INJECTOR

**************************************************************

1 comment:

KALI

KALI காளி அட , நவராத்ரி காலத்தில் காளி , துர்க்கை என்று கிளம்புகிறாயே என்போர் , இது இந்திய பாதுகாப்புத்துறையின் மற்றுமோர் அவ...