Sunday, September 7, 2025

STEALTHY DEMONS

 STEALTHY DEMONS                              POSTING NO. 1450

ரகசிய ராட்சஷர்கள்                                                        sep 9

 இது என்ன புதிய தொடரா எனில் இல்லை ஆனால் நமது நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பரிமாணம் என்று தீர்மானமாக சொல்ல முடியும். ஆம் நாம் காண இருப்பது ஒளிந்து மறைந்து செயல்படும் நீர்மூழ்கிக்கப்பல்கள் குறித்த சில  நவீன தகவல்கள் . இவற்றின் தேவை பன்மடங்கு அதிகரித்து விட்டதாக பாதுகாப்பு வல்லுநர்கக்ள் எச்சரிக்கை மணி ஒலிக்கின்றனர். இந்த துறை போதிய முன்னேர்ரக்ம் காணா நிலையில்  , நமது பறந்து விரிந்த கடல் எல்லை பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும் அபாயம் இருந்து வந்தது. அதி முக்கிய தேவையாக 35000 கோடி செலவும் பெரும் தளம் அமைக்க போதிய இடமும் ஒதுக்கீடு செய்யாமலே காலம் கடந்து கொண்டிருக்க 2018 ம் ஆண்டில் போதிய நிதியும் இடமும் கையகப்படுத்தப்பட்டு வேலைகள் விரைந்து நடக்க பெரும் ராட்சஷ தளம் INS வர்ஷா உருவெடுத்து வருகிறது சுமார் 80?% நிறைவுபெற்று 2026 ல் முழு திறன்[100%] நிலையை அடையும் .

INS வர்ஷா தளம் 4[Quad ] தோழமை நாடுகளுக்கும் பயன் தரக்கூடியது [அமெரிக்கா , ஜப்பான் , ஆஸ்திரேலியா , இந்திய கப்பற்படைகளுக்கு உபயோகிக்க ].

இத்தளத்தின் சிறப்பு -அணு சக்தியால் இயங்கும் ராட்சத நீர்மூழ்கி கப்பல்களை  வடிவமைக்கவும், பராமரிக்கவும் , சீன அச்சுறுத்தல்களை தகர்க்கவும்  பெரும் உதவி செய்யும். இந்த ரகசிய ராட்சர்கள் கடலில் 200 மீட்டர் ஆழத்தில் உல வுவதால் எவராலும், ரேடார் சாட்டிலைட் என எதுவும் இவற்றை கண்காணிக்க இயலாது. மேலும் இவை பல ஆயிரம் மைல்கள் வரை அணுக்கருவிகளை செலுத்தி எந்த இலக்கையும் தாக்கும் . எனவே உலகளாவிய மதிப்பீட்டில் இந்தியா பிறரை [குறிப்பாக சீனாவை ] மிரட்டிக்கொண்டிருப்பதாக கருதுகின்றனர். 

மற்றோரு ரகசிய ராட்சச கூட்டம் [INS KADAMBA] வங்காள கடலில் 12 உலவி வருகின்றன. எனவே கடல் வழி தொல்லைகளை  சமாளிக்க இந்தியா வெகு விரைந்து ஏற்பாடுகளை செய்து வல்லரசு பயணத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது

மேலும் பல அறிய தகவல்களை திரு ஆசிர் விளக்குகிறார். நன்கு கவனித்து பயன் பெறுங்கள். இணைப்பு இதோ   

https://www.youtube.com/watch?v=8jnHLRNkOqc           AASIR       

 

No comments:

Post a Comment

LIFE –AN ENIGMA

  LIFE –AN ENIGMA Life at large means seeking peace and coexistence, though bemused by vicissitudes of human vagaries. The labyrinth of co...