Sunday, September 7, 2025

WHAT NEXT ?

 WHAT NEXT  ?                     

இனி வேறென்ன ?

கல்வி குறித்து இது வரை நான் எழுதிவந்த தொடர் அநேகமாக முற்றுப்பெறும் நிலை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறது.. அப்பாடா-- என்று பலர் பெருமூச்சு விடுவதை உணர்கிறேன். எனினும் சற்றுப்பொறுங்கள் , இதுபோன்ற தொடர்களை நிறைவு  செய்ய வேண்டுமெனில் , மிகவும் இன்றியமையாத சில முக்கிய அணுகுமுறைகளை தெரிவித்தல் நலம் . இவை:  கே ட்டு அறிதல் , படித்து அறிதல் என இருவகைப்படும்.

கேட்டு அறிதல் நல்ல பயிற்றுவிப்பு திறன் படைத்தோரிடம் வேண்டுகோள் வைத்து பலன் பெறுதல்.

இரண்டாவது நல்ல புத்தகங்களை நாடி தக்வல் திரட்டி அவற்றை வரிசைப்படுத்தி நமது புரிதலுக்கு முறையாக பயன் படுத்துதல். இன்றைய தலைமுறை எதையும் கேட்டு அறிய விழைவதில்லை -இதற்கு பல காரணங்கள் உள .

1 . பணிவுடன் பேசி நமது தேவை குறித்து விளக்கி வேண்டுகோள் வைத்தால் நல்ல பலன் தரும் .

அந்த கிழவனிட ம் போய்  நிற்க வேண்டுமா ? அவன் சட்டை பித்தானை ஒழுங்காகப்போடு, , நகத்தை கடிக்காதே , தலையை வாரிக்கொண்டு வா என்று பெரிய கட்டுப்பாடுகள் விதி ப்பான் , அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது , எனவே நான் என் நண்பர்களிடம் கேட்டு தெரிந்துகொள்கிறேன் என்று மன ரீதியான இறுக்கங்களுக்கே, முன்னுரிமை தரும் தலைமுறை இப்போது.

 இவர்களால் பிறரிடம் ஒன்றி ஒடுங்கி கற்க இயலாது.. எனவே இவர் கள் பெரிதும்  .இழப்பது கேள்விஞானம் மற்றும் அதுசார்ந்த வலிமையான அணுகு முறைகள்.  மேலும், முதியவர்கள் கையெழுத்தை சரியாக்காமல் விடமாட்டார்கள்; இளையோருக்கோ எந்தக்குறையை சுட்டிக்காட்டினாலும் கொலைவெறி தலைக்கேறி அலைகின்றனர். இதன் விளைவே நாம் சந்திக்கும் அரைகுறை ஞானஸ்தர்கள்.

 என்மீது கோபம் வரலாம் ஆனால் இன்றைய நிலை வேறு எப்படி இருக்கிறது/. இதனால் தான் எளிதாக அகற்றிவிடக்கூடிய குறைகளை பெரும் பெருமைகளாக எண்ணிக்கொண்டு வேலை தேடும் தருணங்களில் அவமானப்பட்டு கூனிக்குறுகும் வேலையில்லாப்     பட்டதாரிகள் பெரும் திரளாக   வலம் வருகின்றனர்

கேள்விஞானம் தரும் மற்றுமோர் லாபம், முதியோர் பல எளிய மற்றும் நினைவில் கொள்ளத்தக்க வழிமுறைகளை சொல்லிக்கொடுத்து அதன் மூலம் பல தகவல்களை மனதில் பதிய வைக்கும் முறைகளையும் விளக்குவர். இதன் ஒரு பகுதிதான் நிமோனிக்ஸ் என்னும் சூத்திரம் போன்ற வாசகம்.  ,அதன் சொல்வரிசையை கொண்டு பிற தகவல்களை கோர்வையாக தேர்வு எழுத உதவும்.. இவை அனுபவ ரீதியாக நெடுநாட்களாக கல்வி அறிவை வழங்கும் முறைகள். முதிர்ந்த அனுபவஸ்தர் உதவியால் , இது போன்ற செயல் முறைகளை அறிந்துகொண்டால் நினைவாற்றல் பெருகும், மனனம் செய்யும் அவலம் குறையும். கேள்விஞானம் தரும் முக்கிய பலன் களில் இது பெரும் கொடை எனில் மிகை அல்ல .

No comments:

Post a Comment

LIFE –AN ENIGMA

  LIFE –AN ENIGMA Life at large means seeking peace and coexistence, though bemused by vicissitudes of human vagaries. The labyrinth of co...