Sunday, October 12, 2025

BOOK CHOICE -3

 BOOK CHOICE -3

நூல் தேர்வு -3

ISBN – EXPLAIN

இப்படி ஒரு வினா சென்ற பதிவின் விளைவாக வாசகர் ஒருவர் எழுப்பியிருந்தார் INTERNATIONAL STANDARD  BOOK NUMBER என்பதே ISBN. அந்தக்குறியீடு வாங்க பல நிபந்தனைகள், விளக்கங்கங்கள் உறுதிமொழிகள் என கட்டுப்பாடுகள் உண்டு;தேர்ந்த பதிப்பாளர்கள் அவற்றை ஈடேற்ற முடியும் என்று நம்பிக்கை கொண்டால் மட்டுமே நூலை வெளியிட ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

தனி நபர் எனில் அந்த நிபந்தனைகளுக்கு தேவையான ஆதாரங்களையும் பரிந்துரைகளையும் பெற்று படிவங்களை பூர்த்தி செய்து நூல் வெளியிட வேண்டி வரும். சிலர் போலியாக ISBN என்று ஏதோ ஒரு நம்பரை அச்சிட்டு ஏமாற்றுவர். மேலும் முறையான ISBN எனில் அதனுடன் வரும் பார் கோட் [BAR CODE ] பகுதியை ஸ்கேன் செய்தால் உண்மை விளங்கும். முன்னாளில் [சுமார் 18-20 ஆண்டுகளுக்கு முன் ]  ISBN [10 எண்கள் ] இப்போதோ 13 எண்கள் ;இப்படி பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது முறையான ISBN ஏற்பாடு.

பதிப்பாளர்களுக்கு வியாபார நோக்கும் தேவையும் இருப்பதால் இவற்றை சரியாக நிர்வகிப்பர்.தனி நபர் இவற்றில் ஏமாறவும் வாய்ப்புண்டு.

Why Reference ?     

ரெபெரென்ஸ் என்பது அடிப்படை ஆதார சமர்ப்பணம். அதாவது "நானாக கற்பனையில் சொல்லவில்லை இந்த உண்மை இந்த பதிப்பில் இன்ன குறியீடுகளுடன் இன்னார் /இன்னின்னார் வழங்கியுள்ளனர் என்று மேற்கோள் காட்டுவது. இவ்வளவையும் நூலின் உடற் பகுதியில் [BODY OF  TEXT ] இடையிடையே கொடுத்தால் படிப்போருக்கு இடையூறு தோன்றும் மேலும் நூலின் பக்கங்கள் அதிகரித்து விடும். எனவே எழுதியவர் /ஆண்டு இவற்றை அடைப்புக்குறிக்குள் வெளியிடுவது நடை முறை.

ஒரு சில பதிப்பாளர்கள்,  அந்த ஆதாரத்தின் வரிசை எண்ணை அடைப்புக்குறிக்குள் வெளியிடுவர் [12, 43]. இது,  நூல் தெளிவாக தகவல் தருகிறது என்பதன் சான்று. இது இல்லாத நூல்கள் மேற்கோள் காட்டவோ உறுதியாக ஏற்றுக்கொள்ளவோ முடியாத சில உண்மைகளை குறிப்பிடும் போது, 'நம்பகத்தன்மை' [VERACITY] கேள்விக்குறியாகும்  ஆகவே, உயர் நிலைக்கல்வியில் Reference என்பது மிகவும் அவசியம். இவற்றை வலியுறுத்த வேண்டிய ஆசிரியர்களே , உயர் [ PG ] வகுப்புகளில் கூட இவற்றை விளக்கவோ விவாதிக்கவோ நேரம் ஒதுக்காமல் செயல் படுவது வருத்தத்திற்கு உரியது..

Why Bibliography ?                        

  எல்லா தகவல்களையும் REFER செய்துவிட்டு தான் எழுத வேண்டும் எனில் பல தகவல்களை பேசாமலே விட்டு விட வேண்டி வரும். ஏன் எனில் அடிப்படை தத்துவங்களைக்கூட நூல் ஆதாரம் கொண்டு விளக்க வேண்டியதில்லை. ஆனால் இவை குறித்த முக்கிய விவரங்கள் இன்னின்ன நூல்களில் காணலாம் [அதாவது இந்த நூல் பதிப்பிற்கு அவற்றை நேரடியாக பயன்படுத்திக்கொள்ள வில்லை எனினும் அவை வாசகரின் புரிதலுக்கு உதவும் என்பதால் மறைமுக மேற்கோள் போல இடம் பெற்ற நூல்களின் தொகுப்பு BIBLIOGHRAPHY என்ற தலைப்பில் வெளியிடுவார். புதிய பயில்வோர் BIBLIOGRAPHY ல் உள்ள சிலவற்றையாவது படித்துப்பயன் பெறட்டும் என்ற அளவில் வெளியிடப்படுகிறது. சொல்லப்போனால் BIBLIUOGRAPHY பட்டியல் வலுவான அடிப்படை தகவல் தேடுவோருக்கு பெரிதும் உதவும்.

Presenting Reference [s]                              

அறிவியல் நூல்களில் REFERENCE பகுதியை வடிவமைக்க 3 அல்லது 4 முறைகள் உண்டு . ஆனால் ஒரு நூலில் ஏதேனும் ஒரு முறை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் நூலின் உடல் அமைப்பு [BODY OF TEXT ] வடிவமைக்கப்பட வேண்டும்அவை குறித்து பின்னர் விரிவாகப்பார்ப்போம்

Quotes                                         

பல தருணங்களில் மிகவும் பிரசித்திபெற்ற வாசகங்களை சொல்ல QUOTE " " UNQUOTE குறியீட்டிற்குள் எழுதி சிறிய கோடிட்டு ஜவஹர்லால் நேரு, தாகூர் , சுப்ரமணிய பாரதி, ஷேக் ஸ்பியர் என்று பொருத்தமான பெயரை எழுதலாம். இவற்றிற்கு REFERENCE என்று விரிவான விளக்கம் தேவைப்படாது 

Definitions                                          

பலவாறான சட்ட திட்டங்கள் , விதிகள் இவற்றை DEFINITION என்ற வரையறைக்குள் சொல்வது மரபு. அவற்றை மூல வாசக அமைப்பிலேயே தெரிவிக்க வேண்டும் எந்த சொல்லையோ புள்ளியையோ மாற்றாமல் அப்படியே தெரிவிக்க வேண்டும். இவற்றை சிறு மற்றம் கூட இல்லாமல் தெரிவித்தல் மரபு அவை " " குறியீடு அல்லது சாய்வெழுத்துகளில் குறிப்பிடுவதுடன் அதன் ஆசிரியர் யார் என்பதையும் குறிப்பிட வேண்டும் .

Formulae :                       

வேதியல், கணிதம் போன்ற கல்வி முறைகளில் சூத்திரங்கள் இடம் பெரும். அவற்றை பாடத்தின் உடல் பகுதியிலேயே இடம் பெற வைத்தல் நலம் . தனியாக பிற்பகுதியில் அமைத்துப்பயனில்லை. இந்த வடிவமைப்புகள் முறையாக இருந்தால் அவை நல்ல தரமான நூல்கள். புத்தகம் வாங்கும் முன் இவற்றை உறுதி செய்துகொள்ளுங்கள். அச்சில் வந்ததெல்லாம் கல்விக்குரிய நூல்கள் அல்ல என்ற அடிப்படைதனை மறவாதீர்கள்

பிற தகவல்கள் பின்னர்

நன்றி

அன்பன்  ராமன்

No comments:

Post a Comment

BOOK CHOICE -3

  BOOK CHOICE -3 நூல் தேர்வு -3 ISBN – EXPLAIN இப்படி ஒரு வினா சென்ற பதிவின் விளைவாக வாசகர் ஒருவர் எழுப்பியிருந்தார் INTERN...