Monday, October 13, 2025

INDIA’s “PRALAY”

INDIA’s  “PRALAY”

இந்தியாவின்பிரளய்

சமீபத்திய இந்திய குடியரசு தின விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட பிரம்மாண்டம் இந்த ஏவு கணை --பெயர்  பிரளய்

 அதாவது பிரளயம் என புரிந்து கொள்க. இது ஒரு ballistic  missile வகை வடிவமைப்பு . கொடூரமாகத்தாக்கும் திறன் மற்றும் பல வகை ஆயுதங்களை [அணு ஆயுதம் உள்ளிட்ட] சுமந்து சென்று இலக்கை தாக்கி இல்லாமல் செய்யும் வீரியம் கொண்டது.

இப்போது இது மற்றுமோர் உலக பிரமிப்பு எனில் உங்களுக்கு புரியும். இது வெறும் துவக்கம் தானாம்; இன்னும் பிற வடிவங்கள் பிறவி எடுத்துக்கொண்டிருக்கின்றன. இவ்வளவு ஏன் ? இதன் திறன் குறித்த தகவல்கள் வெளியானதும் எனக்கு உனக்கு என்று கோரிக்கை வைக்கும் நாடுகள் அநேகம் எகிப்து இதற்கான ஆர்டர் என்னும் பூர்வாங்க கடிதத்தை சமர்ப்பித்துவிட்டதாக  அறிவிப்புகள் உண்டு.

இது எப்படி பிரம்மாண்டம் --எனில், உருவில், உக்கிரத்தில், வேகத்தில்  மற்றும் சாகசத்தில் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் . இந்த வகை ஏவுகணை அமைப்புகளை மூன்று வகையாக விளக்குகிறார்கள்    [a ]குறுகிய எல்லை,  [b ]மித வகை மற்றும் [c ] நெடுந்தூர வியாபகம் எனலாம் [a ] வகை 1000 கிலோமீட்டருக்கு குறைந்த அளவில் செயல் படுவது , [b ] வகை 3000 கி மி, அதற்கும் மேல் ,[c ] வகை 5500 --6000 கி மி வரை விரைந்து செல்லும். பிரளய் இன் வேகம் மணிக்கு 7500 கிமி. மின்னல் வேகம் என்பது போல் பாயும்.               

 வெகு தூரம் சென்று தாக்கும்  ஏவுகணைகள் ICBM எனப்படும் INTERCONTINENTAL  BALLISTIC MISSILE எனும் கண்டம் தாண்டி சென்று இலக்கை அழிக்கும் துல்லியம் கொண்டவை .அதிலும்   பிரளய் QUASI அமைப்பு கொண்டது . அதாவது போக்கு காட்டி ஏமாற்றுவது [கண்ணில் மண்ணைத்தூவுவது] எதிரியின் ANTI MISSILE அமைப்புகளை ஏமாற்றி தப்பிப்பதோடு, இலக்கை குறி தவறாமல் எப்படியாவது அழித்துவிடும் 'மதி நுட்ப' அமைப்பு கொண்டது. நம்ப முடிகிறதா ?  ஆகாஷ் ஏவுகணை குறித்து திரு ப்ரஹ்லாதராம ராவ்     சொன்னாரே , குதிக்கும், கூத்தாடும், குனிந்து நிமிர்ந்து வளைந்து நெளிந்து எப்படியும் இலக்கை , பிசகாமல் தாக்கும் என்று. அதே விததையின் விரிவாக்கம் தான் பிரளய்.

பிற ஏவுகணைகள் செங்குத்தாக பாய்ந்து சென்று பின்னர் TRAJECTORY என்ற பாதையை பின்பற்றி இலக்கை அழிக்கும். இந்த பிரளய்  வகை ஏவுகணைகள் இயக்கம் வெலகம் ஆர்ச் [WELCOME ARCH ] போல தமிழ் எழுத்து ' '  வை கவிழ்த்தது போல் நிகழும்.                            1] மேல்நோக்கி ப்பாய்ந்து, 2 ]குறுக்கில் திரும்பி இலக்குக்கு வேண்டிய தூரம் சென்று 3 ] அங்கிருந்து கீழே பாய்ந்து வெடிபொரு ளை மொத்தமாக இலக்கின் மீது பயங்கர வேகத்தில் பாய்ச்சி முற்றாக அழித்து ஒழித்து விடும். 500கிலோ முதல் 1000 கிலோ வெடிபொருள்களை எடுத்துச்செல்வதால் பேராபத்தை விளைவிக்கும்.     PENETRATION -CUM -BLAST வகை

வலுவான கட்டிடங்கள் பங்கர் [BUNKER ] இவற்றை துளைத்து உள்ளே சென்று பின்னர் வெடிப்பதால் எவரும் பிழைக்கவோ ஓடவோ இயலாது , பெருத்த சேதம் உண்டாக்கும் குறிப்பாக தீவிர வாத குழுக்கள் பதுங்கும் இடங்களை அழித்தொழிக்க உகந்தது.

RUNWAY DAMAGE MISSILE

போர் விமான ஓடுபாதையை சீர் குலை த்து  எதிரியின் விமானப்படை மற்றும் விமான கிடங்குகளை அழிக்கும். பல வகை குண்டுகளை ஓடுபாதையில் வீசி போர் விமானங்கள் வெளியே வர இயலாத நிலையை உருவாக்கும்

HIGH RANGE DAMAGE

கட்டிடங்களை அழிக்காமல், உள்ளே இருக்கும் மனிதர்களை நச்சு புகை மற்றும் நரம்பு முடக்கம் செய்யும் ரசாயனப்பொருட்களை உபயோகித்து  முடக்குவது .

இவ்வளவு பராக்கிரமம் கொண்ட 'பிரளய்' வாங்க பலரும் முனைவதில்லை வியப்பென்ன?

இவ்வளவு விவரங்களையும் அதற்கு மேலும் திரு ஆசிர் விளக்குகிறார். கவனித்துக்கேளுங்கள் இணைப்பு இதோ

Pralaay Ballistic item india AASIR SAMUEL  India's Ballestic and Quasi Pralay Missiles,is special about 7500 km per hour speed,1000kg explosive - YouTube 

*************************************************************************************

No comments:

Post a Comment

INDIA’s “PRALAY”

INDIA’s   “PRALAY” இந்தியாவின் “ பிரளய் ” சமீபத்திய இந்திய குடியரசு தின விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட பிரம்மாண்டம் இந்த ஏவு கணை ...