Monday, November 10, 2025

S I R and PARAONIA

 S I R  and PARAONIA

எஸ் ஆர் ம் பீதியும்

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் [ S I R ]  சிலரை கதிகலங்க வைக்கிறதென்பதை  நாம் அறிவோம்

அது ஒரு புறம் இருக்க அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல யாரையாவது சார் என்றைழைத்தால் கூட S I R என்பதைத்தான் சார் என்று ஆரம்பித்து ஏதோ சொல்லப்போகிறோமோ என்று நடுங்கும் அரசியல் நபர்கள் ஒருபுறம் கதறிக்கொண்டிருக்க, போராட்டம் நடத்துவோம் கோர்ட்டுக்கு போவோம் என்றுமறுபுறம்  குரல் கொடுப்பது அன்றாட நிகழ்வு

சரி, சுமார் 10 -15 தினங்களுக்கு முன்பு இந்திய வடகிழக்கு எல்லையில் , இரவு நேரத்தில் இந்தியாவிலிருந்து தப்பி ஓட முயன்ற பலர் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் இந்தியர்கள் அல்லர். மாறாக பங்களா தேசத்தவர்கள்.

அவர்கள் மிரண்டு கதிகலங்கி ஓடியதேன்

வேறென்ன    S  I  R பற்றிய கிலி தான்.  

யூ-ட்யூபில் சிலர் யாரையாவது நோகடிக்க வேண்டுமென்றால் இப்படி எழுதுகிறார்கள். "எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது -இப்போதவல்லவா புரிகிறது" 

அது இப்படி ஓடுபவர்களுக்கும் பொருத்தமே 

இவர்களைப்போல சட்ட விரோதமாக அண்டை நாட்டில் இருந்து ஊடுருவி வந்து அனைத்து சலுகைகளையும், ரேஷன், கல்வி, மருத்துவம் மற்றும் கூலி வேலை அல்லது வியாபாரம் என சொந்த நாட்டைவிட    வந்த நாட்டில் சுக வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு திடீரென்று வாக்காளர் கணக்கெடுப்பு  என்றால் பயமும் நடுக்கமும்  இயல்பு தானே

அன்றிரவில் பிடிபட்டவர்களிடம் சுமார் Rs 55 லட்சம் பெறுமான தங்கம், பணம் மற்றும் 14 1/2 லட்சம் பங்களா தேச ரூபாய் என பல விவரங்கள். இவர்கள் இங்கு சம்பாதித்து தங்கள் நாட்டிற்கு 'ஹவாலா' முறையில் பணம் அனுப்புவது , ஏதாவது வாய்ப்புக்கிடைத்தால் கலவரம் செய்வது மட்டுமல்ல இந்தியாவில் சொத்து, சுகம் ஆதார் உரிமம், வாக்காளர் அட்டை அனைத்தையும் கொல்லைப்புற முறைகளில் பெற்று வாழ்ந்த வாழ்விற்கு , சிறை வாசம் பரிசாகக்கிடைக்கும்  -S  I  R  துல்லியமாக நடைபெற்றதும் என்று அறிந்தே இரவோடிரவாக ஓட முயற்சிக்க இந்திய எல்லைக்காவல்[BORDER SECURITY FORCE] படையினரால் சுட்டு பிடிக்கப்பட்டனர். இவர்களால் பிற நாட்டின் இறையாண்மைக்கு ஊறு  விளையாது என நம்ப முடியுமா?

ஆனாலும் இந்திய அரசியல்வாதிகள் சிலர் புலம்புவது,இதுபோன்ற ஊடுருவல் வாதிகளின் ஓட்டுகள் முடக்கப்படுமே என்ற கவலை யினால் தான்  இப்படிப்பட்ட கள்ள ஓட்டுகளைத்தான் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு .  முறைப்படுத்தி போலி வாக்குகளை அகற்ற முயலுகிறது. இது குறித்து திரு பாலகுமார் சோமு விளக்கமாக பேசியுள்ளார். கேட்டு உணர இணைப்பு கீழே 

ARMY’S VALOUR https://www.youtube.com/watch?v=WVMVP15jY8s BKSOMU

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. ஆயிரக்கணக்கான மக்கள் வங்க தேசம் திரும்பும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வலம் வருகின்றன.

    ReplyDelete

GINGER

  GINGER Ginger has a global value for its utility as a spice and also as a medicinal supplement in alleviating digestive disorders, slugg...