Sunday, November 9, 2025

VEENA – A DIVINITY BY ITSEF

 VEENA – A DIVINITY BY ITSEF

வீணை --அதுவே ஒரு தெய்வீகம்

கல்வி பற்றி எழுத முற்பட்டால் கல்லெறி நிச்சயம். அந்த அளவுக்கு எழுதியாயிற்று

கல்வி குறித்து.இனி எழுதினால், படிக்க மாட்டார்கள். இப்போது மட்டும் என்ன- படிக்கிறார்களா என்ன என்கிறீர்களா?

அவர்களுக்கே தெரியாத ஒன்றை நான் எப்படி விளக்கவோ விளங்கிக்கொள்ளவோ இயலும். அதனால் கல்வி பற்றி எழுதவேண்டாம் என்றே தோன்றுகிறது .

ஆஹா கல்வியில் கரை கண்டா யிற்றா எனில் நீங்காத கறை அடைந்தது தான் சாதனை. எனவே பள்ளிக்கல்வி, கல்லூரி/பல்கலை கல்வி என எதை நினைத்தாலும் ஆவது என்ன ?  ஒன்றுமில்லை

அதே மார்க் மார்க் என்ற ஸ்மரணை.

எஞ்சினீரிங்  cut  off  . எவ்வளவு என்ற கவலை அல்லது ஐயோ  நீட் உண்டா என்று சோகத்தில் அலையும் கூட்டம் என்ன சொல்லியும் திருந்தப்போவதில்லை.

போய்யா கிடாரிப்பட்டி முத்து ப்பேச்சி எஞ்சினீரிங் காலேஜில் பையனை பி.டெக் , பயோடெக் கோர்ஸில் சேர்த்துவிட்டேன் 2031ல் ஹிந்துஸ்தான் pharma வில் Elisa டிவிஷனில் வேலை நிச்சயமாம் கைநிறைய சம்பளமாம் ப்ரின்ஸ்பால் சசிவர்ணம் ப்ராமிஸ் பண்ணிருக்கார் ஒய் என்று கற்பனைக்கு எட்டாத உயரத்தில் மிதக்கும் சமுதாயம்

.அனந்துக்கு நல்ல மார்க் அதுனால உடனே சேத்துண்டுட்டார் ப்ரின்ஸ்பால் என்று தாயாரின் உவகை [தந்தைமனதில் உறுத்தல் -கிடாரிப்பட்டியே வேறொன்றுமில்லை மட்டுமல்லவேறெங்கும் இடமில்லை பிள்ளையாண்டானுக்கு].

மாமா பிள்ளைக்கு ஸ்டான்லியில் கிடைத்துவிட்டதாமே என்று ஒருவர் பற்ற வைக்க அனந்துவின் தந்தைக்கு ஆத்திரம் அது ஒன்னும் மெடிக்கல் இல்ல , ஸ்டான்லினு  ஒருத்தர் இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பிச்சிருக்கார் தீவுத்திடல்ல ஷெட் போட்டு காலேஜ் ஆரம்பிச்சிருக்கு.

அதுக்கு முத்துப்பேச்சி எவ்வளவோ பரவா இல்லை என்று படுகுழியில் விழுந்தாலும் வீராப்புக்கு பஞ்சமில்லை.

நீ என்ன கத்தினாலும் நோட்ஸ், ட்யூஷன் எஞ்சினீரிங் இதுவே தாரக மந்திரம் நம் மக்களுக்கு.

உனக்கு என்னய்யா தெரியும் போய் யா   என்பார்கள்.

இதற்கு மேலும் கல்வி என்று கிளம்பினால் கீழ்ப்பாக்கம் போக வேண்டிய நிலை வரும்.

எவன் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று முனிவன் போல் பற்றற்ற நிலை நோக்கி பயணிப்போம். அதற்கு இறையருள் தேவை.

அதைப்பெற அமைதியும் பக்தியும் தேவை. அதைத்தரவல்ல ஒரு உத்தி தான் வீணை.

வீணை பேசும் என்றொரு பாடல் உண்டு -அது பேசுவது இருக்கட்டும் நாம் பேசுவோம். ஆம் வீணையைப்பற்றித்தான் . விரும்பாதவர்கள் விலகிப்போகலாம் .அது அவர்கள் உரிமை .

விரைவில் வீணை ஒலிக்கும்

நன்றி            அன்பன் ராமன்

.  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

No comments:

Post a Comment

VEENA – A DIVINITY BY ITSEF

  VEENA – A DIVINITY BY ITSEF வீணை -- அதுவே ஒரு தெய்வீகம் கல்வி பற்றி எழுத முற்பட்டால் கல்லெறி நிச்சயம் . அந்த அளவுக்கு எழுதிய...