THE POT -A GLOBAL DELIGHT
பூமியை
வலம்
வரும்
மண்
பாண்டம்
என்னது மண்பாண்டமா ? என்று யாரும் வியப்போ விசனமோ கொள்ள வேண்டாம். ஆம் நாம் இப்போது சந்திக்க இருப்பது கடம் என்ற பானையைப்பற்றி தான். அட போய்யா கடப்பானையில் என்ன பெரிய விஷயம் இருக்கும் என்று ஏளன முறுவல் பூக்கும் நண்பர்களே , நீங்கள் [என்னையும் சேர்த்துதான் ] நினைத்திராத தகவல் மற்றும் வரலாற்று பொக்கிஷம் தான் -கடம் என்றறியப்படும் இந்த மண் பானை. உலகெங்கும் புகழ்பெற்ற இந்த பணி மற்றும் பானை இரண்டின் தாய் மண் -மானாமதுரை என்ற சிற்றூரே. இது ராமநாதபுர மாவட்டத்தின் ஒரு சில சிறப்புமிக்க ஊர்களில் ஒன்று.. அப்படி என்ன சிறப்பு ?
ஸ்ரீரங்கம் ஒரு தீவு என்றால் மானாமதுரை இரு கூறாகப்பிளக்கப்பட்ட
ஊர்.
பிளப்பது
வைகை
நதி
. நதியின்
இரு
கரைகளிலும்
இருக்கும்
பகுதிகளே மானாமதுரை.. இரு பகுதிமக்களும் எதிர்ப்புறம் இருக்கும் பகுதிகளை பொது மக்கள் மிகுந்த அக்கறை யுடன் அக்கரை மக்கள் என்று அடையாளப்படுத்துவர்.
கடம்
செய்ய
வைகை
படுகை
சார்ந்த
பகுதிகளில்
எடுக்கப்படும்
மண்
மிகச்சிறந்தது
என்றே
வலிமையாக
உலகெங்கணும்
உணரப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல சுமார் ஒரு ஆண்டுகாலத்தேவைக்கு வேண்டிய மண்ணை சேமித்துவைத்துக்கொள்வார்களாம் [RAW MATERIAL PROCUREMENT]
மேலும்
பானை
வடிவமைப்பில்
5 மண் வகைகளை முறையான விகிதத்தில்
கலக்க
வேண்டுமாம்.
இந்த
மண்
வகைகளின்
விகிதம்,
பதம்
இரண்டும்
பானையின்
நாதத்திற்கு
அடிப்படை. இந்த நாத வெளிப்பாடு மண்ணின் தன்மை என்பதால் இந்தக்கலவையை முறையான பக்குவத்தில் உருவாக்கி, முறையாக பாதுகாத்து வடிவமைத்து. தீயில் சுட்டு வலுப்படுத்தினால் தான் பானைக்கு ஆயுள். அது மட்டுமல்ல இதில் பேசப்படும் ஒரு மண் வகை இரும்புத்தாது கொண்டதாம். அதன் விகிதம் தான் பானையின் கணீர் ஒலி க்கு ஆதாரம்.. அது மட்டுமல்ல பானையின் உடலெங்கும் சுவற்றின் கனம் [WALL THICKNESS] ஒரே சீராக
[UNIFORM ] இருப்பது அவசியம். இல்லையே ல் சுருதி சுத்தம் தகர்ந்து கட வித்துவான்
மார்க்கெட் நாசமாகும். இத்தனை நிபந்தனைகளையும் ஒன்று கூட பிசகாமல்
வடிவமைக்கும் மனித கைகளின் உரிமையாளர் திரு ரமேஷ் [50] அவர்கள் கடம் செய்வதில் 40+
ஆண்டு
அனுபவம்
[9 வயது
முதல்
இதே
தொழில்]
சுமார்
120 ஆண்டுகால
குலத்தொழில்
கடம்
தயாரிப்பது.
உலகெ
ங்கும்
விரவிக்கிடக்கும் கடவித்தவான்கள் அவ்வப்போது படையெடுக்கும் ஊர் மானாமதுரை மற்றும் அங்கு
உள்ள
திருரமேஷ்
அவர்களின்
தொழிற்கூடம்
தான். தமிழகத்தின் பெருமை மிக்க கடவித்வான் திரு விக்கு விநாயக்ராம் 3 தலைமுறைகளாக கடம் வாங்குவது திரு ரமேஷ் அவர்களிடம் தான். கட வித்துவான் களுக்கு இணையான நாத ஞானம் திரு ரமேஷ் அவர்களுக்கும்
இருப்பதால் ஒவ்வொரு கட கலைஞருக்கும் தேவையான நாதஸ்வரூபங்களும், TONE எனும் ஒலி அதிர்வுக்கு தேவையான மண் கலவை , பதம், சுட்டு வலிமை ஆக்குவது மற்றும் பானையின் வடிவமைப்பு இவற்றில் சிறப்பான கவனம் செலுத்து வதால் பெரும் மதிப்புக்கும்
மரியாதைக்கும்
உரியவராக
அனைத்து
இசைக்கலைகனர்களும் இவரின் ஒத்துழைப்பே தங்களுக்கு உரிய தொழில் பாதுகாப்பு என்று உணர்ந்துள்ளனர். பானையின் தோள் பகுதி, கழுத்தின் உயரம், வாயின் அளவு இவற்றால் பானையின் த்வனி வேறுபடும். 12 ஸ்கேல் வகைகளின் எப்போதும் கடம் தயார் நிலை யில் வைத்துள்ளார் திரு ரமேஷ் அவர்கள். அவர் சொல்வது எவ்வளவு முயன்றும் 100% சுத்தமாக கடம் தயாரிக்க இயலவில்லை தற்போது 60% அளவிற்கே வெற்றி எட்டியுள்ளோம்
என்கிறார் மேலும் ஒவ்வொரு கடமும் ஒலிஅதிர்வில் 2, 21/2 கட்டை என்பதை விரலால் தட்டி அடையாளம் சொல்கிறார் திரு ரமேஷ் அவர்கள். இந்த கலை நசித்துப்போகாமல் இருக்க அரசினர் உதவி இருந்தால் நன்கு இருக்கும் எங்கிறார்.. இவரது பட்டறை எளிமையான நாட்டுப்புற இல்லம் தான் ஆயினும் இந்திய ஜனாதிபதியின் விருது பெற்றவர் திரு ரமேஷ் அவர்களின் தாய் என்பது பெருமை தரும் செய்தி அல்லவா?
விடியோவை ஆழ்ந்து
கவனித்து அறிய தகவல்களை உணரலாம்.