Monday, December 29, 2025

PIANO GALORE

 PIANO GALORE

பியானோ வியாபக இசை

தமிழ் சினிமாவில் அவ்வப்போது பியானோ பயன் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது போன்ற பாடல்கள் பெருமளவில் களம் கண்டது திரு எம் எஸ் வி யின் கை  ஓங்கியிருந்த காலகட்டத்தில் தான் என்றே நம்புகிறேன்.  எப்படி கோரஸ் வைக்க தயங்காமல் செயல்பட்டாரோ, அப்படித்தான் அவர் பியானோவை பாடல்களில் அமைத்திருந்தார் என்பது எனது புரிதல்.  பியானோ பயன்படுத்துவது பெரிய வித்தையா /விந்தையா? என்று சிலர் நினைக்கலாம்.

அப்படி எல்லாம் கண்டபடி பியானோ இசைத்துவிட்டால் பாடல் ஆகிவிடாது. பாடலின் அடிப்படை ட்யூன் என்னும் 'ராகப்பயணம்' பியானோவுக்கு இசைவும் இடமு ம் கொடுக்கும் .உடல் அமைப்பு கொண்டிருந்தால்  பியானோ  வின் தாக்கம் வலுவானதாக இருக்கும். வலுவான தாக்கம் தராத எந்த கருவியையும் இசைத்து பயனில்லை     

துருவி ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும்

அது பாரம்பரிய தென்னிந்திய இசைக்கருவிகளுடன் ட்ரம், போங்கோ, தபலா ,டோலக், பக்வாஜ் ,ட்ரிபிள் காங்கோ மற்றும் நரம்பு கருவிகள்சித்தார் , சரோட் , மாண்டலின் , கிட்டார் , ஹவாயன் கிட்டார் , வீட்டு உபயோக பயன் களாக ரம்பம், சீப்பு, பால் கேன் , கொட்டாங்கச்சி இவற்றின் ஒலிகளை சரியான இடத்தில் பாடல்களுக்கு பயன் படுத்தி பெரும் வெற்றி ஈட்டி அதை தங்களின் தனி முத்திரை ஆக்கி "மெல்லிசை மன்னர்கள்" என்ற அங்கீகாரத்தை வென்றெடுத்தார்கள் என்பது மறைக்கவொண்ணாத வரலாறு. இவ்வளவு கவனம் செலுத்தியோர், பியானோவை விட்டுவிடுவார்களா என்ன? அது மட்டுமல்ல, பியானோ ஏதோ பிறந்த நாள் , கொண்டாட்டம் நிச்சயதார்த்தம் என்ற குதூகலங்களுக்கே என்பதை தகர்த்து சோகத்துக்கும் , சுகத்துக்கும் பியானோவை சர்வ வல்லமையுடன் கையாண்டனர் ;அதிலும் திரு எம் எஸ் வி அவர்கள் பியானோவை களமிறக் கிய   சூழல்கள் சாதாரண மன எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. இது குறித்து முறையான பாடல்களின் உதவியோடு பேசுவோம். அப்போது தெரியும் மன்னர் ஏன் மன்னர் என்பது.  பியானோ ஒரு மேலைநாட்டு க்கருவி. மேலையாவது கீழையாவது -இசைதான் மேலானது என்று தமிழ் திரைப்பாடல்களை பியானோ இசையால் வளப்படுத்தியவர் எம் எஸ் வி.

1960 களிலேயே பியானோவை கம்பீரமாக பயன்படுத்தும் வித்தகம் இதோ பாசமலர் படத்தின் "பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் [கண்ணதாசன் ], விஸ்வநாதன்-ராமமூர்த்தி , குரல் ஜமுனா ராணி. பாடலில் குதூகலத்தைப்பாருங்கள் 

பாடல் நெடுகிலும் கண்ணதாசனின் சொல்லாடல் அதுவும் ஒவ்வொரு வாசகத்தையும் இல்லை என்று மறுதலிக்கும் இரண்டாம் வரி , எல்லா மறுதலிப்புக்கும் உண்மை நிலை என்னவோ 'உண்டு' என்பதுதானே. இப்படி ஒரு வித்யாசமான பாடல். பாடலின் ஒட்டம் குதூகலிப்பின் வெளிப்பாடு, எனவே பியானோவும் துள்ளியோட , பியானோவுக்கு ஜோடி தபலா. மேற்கும் கிழக்கும் சுருதி-லய ஜோடி. FUSION என்பதன் ஒரு படி நிலை தான். இது.

 பின்னர் வந்த சமீப FUSION சில வெறும் CONFUSION தான். "பாட்டொன்று கேட்டேன்" பாடலை ரசிக்க இணைப்பு இதோ    

https://www.youtube.com/watch?v=qxGn9eBhySo

PAATTONRUKETTEN PASAMAALAR JAMUNA RANI KD VR 1962

குதூகலிக்க தான் பியானோவா , ஏன் விரக்தியின் விளிம்பிலும் பியானோ உதவுமே என்ற இசை அமைப்பு இப்பாடல் . பிறர்க்கெனவே வாழ்ந்து துயர்கண்ட நாயகன் விரக்தியில் பேசுகிறான்

மனிதன் என்பவன் [சுமை தாங்கி -1963] கண்ணதாசன் , விஸ்வநாதன்-ராமமூர்த் தி -குரல் பி பி ஸ்ரீநிவாஸ்

பாடலின் துவக்கமே பியானோவிலு ம் விரக்தியிலும்  தான். ஆனால் பியானோ ஒலியில்  பாடல் மிதக்க பல்லவி காற்றை வியாபிக்க வெறும் பியானோ தாளமில்லாமல் பாடலை சுமக்க , சரணத்தின் உயிர்ப்பே தபாலாவில் தான். பல்லவிக்கு பியானோவும் அதன் துயரத்தை மேலும் உயர்த்த சரோட்  , வயிற்றை பிசைய சோகம் பீறிட்டாலும் நாயகன் மனமோ மனித மனம் , குணம் இரண்டையும் கோயிலாக்கி அமைதி நாடி கட ற்கரை இரவில் சஞ்சரிக்க காட்சியில் இருக்கும் 7 கார்களும் கவிஞர் கண்ணதாசனின் கார்கள். வேறு ஒளி உமிழ்வு இல்லாமல் படமாக்கிய வின்சென்ட்-சுந்தரம், இயக்கிய ஸ்ரீதர் அனைவரையும் மனக்கண்ணில் தரிசிக்கிறேன். பாடலுக்கு இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY&t=6s MANIDHAN ENBAVAN SUMAI THAANGI 1963, KD V R PBS

இளமையின் வசீகரத்தையும் துள்ளலையும் , ஏன் நடன அசைவுகளையும் பியானோ வலுவூட்டுமே என்ற           

 கூற்றுக்கு  வலுசேர்த்த பியானோவும் அதன் நேர்த்தியும்

மலரென்ற முகம் ஒன்று [காதலிக்க நேரமில்லை 1964] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , குரல்கள் எல் ஆர் ஈஸ்வரி , எம் எஸ் ராஜு [மாண்டலின் ராஜு].

இப்பாடல் முழுவதிலும் ஆதிக்கம் பியானோ மற்றும் ட்ரம். துவக்கமே பியானோவின் சுறுசுறுப்பான இசையுடன் தான் ஈஸ்வரியை விளக்கி விளங்கிக்கொள்ள இயலுமா. பாடலின் சுவைக்கு மெருகு ஏற்றிய ராஜுவின் யூயூக்லிங் குரல் மற்றும் நாகேஷின் நடனம்   .முதுமை வேடத்தை மறந்து இளமையின் பீடிப்பில் உட்கார்ந்தபடியே செல்வச்செழுப்பில் உடலசைக்கும் முத்துராமன் என பாடல் இலகுவாக வெற்றிகண்டதை மறக்க இயலுமா? பாடலுக்கு இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=6N-VVp96-Yc MALARENDRA MUGAM K.NERAMILLAI 1964 , KD , V R LRE , MS RAAKU

பியானோவின் பயணம் தொடரும்

அன்பன் ராமன்

******************************************************

No comments:

Post a Comment

PIANO GALORE

  PIANO GALORE பியானோ வியாபக இசை தமிழ் சினிமாவில் அவ்வப்போது பியானோ பயன் படுத்தப்பட்டுள்ளது . ஆனால் அது போன்ற பாடல்கள் பெரும...